ஒற்றைத்தலைவலி

 நோயும் மருந்தும்


ஒற்றைத் தலைவலி குணமாக


தும்பைப் பூவை பறித்து இருபது எடுத்துக்கொண்டு சாறு வரும்படி இதை நன்றாக கசக்கி எந்த பக்கம் தலை வலிக்கின்றதோ அதற்கு  மறுபுறம் இருக்கின்ற கண்ணில் இந்தச் சாற்றை மூன்று துளிகள் வீதம் விட்டு அதே பக்கம் இருக்கின்ற மூக்கு துவாரத்திலும் இதே சாற்றை மூன்று துளிகள் வீதம் விட்டு வர ஒற்றைத் தலைவலி குணமாகும்


  பெருஞ்சீரகம் எனும் சோம்பு இதனோடு அதிமதுரம் சம அளவாக சேர்த்து பொடி செய்து இதில் மூன்று கிராம் பொடியை தேனில் குழைத்து தினமும் இருவேளை இருபது  நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர தீராத ஒற்றை தலைவலி நோய் ஒரு மாத காலத்தில் நிரந்தரமாக குணமாகும்


ஒற்றை தலைவலி தீர 

  குப்பைமேனி தைலம்


  குப்பைமேனி சாறு நல்லெண்ணெய் இரண்டையும் சமமாக கலந்து இதை தைலப் பதமாகக் காய்ச்சி வைத்து கொண்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் தலைக்குத் தேய்த்து வெண்ணீர் வைத்து குளித்து வந்தால் தீராத ஒற்றை தலைவலி நிரந்தரமாக குணமாகும்


ஒற்றைத் தலைவலி தீர 

   ஒரு எளிய வைத்தியம்


எலுமிச்சை சாறு இஞ்சி சாறு இவை இரண்டையும் வகைக்கு 10 மில்லி அளவு எடுத்து 200 மில்லி சுடு நீரில் கலந்து குடித்து வர ஒற்றைத் தலைவலி குணமாகும்


பார்வை குறைபாடு குணமாக


கடுக்காய் 

நெல்லிக்காய் 

தான்றிக்காய் 

சரக்கொன்றை வேர் பட்டை


 இவை அனைத்தையும் சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து இதில் மூன்று கிராம் எடுத்து வெந்நீருடன் கலந்து காலை வேளையில் பருகி வர கண்களில் தோன்றுகின்ற நோய்கள் அனைத்தும் குணமாகும்


பார்வை மங்குவது குணமாகும் கிட்டப்பார்வை தூரப்பார்வை போன்ற பார்வை குறைபாடுகள் நீங்கும் 


கண் எரிச்சல் கண்களில் நீர் வடிதல் 

கண் கூச்சம் கண் புகைச்சல் போன்ற கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் இதுவே அருமருந்தாக அமையும்


  இந்த மருத்துவ முறையை வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் கடைபிடித்தால் போதும் 


  மருந்து சாப்பிடும் பொழுது பேதியானால் ஐந்து கிராம் வசம்பை  கால் லிட்டர் தண்ணீரில் ஒன்றிரண்டாக தட்டி போட்டு கசாயம் செய்து பாதியாக சுண்டக்காய்ச்சி குடித்து வர பேதி நின்று விடும் 


  பார்வை குறைபாடு உள்ளவர்களும் பார்வைகுறைபாடு வரக்கூடாது என்பவரும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் இந்த மருத்துவ முறையை ஒரு மாதம் கடைபிடித்து வந்தால் போதும் 


  கண் நோய்கள் நீங்கவும் கண் நோய்கள் வராமல் இருப்பதற்கும் இந்த ஒரே வைத்தியம் முறையே நமக்கு பாதுகாப்பானதாக அமையும்


காது நோய்களுக்கு 

     மூலிகை தைலம்


தேவையான பொருட்கள்


வெள்ளை வேளை சாறு 50 மில்லி  

             நல்லெண்ணெய் 50 மில்லி 

                      மிளகு 10 எண்ணிக்கை 

               பூண்டு பல் 5 எண்ணிக்கை


செய்முறை


  வெள்ளை வேளை மூலிகை சாறு நல்லெண்ணெய் இவை இரண்டையும் ஒன்றாக கலந்து கொண்டு 


மிளகையும் பூண்டையும் ஒன்றிரண்டாக தட்டி இதனோடு சேர்த்து இதை விறகு அடுப்பில் வைத்து லேசான தீயில் காய்ச்சி


மணல் பதமாக வரும் பொழுது இறக்கி ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு


  வலியுள்ள காதில் மூன்று துளிகள் விட்டு வர காது வலி குணமாகும்


காதில் சீழ் வடிதல் காதடைப்பு  காது மந்தம் இவைகள் அனைத்தும் வெகு எளிதாக குணமாகும்


மூக்கு சளி குணமாக


தேவையான பொருட்கள்


துளசி 

முசுமுசுக்கை 

கற்பூரவள்ளி

அதிமதுரம்

சிற்றரத்தை


  இவை அனைத்தையும் பொடி செய்து சம அளவாக கலந்து கொண்டு இதில் மூன்று கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து காலை மாலை இரண்டு வேளை குடித்து வர  இரண்டு வார காலத்திற்குள் நெஞ்சு சளி தீரும் 


  சளியால் ஏற்பட்ட சுவாச சம்பந்தமான நோய்கள் அனைத்தும் விலகி  இருமல் நோய் குணமாகும் மேலும் கபம் சார்ந்த நோய்கள் அனைத்தும் விலகி நுரையீரல் பலம் பெறும் 


   இதை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சுவாசப் பாதையில் உள்ள கசடுகள் நீங்கி நுரையீரல் பலம்பெறும் மேலும் மூச்சுத்திணறல் மற்றும் மூக்கடைப்பு இவைகள் குணமாகி சுவாசம் சீராக நடைபெற்று சுவாச மண்டல பிணிகள் அனைத்தும் தீரும் உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும்


சளி நோயை தீர்க்க 

     ஒரு எளிய முறை


  ஆடாதொடை இலையோடு மிளகு சேர்த்து  கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் கோழை  மற்றும் சளி போன்ற கப நோய்கள் அனைத்தும் முழுமையாக நீங்கும் இது உறுதி


முகம் அழகாக

 ஒரு எளிய வைத்தியம்


ஆவாரம் பூவோடுபச்சைப்பயறு சமமாக சேர்த்து இரண்டையும் பொடியாக செய்து உடலுக்குத் தேய்த்து குளிக்கும் சோப்பிற்கு பதிலாக இந்த பொடியை உடல் முழுவதும் பூசி குளித்துவர உடலில் உள்ள வியர்வை நாற்றம் நீங்கும் முகம் பார்ப்பதற்கு அழகாக தோன்றும்


                 சித்தர்களின் சீடன் 

          பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி