கருவேலமர காய் இடுப்புவலி எண்ணெய்
இடுப்பு வலி குணமாக:-
கருவேல மரத்தின் பச்சைக் காய்களை 100 கிராம் அளவில் சேகரித்துக் கொள்ளவும். இதை தண்ணீர்விட்டு விழுதாய் அரைத்துக் கொள்ளவும். சுத்தமான நல்லெண்ணெய் ஒரு லிட்டர் எடுத்து அடுப்பிலேற்றவும். எண்ணெய் கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்த விழுதை அதில் சேர்க்கவும். பின்னர் இந்த தைலத்தை ஆறச் செய்து வடிகட்டிக் கொள்ளவும்.
இத்துடன் மறுபடியும் 20 கிராம் தேன், மெழுகு சேர்த்து நன்கு காய்ச்சவும். தைல பதத்தில் இறக்கிவிடவும். இந்த தைலத்தை உடல் முழுக்க பூசி மசாஜ் செய்தால், உடல் வலியெல்லாம் தன்மை இந்த எண்ணெய்க்கு உண்டு. இதே எண்ணெயை தலைக்குத் தேய்த்தால் முடி கருமையாக வளரும்.
Comments
Post a Comment