சிறுநீ்ரக வேலை

 #எப்படி_கண்டுபிடிப்பது…❓❗


#நம்முடைய_கிட்னி_சரியாக #வேலை_செய்கிறதா_என்று…❗❗❗


👉 இப்படி டெஸ்ட் பண்ணுங்க…


நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நமது உடலுறுப்புகளும் தனது செயலை திறம்பட செய்ய வேண்டும். அதிலும் சிறுநீரகம் தான் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தம் செய்கிறது.


இந்த சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால் இரத்தத்தில் நச்சுக்கள் கலந்து நமது உடல் ஆரோக்கியமும் கெட்டு விடும். எனவே நமது சீறுநீரக செயலை அடிக்கடி கண்காணித்து வருவது மிகவும் முக்கியம். 


👉நம் சிறுநீரகம் சரியாகத்தான் செயல்படுகிறதா என்பதை கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். 


👇சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்………


⭕ தூக்க பிரச்சினை.....


உங்கள் உடலில் நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தும் மிகப்பெரிய வேலையை செய்வது சிறுநீரகம் தான். இந்த சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால் உடலில் நச்சுக்கள் தேங்கி தூக்கமின்மை ஏற்படும். #இன்ஸோமினியா போன்ற தூக்கமின்மை பிரச்சினையால் நீங்கள் அவதிப்படக் கூடும்.


⭕ சோர்வு தலைவலி மற்றும் வலுவிழப்பு....


நமது சிறுநீரகம் தான் #விட்டமின்_D யை #எரித்ரோபயோடினாக மாற்றுகிறது. இந்த எரித்ரோபயோடின் தான் இரத்த #சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. எனவே நமது சிறுநீரகம் சரிவர செயல்படவில்லை என்றால் எரித்ரோபயோடின் அளவு குறைந்து இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியும் குறைந்து விடும். இந்த இரத்த சிவப்பணுக்கள் தான் உடலுறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை சப்ளை செய்கிறது. ஆக்ஸிஜன் சரிவர கிடைக்க வில்லை என்றால் தசைகள் மற்றும் மூளைகள் சோர்வடைய ஆரம்பித்து விடும்.


⭕ அனிமியா....


நாள்பட்ட சிறுநீரக பிரச்சினை இருந்தால் 20-25% அனிமியா நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் அறிகுறிகளாவன…… 


🌟சோர்வு, 


🌟தூக்கம், 


🌟முகத்தில் வெள்ளை புள்ளிகள் 


போன்றவை ஏற்படும்.


⭕ அரிப்பு மற்றும் வறண்ட சருமம்....


சிறுநீரகம் நமது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சி ஆரோக்கியமான உடலை நமக்கு தருகிறது. எனவே சிறுநீரகம் சரிவர செயல்பட விட்டால் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் தாதுக்கள் கிடைக்காமல் சருமத்தில் அரிப்பு மற்றும் வறட்சி ஏற்படும். இதை நீங்கள் கண்டுக்காமல் விட்டு விட்டால் சிறுநீரக பாதிப்பு மற்றும் எலும்பு நோய்கள் போன்ற தீவிர பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே போதுமான நீர்ச்சத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 


⭕ கெட்ட துர்நாற்றம்....


உங்கள் சிறுநீரகம் சரிவர செயல்படவில்லை என்றால் நீங்கள் எப்பொழுது உணவருந்தினாலும் வாயில் ஒரு தாதுக்கள் வாசனை வீசும். மேலும் கெட்ட சுவாசம் ஏற்படும். இதற்கு காரணம் உங்கள் உடலில் தங்கும் நச்சுக்கள் தான். இதனால் இந்த வாசனையை தாங்க முடியாமல் குறைவாக சாப்பிட ஆரம்பித்து விடுவீர்கள். இதனால் உங்கள் உடல் நலமும் ஆரோக்கியமற்று காணப்படும். எடை இழப்பு ஏற்படும். 


⭕ மூச்சு விட சிரமம்......


மூச்சு விடுதல் குறைந்தால் உங்கள் சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம். இதற்கு காரணம் நமது உடலில் உள்ள #நீர்ச்சத்து சிறுநீரகம் பிரித்தெடுக்க முடியாமல் #நுரையீரலுக்கு சென்று விடுவதால் ஏற்படுகிறது


⭕ முழங்கை பாதம் 

மற்றும் கால்களில் வீக்கம்...


 சிறுநீரகம் சரிவர செயல்படவில்லை என்றால் உங்கள் பாதங்கள், கைகள் வீங்க தொடங்கி விடும். நீர்ச்சத்து அதிகமாக வெளியேறாமல் சோடியம் சமநிலையின்மை ஏற்பட்டு உடலில் நீர் தேக்கம் ஏற்பட ஆரம்பித்து விடும். மேலும் கால்களில் சிரை குழாய்களில் பிரச்சினை, கல்லீரல் மற்றும் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.


⭕ முதுகுவலி....


 உங்கள் சிறுநீரகம் சரிவர செயல்படாவிட்டால் நச்சுக்கள் வெளியேறாமல் முதுகு வலி மற்றும் கால்வலி போன்றவை ஏற்படும். இதை பாலிசிஸ்டிக் கிட்னி டிஸீஸ் என்கின்றனர். இந்த வலி அப்படியே தண்டுவடத்தில் தொடங்கி இடுப்பு பகுதி வரை தொடரும்.


⭕ காய்ச்சல்....


சிறுநீரகம் செயல்படாத சமயத்தில் காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே இதற்கு வலி நிவாரணி மாத்திரைகளை எடுப்பதை தவிர்த்து உடனே மருத்துவரை சந்தியுங்கள்


⭕ வீங்கிய கண்கள்....


கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் வீக்கம் காணப்படும். இதற்கு காரணம் புரோட்டீனை சரிவர சிறுநீரகம் வடிகட்ட முடியாமல் உடல் முழுவதும் பரவி விடும். எனவே அதிகமான புரோட்டீன் உடலில் தங்குவதால் கண்களை சுற்றி வீக்கம் ஏற்படும். எனவே இதை மருத்துவரை அணுகி இரத்த பரிசோதனை மூலம் சிறுநீரில் உள்ள குளோபுலின் அளவை பரிசோதித்து கொள்ளுங்கள்.


⭕ உயர் இரத்த அழுத்தம்....


சிறுநீரக செயலிழப்பால் நமது கழிவு அமைப்புக்கும் இரத்த ஓட்ட அமைப்புக்கும் இடையே ஒரு பெரிய இடையூறு ஏற்படுகிறது. சிறுநீரகத்தில் உள்ள #நெப்ரான் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்டி வெளியேற்றும் வேலையை செய்கிறது. உங்கள் இரத்த குழாய்கள் பாதிப்படைந்து விட்டால் சிறுநீரக நெப்ரானுக்கு போதுமான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் செல்லாது. இதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. எனவே உயர் இரத்த அழுத்தமும் சிறுநீரக செயலிழப்பிற்கு காரணமாக அமைகிறது.


⭕ சிறுநீரில் மாற்றம்.....


உங்கள் சிறுநீரகம் சரிவர செயல்படவில்லை எனில் வெளியேற்றப்படும் சிறுநீரின் நிறம், மணம் மாறுதல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். 


இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கிற எண்ணம் வந்தால் அதுவும் சிறுநீரக பிரச்சினையை குறிக்கிறது. 


ஒரு நாளைக்கு 4-10 தடவை சிறுநீர் கழிக்கலாம்.


⭕ நுரையுடன் கூடிய சிறுநீர்....


நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது அதிகமான நுரை தென்பட்டால் சிறுநீரில் #புரோட்டீன் அதிகளவு உள்ளதை குறிக்கிறது. நீங்கள் சில சமயங்களில் வேகமாக சிறுநீர் கழிக்கும் போது கூட நுரை ஏற்படலாம். 


⭕ இரத்தத்துடன் சிறுநீர்....


உங்கள் சிறுநீரில் இரத்தம் கலந்து வந்தால் அது ஹீமத்யூரியா என்று அழைக்கப்படுகிறது. இது உங்களுக்கு தீவிர பாக்டீரியா தொற்று இருப்பதை குறிக்கிறது. 


⭕ ஸ்லீப் அமினியா....


நாள்பட்ட சிறுநீரக பிரச்சினை ஸ்லீப் அமினியாவை ஏற்படுத்தும். தூங்கும் போது மூச்சு திணறல் அடிக்கடி ஏற்படும். 


#சந்தேகம்_தீர_வேண்டும்_என்றால்…… 


மருத்துவரை அணுகி கீழே கூறிய பரிசோதனைகள் செய்து கொள்ளுங்கள்.


👉 1, eGFR

[ Estimation of Glomerular filtration rate ]


👉2,  Creatinine   

           Urea

           Uric Acid


👉3,  Urine for Microalbumin


👉4, ELECTROLYTE


👉5, CBC 

          Esr 


👉6, IgE


👉7, MRI KUB ABDOMEN SCAN

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி