அன்னாசிப்பழத்தோல்

 #பலவிதமான_கொடிய_நோய்களுக்கு_தீர்வு_தரும்_அன்னாசிப்பழத்_தோல்


வெளிப்புறம் கடினமாக இருந்தாலும் உட்புறம் மிகவும் இனிமையான சுவை உடையது பழம் அன்னாசிப் பழம். அன்னாசிப்பழம் நமக்கு பல நன்மைகளைப் புரிகிறது. மற்ற பழங்களைப் போல் சருமத்திற்கு இது சிறந்த நன்மைகளைச் செய்கிறது. குறிப்பாக இதன் மேல் புறத்தோல் பற்றிய நன்மைகளைப் பற்றி நாம் இந்த பதிவில் காணலாம்.


அன்னாசிப் பழ தோல் இருக்கும் என்சைம் உடலில் உள்ள அழற்சியைப் போக்க உதவுகிறது.

காயம் ஏற்பட்ட பிறகு அல்லது அறுவை சிகிச்சைக்கு பிறகு உண்டாகும் வீக்கத்தைக் குறைக்க உகந்தது.

மேலும் சைனஸ் பாதிப்பைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் உடலில் உள்ள பல்வேறு அழற்சியைப் போக்கவும் உதவுகிறது.

அன்னாசிப் பழ தோல் ஜீரணத்தை எளிதாக்க உதவுவதோடு மட்டுமில்லாமல் குடலில் உள்ள ஒட்டுண்ணிகள், மலச்சிக்கல், IBS அறிகுறிகள் ஆகியவற்றையும் எதிர்த்து போராட உதவுவதாக அறியப்படுகிறது. இவை ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகள் வளர்ச்சிக்கும் உதவுகின்றன.


அன்னாசிப் பழம் மற்றும் அதன் தோலில் இருக்கும் அதிக அளவு வைட்டமின் சி சத்து தொற்று பாதிப்புகளை எதிர்த்து போராடுகிறது மற்றும் தடுக்கிறது.

ப்ரோமிலைன் மற்றும் வைட்டமின் சி யின் சக்தி, கிருமிகளை எதிர்த்து போராட உதவுகிறது, சளியைக் குறைக்கிறது, இருமலைக் கட்டுப்படுத்துகிறது, காயத்தை ஆற்றுகிறது, ஒட்டுமொத்த உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இந்த இடத்தில் மறுபடியும் ப்ரோமிலைன் மந்திரம் வேலை புரிகிறது. கீல்வாதம் மற்றும் மூட்டு வலி உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வைத் தருகிறது.

அன்னாசிப் பழம் கொண்டு தயாரிக்கப்பட்ட பானம் இந்த வலியைக் குறைக்க நேரடியாக உதவுகிறது. இதனைத் தயாரிக்கும் முறையை கீழே காணலாம்.


அன்னாசிப் பழ செடியில் உள்ள பீட்டா கரோடின் மற்றும் வைட்டமின் சி சத்தின் காரணமாக கண் அழுத்த நோய் போன்ற சீரழிவு நோய்கள் தடுக்கப்படுகின்றன.


தாய்மை அடைய விரும்பும் பெண்கள் தங்கள் உணவில் கவனமாக இருத்தல் அவசியம். அன்னாசிப் பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் ப்ரோமிலைன் காரணமாக இதனை அனைவரும் விரும்பி உட்கொள்ள நினைப்பார்கள்.

கருப்பையில் உள்ள அழற்சியைக் குறைத்து, கருவுறுதலுக்கான சாதகமான சூழலை உருவாக்கித் தர இந்த பழம் உதவுகிறது.

வெதுவெதுப்பான டீ அல்லது சூப் செய்யும் முறையை பின்பற்றி பருகுவதால் ஆரோக்கியமான கருவுறுதலுக்கான உதவியைப் பெறலாம். மேலும் இதனைக் கொண்டு இனிப்புகள் தயாரித்து உட்கொள்ளலாம்.

அன்னாசிப் பழத்தின் தோலை பல்வேறு விதங்களில் பயன்படுத்தி உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.


#தேநீர்_தயாரிப்பது_எப்படி?


அன்னாசிப் பழத் தோலின் நன்மைகளைப் பெறுவதற்கு அதனைக் கொண்டு சூடாக அல்லது குளிர்ச்சியாக ஒரு தேநீர் தயாரித்து பருகலாம்.

அன்னாசிப் பழத்தின் தோலை உரித்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.

இதனுடன் இரண்டு லவங்கப் பட்டை, ஒரு சிறிய துண்டு இஞ்சி ஆகியவற்றை சேர்க்கவும். இந்த கலவையில் 2 கிளாஸ் அளவு தண்ணீர் சேர்க்கவும்.

அடுப்பை சிம்மில் வைத்து 20-25 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

பிறகு அடுப்பை அணைக்கவும். அடுத்த அரை மணி நேரம் இந்த கலவை அப்படியே இருக்கட்டும், தேவைபட்டால் இனிப்பு சேர்த்துக் கொள்ளவும். சூடாக அல்லது குளிர்ச்சியாக இதனைப் பரிமாறவும்.


#நோயற்ற_வாழ்விற்கு

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி