ஹார்மோன் சமன்
சமநிலையற்ற ஹோர்மோன் (Hormonal Imbalance)
இன்று ஆண் பெண் பேதமின்றி அனைவருக்கும் ஹோர்மோன் சீரற்ற நிலை உருவாகியுள்ளது. அதற்கு காரணம் நம்முள் ஊடுருவியுள்ள தவறான உணவு பழக்கங்கள், சீரற்ற தூக்கம், மன அழுத்தம், உடல் பருமன், உடல் பயிற்சி இல்லாத வாழ்வியல் போன்றனவாகும்.
இதனால் கருப்பப்பை கட்டிகள், மாதவிடாய் சீர்கேடுகள், தைரொய்ட், முடி கொட்டுதல், நினைவுதிறன் குறைதல், குழந்தையின்மை, மலட்டு தன்மை, மனநிலை மாற்றம், தலைவலி, எடை அதிகரித்தல், முகத்தில் முடியின் வளர்ச்சி போன்ற பல பிரச்சினைகள் தோன்றும்.
முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுகள்
1. மைதா, தோல் நீக்கிய வெள்ளை அரிசிகள்
2. Sunflower, Canola போன்ற இறக்குமதி எண்ணெய்கள்
3. பிரெட், பிஸ்கட் உட்பட அனைத்து கடை உணவுகள்
4. கடையில் விற்கும் பால் மற்றும் பால் உணவுகள்
5. தூள் உப்பு
6. வெள்ளை சீனி
7. குளிர்பானங்கள்
8. போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர்.
9. குளிர்சாதன பெட்டியில் வைத்து சூடாக்கி உண்ணும் பழைய உணவுகள்.
இதனோடு ஷாம்பு, சோப்பு, முக பூச்சுக்கள் போன்றனவும் ஹோர்மோன் சமநிலையற்று போக காரணமாக உள்ளன. இவற்றை தவிர்ப்பது மிக நல்லது.
அத்தோடு சலவை செய்யும் பொழுதும், பாத்திரங்கள் கழுவும் பொழுதும் கையுறை அணிந்து கொள்வது மூலமும் பாதிப்புக்களை குறைக்கலாம்.
கீழே குறிப்பிட்டுள்ள யோகா ஆசனங்களை காலையும், மாலையும் தவறாது செய்து வருதல் மூலம் ஹோர்மோன் பாதிப்புக்களை சீர் செய்ய முடியும்.
சேதுபந்த ஆசனம் (Bridge Pose) - தரையில் மேல் நோக்கி படுத்து கால்களை இடுப்பு வரை மடித்திக் கொள்ள வேண்டும். கைகள் பக்க வாட்டில் இருக்க வேண்டும். பின் மெதுவாக வயிற்று பகுதியை மேல் உயர்த்த வேண்டும். இந்நிலையில் முடிந்தளவு எண்ணிக்கையில் சீராக மூச்சை இழுத்து வெளி விட வேண்டும்
புஜங்காசனம் (Cobra Pose) - விரிப்பில் குப்புற படுக்க விடும். கால்கள் இரண்டும் சேர்ந்து இருக்க வேண்டும். கைகள் நெஞ்சுப்பகுதிக்கு அருகில் பக்க வாட்டில் இருக்க வேண்டும். பின் மெதுவாக மூச்சை இழுத்தவாறு தலையையும், நெஞ்சு பகுதியையும் சேர்த்து பாம்பை போல் மேல் நோக்கி எழும்ப வேண்டும். கைகள் மற்றும் கால்கள் பூமியோடு இருக்க வேண்டும்.கண்கள் வானத்தை பார்க்க வேண்டும். இந்நிலையில் சீராக மூச்சை இழுத்து மூச்சை வெளிவிட்டவாறே முடிந்தளவு இருக்க வேண்டும்.
சசாங்காசனம் (Rabbit Pose) - காலை மடித்து உட்கார வேண்டும் கைகளை மேலே மூச்சோடு உயர்த்தி மூச்சை விட்டவாறே தலையை கைகளோடு சேர்த்து நிலத்தை நோக்கி கொண்டு வர வேண்டும். பின் கைகளை பக்க வாட்டில் வைத்து அப்படியே சீராக மூச்சை இழுத்து மூச்சை விட்டவாறே முடிந்தளவு இருக்க வேண்டும்.
உஷ்டிராசனம் (Camel Pose) - கால்களை மடித்து, முழங்காலில் நிற்க வேண்டும். பின் மெதுவாக பின் வளைத்து இடது கையால் இடது காலை பிடிக்க வேண்டும். பின் வலது கையால் வலது காலை பிடிக்க வேண்டும். இந்நிலையில் சீராக மூச்சை இழுத்து, மூச்சை விட்டவாறே முடிந்தளவு இருக்க வேண்டும்.
Comments
Post a Comment