கொசுவிரட்டி தீபம்
#மீள் பதிவு
#கொசுக்களை கட்டுபட்டுத்த :
* வேப்பெண்ணை - சிறிது
* இலுப்பெண்ணை - சிறிது
* வசம்பு - சிறிது
* ஒரு மண் அகல் விளக்கில் வேப்பெண்ணையும், இலுப்பெண்ணையும் ஊற்றி வசம்பை நுனுக்கி அதில் சேர்த்து தீபமேற்றவும்.
* கொசுக்கள் அதிகமாக வருவதில்லங்க..... நன்றாக (90%) வேலை செய்கிறதுங்க. சோதித்து பார்த்த பின்பே இப்பதிவுங்க.
* இந்த வேப்பெண்ணையுடன், விளக்கெண்ணை (அ) தேங்காய் எண்ணை சேர்த்து கூட வசம்புப் பொடியைச் சேர்த்து தலையில் தேய்த்தால் பேன்கள் மயங்கி விழும்.பொடுகுக்கு சிறந்த தீர்வுங்க.
* வேப்பெண்ணையை தொடர்ந்து தலைக்கு தேய்த்து வந்தால் முடி நரைக்காதுங்க. அந்த வாடையை கொஞ்சம் அதிகமாகவே சகித்துக் கொள்ளனும்ங்க.
* இலுப்பெண்ணையை உடலுக்கு தேய்த்து குளிக்க..... சொறி, கரும்படை, அகலும்ங்க.
* இலுப்ப பிண்ணாக்கை பாத்திரம் தேய்க்க பயன்படுத்தலாம்.வேப்பிலை, வசம்பு சேர்த்து புகை போடலாம்ங்க.
* இலுப்பெண்ணை,இலுப்ப புண்ணாக்கும் சிறந்த பூச்சி விரட்டி .... ( எலி, காரப்பான், எட்டுகால் பூச்சி, பல்லி, கொசு ). #பகிர்வு
நன்றி ஜமுனா ராஜேஷ் சகோதரி
Comments
Post a Comment