விதியை மதியால் வெல்
"விதியை மதியால் வெல்வது"
உள்ளிலே சதாகாலமும் ஓடிக்கொண்டிருக்கும் ஜீவசக்தியாகிய "திரு" என்கிற இறைசக்தி வெளியில் விட்டு ("வி") மாளும் "விட்ட திரு" வாகிய விதியை, ஊர்த்துவகதியாகிய சித்தவித்தையை மனம் என்ற மதியால் பயின்று தானாய் தன்மயமாய் ஆகி தன்னைத்தான் உணரும் போது " விதியை மதியால் வெல்லலாம்"
சித்தவித்தை பயிற்சியால் ஊர்த்துவகெதியை கற்று மரணத்தை வென்று மரணமிலா பெருவாழ்வு வாழலாம்.
மற்றோர் எல்லாம் மரணம் என்கிற விதியால் சாகலாம்.
மத்தகப்படிப்பை பயிலாமல் புத்தகப்படிப்பை மட்டுமே படித்து மாபெரும் பண்டிதன் என்று மார்தட்டிய யாவரும் முடிவில் மரணத்தை தழுவுகிறார்கள்.
அரசன் முதல் ஆண்டி வரை எவரையும் மரணம் என்கிற விட்டு வைத்ததில்லை.
மத்தகமாகிய அகத்தில் உண்மையாய் உள்மெய்யை படித்த ஒருவரும் மரணப்பதில்லை.
"மரணமிலாபெருவாழ்வை வாழ்ந்திடுவோம் கண்டீர்,
புனைந்துரையேன், பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றேன்.
துன்மார்க்கம் தவிர்த்து சன்மார்க்கம் தழுவும் பெருந்தருணம் இதுவே...
Comments
Post a Comment