நோய்எதிர்ப்பு சக்திபானம் 2

 வீட்டில் எளிமையான முறையில் எப்படி நோய் எதிர்ப்பு சக்தி பானம் தயாரிக்கும் முறை


பானம் தயாரிக்க


1.எலுமிச்சை - 1 முழு பழம்

2.இஞ்சி - 5g

3.மஞ்சள் - 1/4 ஸ்பூன்

4.மிளகுபொடி - 1/4 ஸ்பூன்

5.அதிமதுரம் - 5g or 1/2 ஸ்பூன் அளவு

6.துளசி இலை - 5

7.தூய தேன் - 2 ஸ்பூன் அளவு

8.பனைவெல்லம்  - 10g

எடுத்துக்கொள்ள வேண்டும். 


இயற்கை மூலிகை பானம் செய்முறை


முதலில் 250 மில்லி லிட்டர் தண்ணீரில் எலுமிச்சை பழம் ஒன்றின் சாறை எடுத்துக்கொள்ளவும்.

ஒரு நடுத்தர குடும்பத்திற்கு போதுமானது.


அதிலேயே 5 கிராம் இஞ்சியையும் தட்டி போட்டுக்கொள்ளுங்கள்.

மிக்ஸி வேண்டாம் அம்மிக்கல் தட்டவும்.


1/4 மஞ்சள் டீஸ்பூன், 1/4 டீஸ்பூன் மிளகு தூளையும், 1/2 டீஸ்பூன் அதிமதுரம் மற்றும் 5 துளசி இலையை சேர்த்து கொள்ளவும்.

இவற்றில் ஒன்றிரண்டு பொருள்கள் இல்லையென்றால் பரவாயில்லை


தேவையான அளவுக்கு தேன் பனை வெல்லத்தை தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.

ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளவும்


இப்போது எலுமிச்சை சாறு, இஞ்சி, மஞ்சள் தூள், மிளகு தூள், துளசி, அதிமதுரம் கலந்த நீரை பாத்திரத்தில் ஊற்றி குறைவான அளவு அடுப்பு தீயில் வையுங்கள்.

கொதிநிலை வரும் பட்சத்தில் வெல்லம் சேர்த்துக்கொள்ளவும். சற்று கலக்கிவிட்டு இறக்கினால் சுவையான மற்றும் ஆரோக்கியமான பானம் தயார். குடிப்பதற்கு ஏற்ப வெதுவெதுப்பான சூட்டில் குடிக்கவும்.


பானத்தில் கலக்கும் மஞ்சள் என்பது உணவுகளின் ரத்தினம். ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டியெழுப்ப இது பெரிதும் உதவுகிறது. எலுமிச்சை வைட்டமின் சி அதிகம் கொண்டது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது, மேலும் பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இப்படி நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் மிகவும் பயனுள்ளவையாகும்.


இருப்பினும் ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழியை சற்று கருத்தில் கொள்ள வேண்டும். தேவையான அளவு மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமாகும். அதாவது பெரியவர்கள் 50 மி. லி. சிறியவர்கள் 20 மி. லி. என ஒரு நாளைக்கு இரண்டு வேளை கொடுக்கலாம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி