ஆஸ்துமா குணமாக
#இரைப்பு (#ஆஸ்துமா) நோயாளிகள் செய்ய வேண்டியவை:
✅காலையில் எழுந்து பல் துலக்கிய உடன் இரண்டு டம்ளர் வெந்நீர் அருந்தலாம்.
✅பால் கலக்காத டீ காபி அருந்தலாம்.
✅பால் மற்றும் தயிர் போன்றவை உடலில் சளி ஏற்படுத்தக் கூடியவை.பலருக்கு பால் மற்றும் பால் பொருட்களை நிறுத்தினாலே, ஆஸ்துமா போய்விடுகிறது.
✅மோர் குடிக்கலாம். இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி கலந்து குடித்தால் சிறப்பு.
✅எளிமையாக செரிமானம் ஆகக்கூடிய புழுங்கல் அரிசி கஞ்சி, சிவப்பு அரிசி அவல், உப்புமா, மிளகு ரச சாதம் , இட்லி சாப்பிடலாம்.
✅கீரை, காய்கறிகள் அதிகம் சாப்பிடலாம்.
✅வாரம் ஒருமுறை குழம்பு மீன் /குழம்பு நண்டு சாப்பிடலாம்.
(வறுத்தவை கூடாது).
✅வாரத்தில் ஒருநாள் அகத்திக்கீரையை உணவில் சேர்த்து வருவதும், அன்றாட உணவில் சுண்டைக்காய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகிய உணவுகளை சேர்த்துக்கொள்வதும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
✅நுரையீரல் நோய்களுக்கு மிகச் சிறந்த அருமருந்து துளசி. `துளசி வாசத்தை முகர்தல், அப்படியே சாப்பிடுவது அல்லது கஷாயமாக்கிக் குடித்தல் ஆகியவை காசநோய் உண்டாகாமல் தடுப்பதுடன் நுரையீரல் பாதிப்புகளையும் குறைக்கிறது’
✅துளசி சாறோடு இஞ்சி தேன் கலந்து காலை மாலை அருந்தலாம்.
✅கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கண்ணி சேர்த்து கஷாயமாக்கி தினந்தோறும் காலையில் அருந்தலாம். சுவைக்காக தேன் கலந்து குடிக்கலாம்.
✅வெளியில் செல்லும் போது புகை, ஈரக்காற்று, தூசு மூக்கில் படாத வண்ணம் முகமூடி அணிந்து கொள்ள வேண்டும்.
✅மாலை நேரங்களில் சுக்கு கஷாயம் குடிக்கலாம்
✅இரவு உணவு முடித்த பிறகு 2 அல்லது 3 மணி நேரம் கழித்து உறங்கச் செல்ல வேண்டும்.
✅ இடது பக்கம் திரும்பி படுத்தல் நல்லது.
✅பேரிச்சம்பழம் சேர்த்துக் கொள்ளலாம்.
✅தூதுவளை ரசம், கொள்ளு ரசம்,
ஆட்டுக்கால் சூப், காய்கறி சூப் அவ்வப்போது அருந்தலாம்.
✅வெறும் வெந்நீரில் ஆவி பிடித்தல், நொச்சி இலையை வேகவைத்து ஆவி பிடித்தல் செய்யலாம்.
✅வெந்நீரில் சில துளிகள் யூகலிப்டஸ் எண்ணெய்விட்டு, சிறிது நேரம் ஆவி பிடிக்கலாம். இதனால் மூச்சுக்குழாயில் உள்ள நச்சுகள் வெளியேறும்.
✅குளிர் மற்றும் வெயில் காலங்களில் வைரஸ் தொற்றுகள் வேகமாகப் பரவும். எனவே, அந்தக் காலகட்டத்தில் நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.
✅ஆஸ்துமாவைப் பொறுத்தவரை, மாத்திரைகளுக்குப் பதில் இன்ஹேலர் மூலம் மருந்து உட்கொள்ளப் பரிந்துரைக்கப் படுகிறது.
✅மிதமான நடைப்பயிற்சி
✅பலூன் ஊதும் பயிற்சி
✅எளிய மூச்சு பயிற்சி
(பிராணாயாமப் பயிற்சிகள்), ஆசனம் பயிற்சிகள், தியானம்
✅பதற்றம், கவலை, மன அழுத்தம் குறைக்க கோவில், பூங்கா சென்று வரலாம்.
✅ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள், தங்களுக்கு எத்தகையச் சூழல் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையுடன் அதைத் தவிர்க்க வேண்டும்.
Comments
Post a Comment