கால் வலி
🇨🇭#ஆணோ_பெண்ணோ
#கால்_வலி_பற்றி
#கூறாதவர்கள்_யாரும்_இல்லை…❗❗
⭕ காரணம்………❓
நம் காலை அத்தனை பாடாய்படுத்தி விடுகின்றோம். அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் தேய்வு, எலும்பு, தசை, தசைநாரில் ஏற்படும் காயங்கள், சுளுக்கு, ரத்தகட்டி, குறைவான ரத்த ஓட்டம், சுருள் சிரை நரம்பு (varicose vein) என பல காரணங்களால் கால் வலி உண்டாகின்றது.
♦கால் ஆடு தசை வலி ஏன் உண்டாகின்றது❓
அடிபடுதல், வீக்கம், சருமம், தசை, எலும்பு, மூட்டு ஆகிய கீழ் கால் பகுதிகளில் காயம் ஏற்படுதல் காரணமாக உள் ரத்த குழாய்களில் பாதிப்பு ஏற்படுதல், அதிக கால் உழைப்பு, கிருமி பாதிப்பு ஆகியவற்றினால் ஏற்படுகின்றது.
♦அடிக்கடி ஏன் கால் வலி என்கிறோம்❓
காலின் ஆழ்ந்த ரத்த குழாயில் உணர்வு ஏற்பட்டிருக்கலாம். நீண்ட காலம் படுக்க வேண்டிய உடல் பாதிப்பு ஏற்படும் பொழுது கால்களுக்கு பயிற்சி இல்லை என்றால் இவ்வாறு ஏற்படலாம். வீக்கம், பிடிப்பு, வலி ஏற்படலாம். மூட்டு வலி, மூட்டு தேய்மானம் அதிகமாகக் காணப்படும் ஒன்று. எலும்பிலோ, சதையிலோ கிருமி பாதிப்பு ஏற்பட்டு வீக்கம், சிவந்து போதல், வலி ஆகியவை ஏற்படலாம்.
நரம்பு பாதிப்பினால் வலி, மரத்து போகுதல், குறு குறுத்தல் ஏற்படலாம். திடீரென கனமான ஒன்றினை தூக்குவது, கோணலாய் திரும்புவது. அதிக உழைப்பு போன்றவை சதைகளுக்கு அதிக சோர்வினை ஏற்படுத்தலாம். இவை கீழ் முதுகு, கழுத்து, தோள் பட்டை, தொடையின் பின்புறம் இவற்றில் பொதுவாய் ஏற்படும். பாதிப்புள்ள பகுதியில் மட்டுமே வலி இருக்கும். இதற்கு ஐஸ் ஒத்தடம், சூடு ஒத்தடம், வலி நிவாரண மாத்திரைகள் போதும். வலி கூடுதலாக இருப்பின் மருத்துவ உதவி தேவை.
⭕👉இந்த சதை சோர்வின் வலி……
* திடீரென ஏற்படும் வலி
* அசைவுகள் குறைதல்
* பாதிப்புள்ள இடத்தில் நிறமாற்றம்
* வீக்கம்
* பாதிப்புள்ள இடத்தில் பலவீனம்.
இவையெல்லாம் அறிகுறிகளாக அமையும்.
சரி இந்த பாதிப்பு ஏன் ஏற்படுகின்றது.
* உடற்பயிற்சிக்கு முன் முறையாக உடலினை (warming up) என தயார்படுத்தாது இருத்தல். முறையான உடல் உழைப்பு இன்மை.
* அல்லது அதிக உழைப்பு ஆகியவை ஆகும். கால் தடுப்பது,ஓடுவது,குதிப்பது
அதிக கனத்தினை தூக்குவது இவைகள் திடீரென தசை பாதிப்பினை ஏற்படுத்தும்.
இந்த சதை வலிக்கு முதல் நிவாரணம் ஓய்வு தான். பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஓய்வு வேண்டும். பாதிக்கப்பட்ட இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுங்கள். சுமார் 20 நிமிடங்கள் கொடுங்கள். முதல் நாளன்று 4&5 முறை இவ்வாறு செய்யுங்கள். அடுத்த நாள் முதல் 4 மணி நேரம் அல்லது 6 மணி நேரத்திற்கு ஒருமுறை ஒத்தடம் கொடுங்கள். தேவைப்பட்டால் எலாஸ்டிக் பாண்டேஜ் உபயோகிக்கலாம். ஆனால் அதிக இறுக்கம் கூடாது.
கால், கைகளில் அடிபட்டிருந்தால் தலையணை கொண்டு கால், கையை உயர்த்தி வையுங்கள்.
வலி நிவாரண மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள்.
மூன்று நாட்களுக்குப் பிறகு அடிபட்ட இடத்தில் சூடு ஒத்தடம் கொடுங்கள்.
அதிக ஓய்வும் தவறு. வலி நீங்கு நிவாரணம் பெற்றவுடன் பயிற்சிக்கு முன் (warm up) பயிற்சி செய்யுங்கள் எடுத்தவுடனே நாம் பயிற்சி செய்வது உறுப்புகளை பாதிப்படைய செய்யும். வலி மிக அதிகமாக இருந்தாலோ, பாதிக்கப்பட்ட இடம் மாறி போயிருந்தாலோ, அசைவுகள் கடினமாக இருந்தாலோ உடனடி மருத்துவ ஆலோசனை பெறுக.
💢 இத்தகைய பாதிப்புகளை தவிர்ப்பது எப்படி❓
ஒரே நிலையில் அதிக நேரம் உட்கார்ந்து இருக்காதீர்கள். அடிக்கடி எழுந்து நடக்கவும். முறையான ஒழுங்கான முறையில் அமருங்கள். பயில்வான் போல் அதிக தண்ணி உள்ள பக்கெட், கனமான பாட்டில் இவற்றினை தூக்காதீர்கள்.
அதிக எடையுடையவராய் இருப்பின் குறைத்து விடுங்கள். முறையான அளவுடைய ‘ஷீ’க்களை அணியுங்கள்.
உடற்பயிற்சியினை பயிற்சியாளரிடம் கற்று பின் பழகுங்கள். இதே போன்று கணுக்கால் சுளுக்கும் மிக சாதாரணமாக காணப்படக் கூடிய ஒன்றே. உடல் எடையினை கணுக்கால் தாங்குகின்றது என்பதால் மேற் கூறிய சிகிச்சை முறைகள் அனைத்தும் இதற்கு பொருந்தும் என்றாலும் கூடுதல் கவனம் தேவை.
💢#தசைகளில்_வலி❗❓
சிலர் எப்பொழுதும் உடலில் வலியினை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். தையல் வேலை செய்பவர்கள், சுமை தூக்குபவர்கள் என்ற வகையில், மிக அதிகமான உழைப்பை கொடுக்கும் போது தசை சோர்ந்து வலியும் இருக்கின்றது. மேலும்
* ப்ளு ஜுரம்
* கிருமி தாக்குதல்
* தைராய்டு குறைபாடு
* சிலவகை மருந்துகள்
* பொட்டாசியம் குறைபாடு ஆகியவையும் பாதிப்பினைத் தரலாம்.
வலி குறையாது நீடித்தாலோ, காரணமின்றி வலி ஏற்பட்டாலோ ஜுரத்தோடு கூடிய வலியாக இருந்தாலோ வலியோடு சிறுநீர் செல்வதில் கடினம் இருந்தாலோ, வலியோடு விழுங்குவதில் கடினம் இருந்தாலோ, வாந்தி, ஜுரம், கழுத்து இறுக்கம், அசைவில் கடினம் ஆகியவை இருந்தாலோ உடனடி மருத்துவரை அணுகவும். இதுபோன்ற மேலும் சில மருத்துவ காரணங்களும் உள்ளன.
‘#ஆர்த்ரைட்டிஸ்’ எனப்படும் மூட்டுகளின் வலி 100&க்கும் மேற்பட்ட பிரிவுபடும்.
இவைகளை மருத்துவ ஆலோசனைப்படி மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும்.
இரவில் பலர் அதிகமான கால் வலி, காலில் ஒருவித சங்கடம் இவற்றினை உணர்வார்கள். ஓய்வின் பொழுதே இவ்வலி அதிகம் தெரியும். இத்தொந்தரவினால் தூக்கம் அதிகம் கெடும். இதற்கான மருத்துவ சிகிச்சையினை மருத்துவர் மூலம் பெறலாம் மேலும்,
* புகை பிடித்தலை நிறுத்துதல்
* எடை குறைத்தல்
* காபி, டீ அளவினை குறைத்தல்
* நடைபயிற்சி
* இரும்பு சத்து குறைபாடு இருப்பின் சரி செய்தல் ஆகியவை மூலமாகவும், இரவு ஏற்படும் கால் வலியினை குறைத்துக் கொள்ள முடியும்.
* சினைப்பை புற்று நோயும் அடிவயிறு வலி, கால்வலி இவற்றினை கொடுக்கும் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.
* பலருக்கு முறையற்ற காலணிகள் தான் கால் வலியினை உருவாக்குவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. பாதத்தில் மட்டும் 133 மூட்டுகள் உள்ளன. இவை மூட்டு வலியினை உருவாக்க முடியும் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
* சர்க்கரை நோய் பல பாதிப்புகளை பாதத்தில் ஏற்படுத்துகின்றது. காலில் ஏற்படும் எலும்பு வலி, எலும்பு வலியின் காரணம் எலும்பின் புற்றுநோய், ரத்த சோகை, கிருமி, அடிபடுதல், எலும்பு தேய்மானம், எலும்பு கரைதல் போன்ற காரணங்களால் இருக்கக் கூடும்.
* நீர் கோர்த்த கால் வீக்கத்திற்கு ஹார்மோன் சிகிச்சை, ஆழ்ந்த உள்காயம், இருதய பாதிப்பு, சில வகை மருந்துகள், சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, கர்ப்பம், உயர் ரத்த அழுத்தம் ஆகியவைகள் காரணமாக இருக்கலாம்.
* ருமாடாய்ட் ஆர்த்ரைடின் பிரிவு மூட்டுவலி, கால் விரல்களில் ஒருவித இறுக்கம், மூட்டுகளில் வீக்கம், சோர்வு இவற்றை அளிக்கலாம். இதனை ஆரம்ப நிலையிலேயே கவனித்து சிகிச்சை, பயிற்சி முறைகளை பெறுவது அவசியம்.
* சிலருக்கு தூங்கி எழுந்தவுடன் குதிகால் வலி அதிகமாக இருக்கும். கொஞ்சம் நடந்த பிறகே வலி குறையும். இதற்கு சில மருத்துவ பரிசோதனைகள், மருந்துகள் சில பயிற்சிகள் நல்ல நிவாரணம் ஆகும்.
சிலருக்கு பாதத்தில் அதிக அரிப்பு இருக்கும்.
⭕#இதற்கான_காரணங்கள்❓
* நரம்பு பாதிப்பு
* சோரியாஸிஸ் எனும் சரும பாதிப்பு
* பூச்சிகள்
* உடலில் உப்பு அதிகம் போன்ற மேலும் பல காரணங்கள் உள்ளன. முறையான பாத பராமரிப்பு, சுகாதாரம் இவை மிகவும் அவசியம். அரிப்பிற்கு பல மருத்துவ காரணங்கள் இருக்கக் கூடும் என்பதால் இதனை அலட்சியம் செய்யாமல் மருத்துவ உதவி பெறுதல் அவசியம்.
* இரவில் சிலருக்கு பாதத்தில் அரிப்பு இருக்கும். பூஞ்சை பாதிப்பு, எக்ஸிமா பாதிப்பு இருக்கலாம்.
* சிலருக்கு பாதத்தில் அதிக வியர்வை இருக்கலாம். இதன் காரணமாக அரிப்பு ஏற்படலாம். சோப், லாண்டரி, சென்ட் இவற்றின் அலர்ஜி காரணமாக அரிப்பு ஏற்படலாம்.
* ஸாக்ஸினை அன்றாடம் மாற்றம் செய்வது அவசியம்.
* வெறும் காலுடன் குப்பையான இடங்களில் நடப்பது பல நோய்களை கொண்டு வந்து விடும். இதனால் கூட இரவில் அரிப்பு ஏற்படலாம்.
🔰#பாதத்தில்_மட்டும்……
26 எலும்புகள்,
133 மூட்டுகள்,
107 தசை நார்கள்,
19 தசைகள்
உள்ளன. காலினை வைத்துதான் வாழ்நாளில் சுமார் 1,15,000 மைல்கள் நடக்கின்றோம்.
பல பாதிப்புகள் முதலில் பாதத்தில்தான் தெரியும். ஆகவே காலினையும், பாதத்தினையும் பத்திரமாய் பாதுகாப்போம்.
Comments
Post a Comment