மாதவிலக்கு வலி
பெண்.
வயது 22.
ஏற்கனவே என்னிடம் சிகிச்சை பெற்ற அம்மாவின் மருமகள் தான் இந்த பெண். மூன்று மாதங்களுக்கு முன்பு தன் மருமகளை அழைத்து வந்தார். அப்பெண்ணின் மிக பிரதானமான பிரச்சனை வலி மிகுந்த மாதவிடாய் (PAINFUL PERIODS).
அவரின் வலியை பற்றி சொல்லும்போது அதை கேட்பவர்களாலேயே தாங்கமுடியாது, அப்படி ஒரு வலி. மாதவிடாய் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வலி தொடங்கி மாதவிடாயின் முதல்நாள் மற்றும் இரண்டாம்நாள் வரை சகிக்கவே முடியாத அளவுக்கு ஒரு வேதனையை அனுபவிப்பதாக கூறினார்.
உதிரப்போக்கு எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று கேட்டேன். 4 முதல் 5 நாட்கள் வரை இருக்கும்.
உதிரப்போக்கன் அளவு பற்றி கேட்ட போது அது எப்போதும் நார்மலா தான் இருக்கும்,
மேலும் மாதவிலக்கும் சற்று தள்ளித்தான் போகிறது என்றார். தற்போது மாதவிடாயின் இரண்டாவது நாள், எப்படியாவது என் வலி நீங்க ஏதாவது செய்ங்க என்றார்.
பொதுவாக மாதவிடாய்க்கு முந்தைய கால கட்டத்தில் yang தன்மை உயரும். ஏற்கனவே கல்லீரல் சூடு உள்ள சிலருக்கு உதிரப்போக்கிற்கு முந்தைய நாட்களில் வயிற்று வலி ஏற்படும்.
மேலும் வலியில்லா உதிரப்போக்கு ஏற்பட வேண்டுமெனில் கல்லீரலின் Qi யின் மென்மையான ஓட்டமும் கல்லீரல் இரத்தமும் நல்ல அளவில் இருக்க வேண்டும்.
இந்த பெண்ணின் நாக்கை பார்த்த போது கல்லீரல் இரத்த தேக்கம் இருப்பதை உறுதி செய்தேன்.
கல்லீரல் இரத்தம் நகரவேண்டும் என்றால் முதலில் கல்லிரலின் Qi நகரவேண்டும்.
எஸன்ஸ் அக்குபங்சர் அடிப்படையில் கல்லீரல் மெரிடியனில் உள்ள நேர்மறை சூரிய புள்ளி மற்றும் liv.1 புள்ளிகளில் இருபுறமும் ஊசி செருகினேன். மொத்தம் 4 ஊசிகள் மட்டுமே.
அடுத்த 5 வது நிமிடத்தில் வலியின் தன்மை குறைவதாக கூறினார்.
25 வது நிமிடத்தில் வலி 100% குறைந்து விட்டது. சிகிச்சை முடிந்தது. அடுத்த முறை மாதவிடாய் ஏற்படும் முன்பு 4 முறைகள் சிகிச்சைக்கு வர வேண்டும் என்று சொல்லி அனுப்பினேன்.
அதே போல 4 நாட்களுக்கு ஒருமுறை வந்தார்.
ஒருமுறை EEOV முறையில் Ren mai
அடுத்த முறை சிறுநீரக எஸன்ஸ்.
அடுத்த முறை chong mai.
கடைசியாக liver blood க்கான சிகிச்சை செய்தேன்.
சிகிச்சை முடிந்து 3 மாதங்களாக மாதா மாதம் சரியான தேதியில் மாதவிடாய் ஏற்படுகிறது, வலி என்பதே துளியளவும் இல்லை.
நன்றி.
மகேந்திரன்.
அக்குபங்சர் சிகிச்சையாளர்.
ஜேடர்பாளையம்.
நாமக்கல்.
cell.9597820861
7904848355
Comments
Post a Comment