கொய்யா 61220

 # கொய்யா பழம்


*** கொய்யா பழம் அதன் சத்துக்களையும் , தீர்க்கும் நோய்களையும் பற்றி தெரிந்துக்கொள்ளவோம்.!


** கொய்யாவில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்து ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிகம். வைட்டமின் ‘சி’ சத்து உடலை ஆராக்கியமாக வைத்துக் கொள்வதுடன் கிருமிகள் தாக்காமல் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கின்றது. நார் சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்டது.சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கொய்யா. நார் சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்ட கொய்யாவை சர்க்கரைநோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம்.


** நன்றாக பழுத்த கொய்யா பழத்துடன் மிளகு, எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல்சோர்வு, பித்தம் நீங்கும், கொய்யாவுடன் சப்போட்ட பழத்தை சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறுவதோடு ரத்தம் சுத்தமாகும்கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் கொய்யாவில் அதிக அமிலத்தன்மை இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும். கொய்யாவில் ஆப்பிளைவிட கூடுதலான சத்துகள் உள்ளன.இதில் போலிக் ஆசிட், வைட்டமின் பி9 இருப்பதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொய்யாபழம் உண்ண அறிவுறுத்தப்படுகின்றது.


** மதிய உணவுக்கு பிறகு கொய்யாபழம் சாப்பிட்டால் நன்றாக ஜீரணம் ஆவதோடு, மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப்புண் குணமாகும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சக்தியும், வயிற்றுப்போக்கு, மூட்டுவலி,அரிப்பு, மூலநோய், சீறுநீரக கோளாறு உள்பட பல நோய்கள் கட்டுப்படுத்தும் ஆற்றலும் அதற்கு உண்டு.


** கொய்யா இலைகளை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, தலையில் பற்று போட்டால் கடுமையான தலைவலி, ஒற்றைத் தலைவலி நீங்கும். இலைகளை அரைத்து தண்ணீரில் கலந்து பருகினால் வயிற்றுவலி, தொண்டைப்புண் போன்ற நோய்கள் குணமாகும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி