மூலம் பௌத்திரம் மலக்குடல் புண் ஆற
மலக்குடல் இரணம் மற்றும் குடல் இரணங்கள் ஆற வைத்தியம்
ஆடுதீண்டாப்பாளை சாறு - 100 மிலி
( சாறு வரவில்லையென்றால் பசும்பால் விட்டு அரைத்துக்கொள்க)
பூக்காத குப்பைமேனி இலைச்சாறு - 250 மிலி
விளக்கெண்ணெய் - 500 மிலி
விளக்கெண்ணெயுடன் சாறுகளை கலந்து சிறு தீயில் மணல்மணலாக வரும்வரை காய்ச்சி வடித்து எடுத்துக் கொள்க. ( ஒரு குச்சியை காயும் எண்ணெயில் நனைத்து அது எரியும்நிலை வந்தால் பதம் வந்துவிட்டது என்று பொருள்)
வடித்து வைத்த எண்ணெயை காலை/ மாலை காய்ச்சிய பசும்பாலில் கலந்து சாப்பிடவும்.
பத்தியம் - கருப்புகவுனி மோர்சாதம் மட்டும் உட்கொள்க
-----------------------------------
குடல் புண் ஆற
மணத்தக்காளி சாறு 1-1/2 கட்டு பிழிந்தது
மாங்கொட்டை பருப்பு - 250 கிராம்
மாங்கொட்டை பருப்பை கல்வத்தில் மைய அரைத்து பவுடராக்கவும்.
மணத்தக்காளி கீரை சாறை சிறிது சிறிதாக சேர்த்து மாத்திரைகளாக உருட்டும் பதத்திற்கு உறவாடச்செய்து சிறு பட்டாணி அளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதை 3 வேளை உணவுக்கு முன் 2 மாத்திரைகளை 1/2 உப்பு சேர்த்த பசுமோர் 200 மிலியுடன் குடிக்கவும்.
பத்தியம்- காட்டுயாணம் அல்லது கருப்பு கவுனி மோர் சாதம்.
-------------------------
மலவாய் வலி குணமாக
கிராம்பு - 20 எண்ணிக்கை( மொக்கு நீக்கியது)
ஏலக்காய் 10 எண்ணிக்கை
1/
Comments
Post a Comment