உசில இலைகஞ்சி

 *         இனி வைத்தியரிடம் போகாதீங்க

                   அனைத்து நோயும் நீங்க

             இந்த வைத்தியமே போதுங்க


தேவையான பொருள்கள்

                                      அதிமதுரம் 50 கிராம்

                                              சோம்பு 50 கிராம்

              சித்திரமூல வேர்பட்டை 25 கிராம்

                                சீனி சர்க்கரை 50 கிராம்


செய்முறை


அதிமதுரத்தின் மேலே இருக்கும் மெல்லிய தோலினை சீவி இடித்து பொடி செய்து கொள்ள வேண்டும்


சித்திர போல வேர்ப்பட்டையை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எடுத்து வெயிலில் உலர்த்தி இடித்து பொடி செய்து கொள்ள வேண்டும்


சோம்பை வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும் சீனி சர்க்கரையை நன்றாக சல்லடையில் சலித்து தூளாக செய்து கொள்ள வேண்டும்


இவை அனைத்தையும் அளவுகளின்படி ஒன்று சேர்த்தால் இதுவே அனைத்து நோய்களையும் நீக்கும் ஆரோக்கிய சூரணமாகும்


சாப்பிடும் முறை


சித்திரை மாதத்தில் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இந்த மருந்தை உண்ண தொடக்க வேண்டும்


தொடர்ந்து மூன்று மாதங்கள் மூன்று கிராம் அளவு காலை மாலை இருவேளையும் பாலுடன் கலந்து பருகி வர உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் விலகும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்


இந்த முறையை பயன்படுத்த முடியாவிட்டால் இதற்குப் பதிலாக ஒரு எளிய வைத்தியம்


சித்திரமூல வேர் பட்டையை பொடி செய்து இதில் இரண்டு கிராம் எடுத்து ஒரு வாழை பழத்திற்குள்ளே வைத்து காலை வெறும் வயிற்றில் இதை தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலம் பெறும்


 கல்லீரல் சார்ந்த நோய்கள் அனைத்தும் விலகும் கல்லீரல் வீக்கமும் குணமாகும் நோய் நொடிகளை நீக்கி உடலை காக்கும் ஒரு உயர்ந்த வைத்திய முறை இதுவாகும்


நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக 

                 உசில இலை கஞ்சி


உசில மரத்து இலையை இலையை காயவைத்து பொடி செய்து இதன் எடைக்கு சரியாக வரகு கம்பு பச்சையரிசி மூன்றையும் கலந்து மாவாக இடித்து  இதில் கஞ்சி காய்ச்சி காலை வேளையில் காலை உணவாக தினந்தோறும் பதினைந்து நாட்கள் பருகி வந்தால் உடலுக்கு நல்ல பலம் உண்டாகும் 


உடலில் ஏற்படும் சத்து பற்றாக்குறை நீங்கும்  உடல் நடுக்கம் குணமாகும் மேலும் இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் உடல் வெப்பம் நீங்கி உடல் குளிர்ச்சியடையும்


       வெயில் காலத்தில் ஏற்படும் வெப்ப நோய்களை தவிர்த்துக்கொள்ள இந்த உசில இலை கஞ்சி உதவும்


                    சித்தர்களின் சீடன் 

             பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி