விவசாய நிலம் வாங்கும் முறை
அறிந்து கொள்வோம்
🐓ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்...
🐓விடியற்காலையில்
சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உசுரு’ இருக்கு என்று அர்த்தம்.
கூவாவிட்டால் மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம்.
🐓சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவர். இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் சேவல் மண்ணைக் கிளறி அதனுள் உள்ள புழுக்களை தின்று மறுநாள் தெம்பாகக் கூவும்.
🐓மண்ணை கிளறி புழு கிடைக்கவில்லை என்றால், அந்த கூவலின் ஆற்றலில் தெரிந்துவிடும். புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது.
🐂 ஒரு விவசாய கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்குள் மேய விடவேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம்.
🐂 அப்படி அவை படுக்கும்
இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.
💊 அறிவியல் வளர்ந்து விட்டது எங்களால் எதையும் சாதிக்க முடியும்னு சொல்லி மக்களை நோயாளியாக்கி அவன் உயிரை காப்பாற்ற அவனையே மிரட்டி
காசு பறிப்பதுதான் உங்கள் உண்மையான அறிவியல் வளர்ச்சி.
👑 ஆனால் இயற்கையை
கடவுளாக பாவித்து வணங்கி இயற்கையோடு வாழும் மனிதன் உங்களுக்கு படிப்பறிவில்லாதவன்.
👑கற்றுக்கொள்ளுங்கள் இதுபோல் எங்கள் பாட்டன், பூட்டன் இன்னும் ஒளித்து வைத்துள்ளான் பல விசயங்களை...
🙏🙏🙏
Comments
Post a Comment