துளசி மல்லி கசாயம்

 சளி,இருமல்,ஆஸ்துமா குறைக்கு உதவும் துளசி மல்லி கஷாயம்:


தேவையான பொருட்கள்:


பச்சைத் துளசி  –  50 கிராம்

சுக்கு                     –    20 கிராம்

மிளகு                   –   அரை ஸ்பூன்

ஏலக்காய்            –   5

தனியா(மல்லி விதை) – 20 கிராம்

பனை வெல்லம் –   தேவையான அளவு


செய்முறை:


முதலில்  துளசி , சுக்கு , மிளகு , ஏலக்காய்,  மல்லி ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு  தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும் .


பின்னர் அதனை வடிகட்டி அதனுடன் பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து  அருந்தவேண்டும்.


இதனை தினமும் காலை உணவுக்கு பின் அல்லது இரவு உணவுக்கு பின் எடுக்கவும்


பயன்கள்:


இந்த கஷாயத்தை குடித்து வந்தால் சளி, இருமல்,தும்மல்,மூக்கடைப்பு ஆஸ்துமா  மற்றம் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு முழு ஆரோக்கியம் பெறலாம்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி