மனிதமனங்களின் நிலை

 மனித மனங்களின் நிலை: 


"உலகம் பிறந்தது எனக்காக, 

ஓடும் நதிகளும் எனக்காக,

மலர்கள் மலர்ந்ததும் எனக்காக,  

அன்னை மடியை விரித்தால் எனக்காக" என சில மனம்.


" கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள், துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்" என ஒப்பாரி வைக்கும் சில மனங்கள்.


இவற்றிற்கு நடுவே "உன்னையறிந்தால் , நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்" என்ற மனம்


 "நீ யார்?"


" உன்னுடைய வல்லமை என்ன?


"உன் மனதின் முழு சக்தி என்ன?


"நீ ஏன், எதற்காக பூமிக்கு வந்தாய்?"


"உன்னுடைய வாழ்வின் நோக்கம் தான் என்ன?


" ஓவ்வொரு மனித மனத்தின் முடிவான ஆசை என்ன?"


மனிதன் பிரபஞ்ச இயக்க ஆற்றலை ஒருங்கே கொண்டு , உணர்வு என்ற நிலை யை அனுபவிக்கப் பிறந்த மகா பிரபஞ்சத்தின் தனித்தனி வடிவாய் பூமியில் பிறக்கிறான்.


அவன் அனுபவிக்கும் முதல் உணர்வு ஆனந்தமாகும்.


ஆம் ஆணும் பெண்ணும் சம்யோகம் செய்யும் வேலையில் பூரண உணர்வெய்தி ஆணின் உடலில் விந்தாய் மாறி, பெண்ணின் கருக்குழாயில் தெறிக்கும் சமயம் ஏற்படும் உணர்வு ஆனந்தம். 

அதை விந்து என்ற உயிர்பொருள் முதன்முதலாக அனுபவிப்பதால் எல்லா ஜீவராசிகளும் கற்றுக் கொள்ளாமலேயே சம்யோகத்தின் மீது நாட்டம் கொண்டுள்ளன.


இந்த ஆனந்தத்தை அனுபவிக்க எதிர்பாலினம் என்ற தேவை ஏற்படுவதால் இனக்கவர்ச்சி ஏற்படுகிறது.


இதற்கு தடையில்லாமல் இருக்கும்வரை மனிதனென்று அபிமானிக்கிறவர்கள் யாதொரு பிரச்னைகளையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. 


பிறகு ஏற்பட்ட சமூகம், கொள்கைகள், கட்டுப்பாடுகள் மனிதனுக்கு போராடும் உணர்வை தந்தது.


இந்த போராட்டகுணம் அவனுக்கு மேலும், மேலும் கடுமையான போராட்டங்கள் வாழ்வில் ஏற்பட ஏதுவாய் அமைந்தது.


ஆம் நாம் எதை கண்டு பயப்படுகிறோமோ அதுவே நமக்கு வாழ்வாக அமையும். 


நம்முடைய மனித சமுதாயம் ஆனந்தத்தை மட்டுமே நினைத்திருந்தால் ஆனந்தம் என்பது வாழ்வாக அமைந்திருக்கும்.


போராட்டங்களையும், தன் அதிகாரங்களையும் தன்மேல், தன் சமூகத்தின் மேல் திணித்ததால் இன்று வாழ்வே ஒரு போராட்டக்களமாக மாறி நிற்கிறது.


இதிலே வெற்றிபெற எடுக்கும் முயற்சிகளால் மனிதவாழ்வின் காலம் முடிவடைந்துவிடுகிறது.


மன அமைதியின்மை என்பது மனநிறைவை ஏற்படுத்த இயலாமையால் , மனிதன் இறந்த பிறகு மறு பிறப்பாக ஏற்படுகிறது.


எனவே வெறும் துன்பங்களையே நினைத்து வாடுபவர்களால் ஒருக்காலும் இன்பத்தை நுகரமுடியாது.


எனவேதான் எதைப்பற்றியும் கவலைப்படாத மனிதர்கள் சந்தோசமாக வாழ்கின்றனர். இதன்மூலம் அவர்களுக்கு சிலசமயங்களில் ஞானவாழ்வும் கிட்டுகிறது.


இதை விடுத்து என்னவோ நாமே இந்த உலகை தூக்கிச்சுமக்கிறோம் என்ற உணர்வில் சிலர் எல்லா பிரச்னைகளையும் தன்மேல் சுமந்து கொண்டு , சுயபச்சாதாபத்தால் மனம் நொந்து, வெந்து மடிகின்றனர்.


ஒவ்வொரு ஜீவராசிகளும் தனித்தன்மையை உடையவை.


ஒவ்வொரு மனிதனும் மிக, மிக திறமை வாய்ந்தவன்.


அவர்களை அவர்களின் வழியே செல்லவிட்டு அவர்களின் முழு திறமையையும் அவனை அடையச் செய்வது நம் கடமையாகும்.


மாறாக குஞ்சு முற்றாத முட்டையை, நான்  பொறிக்க உதவுகிறேன் என்ற பெயரில் முட்டையை நாம் உடைத்தால் முட்டை வீணாகும் குஞ்சும் சாகும். நாம் நாமாக இருக்க உதவும் கல்வியை கற்று வாழ்வோம்... உய்வோம்...


இறைஉணர்வோன் சங்கர்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி