ஆவாரை தேநீர்

 ஆவாரம்பூ தேநீர்


தேவையான பொருட்கள்


உலர்ந்த ஆவாரம் பூ 250 கிராம்

கொத்தமல்லி 500 கிராம்

சுக்கு 150 கிராம்

ஏலக்காய் 30 கிராம்

சிற்றரத்தை 10 கிராம்

பேறாரத்தை 10 கிராம்

மிளகு 10 கிராம்


செய்முறை


      இதில் கொத்தமல்லியை மட்டும் லேசாக வறுத்துக் கொண்டு மற்ற அனைத்து பொருட்களையும் வறுக்காமல் மேற்கண்ட அளவுகளின்படி சேகரித்துக் கொள்ளவும்


      பின் இப்படி சேகரித்த அனைத்தையும் சூரணமாக செய்து கொண்டு ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்


       இந்த சூரணத்தில் ஐந்து கிராம் அளவு எடுத்து தண்ணீரில் இட்டு காய்ச்சி சுவைக்காக கருப்பட்டி என்கின்ற பனை வெல்லம் சிறிது சேர்த்து பருகி வந்தால் உடலில் நல்லதொரு புத்துணர்ச்சி உண்டாகும்


         உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்

         இதனால் உடலில் நோய் எதிர்ப்பு  

         சக்தி  உண்டாகும்


         சர்க்கரை நோயாளிகள் ஆவாரம்பூ தேநீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதனால் சக்கரையின் அளவும் சற்று குறைந்துவிடும்


  ஆவாரை பூத்திருக்க சாவாரும் உண்டோ 


            என்ற பழமொழியின் மூலம் ஆவாரையின் பெருமையைத் தெரிந்து கொண்டு இந்த ஆவாரம் பூ தேநீரை பயன்படுத்தி நன்மை பெறுங்கள்


நன்றி


ஆத்ம நமஸ்காரம்

ஓம் பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

999 4814 979

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி