தவிர்க்க வேண்டிய உணவுகள்

 தற்சமயம் நாம் தவிர்க்க வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் சில உணவுகள் 


நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த வழிகளில் ஒன்று, அன்றாட உணவில் பல்வேறு வகையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்து உண்பது தான்.

 

அப்படி ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை நாம் சாப்பிட்டு வந்தால் நம்மை தாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களிலிருந்து வரும் தாக்குதல்களை எளிதில் தடுக்கலாம்.


ஆனால் பல நேரங்களில் நாம் கண் விருப்பப்படும் தின்பண்டங்கள் மற்றும் ஜூஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நோயெதிர்ப்பு சக்தியை இழந்து விடுகிறோம்.


அப்படி நம் நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கும் சில உணவுப் பொருட்கள் மற்றும் ஜூஸ் வகைகளை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


1.சோடா


பல நன்மைகள் இருப்பதாகக் கூறும் ‘டயட்’ ஜூஸ் வகைகளை நீங்கள் அருந்தும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருங்கள்.


ஏனென்றால் கடைகளில் வாங்கும் பழ ஜூஸ் வகைகள் 100 சதவீதம் பழச்சாரினால் தயாரிக்கப்பட்டது என்று கூறினாலும் தேவையற்ற கெமிக்கல்கள் கலந்து தயாரிக்கப்படுகின்றன.


அத்தகைய ஜூஸ் வகைகளில் நார்ச்சத்து இல்லை. மேலும் கலோரிகள் அதிகமாக இருக்கும். இதனால் உடல் எடை அதிகரிப்பதாக பல அறிக்கைகள் கூறுகின்றன.

 

உடல் பருமன் நோயெதிர்ப்பு மண்டலத்துடன் இணைத்துள்ளதால், சோடா மற்றும் பிற இனிப்பு பானங்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என ஆய்வுகள் கூறுகின்றன.


2.காபி


தினமும் சூடான ஒரு கப் காபியுடன் தான் பலரும் ஒவ்வொரு நாளையும் ஆரம்பிகின்றனர். அப்படி நாம் அருந்தும் ஒன்று அல்லது இரண்டு கப் காபி எந்தத் தீங்கும் செய்யாது என்றாலும், அந்த நாளில் உள்ள நம்முடைய நோயெதிர்ப்பு சக்தி முற்றிலும் அழிந்து போவதாக ஆய்வுகள் கூறுகின்றன.


ஏனென்றால் காப்பியில் அதிகப்படியாக உள்ள காஃபின் அதிக அளவு கார்டிசோலை வெளியிடும். இது நோயெதிர்ப்பு சக்தியை முற்றிலும் அளித்து விடும். இதனால் காஃபின் நிறைந்த பானங்களை அருந்துவதை குறைத்து விடுங்கள்.


3.மிட்டாய்கள்


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிட்டாய்களை விரும்பி சாப்பிடுவோம். இது நம் உடலுக்கு பல வழிகளில் தீங்கை ஏற்படுத்துகிறது.


இனிப்பு சுவை நிறைந்த மிட்டாய்கள் மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலில் அழற்சியை அதிகரிக்கின்றன.


அழற்சி பண்புகள் அதிகரிக்கும் போது, ​​உடலின் நோயெதிர்ப்பு சக்தி குறைக்கிறது. ஆகவே பசியை கட்டுப்படுத்த பழ வகைகளினால் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.


4.பொரித்த உணவுகள்


பிரஞ்சு பிரெய், கோழி இறைச்சி மற்றும் பொரித்த உணவுகள் உடலுக்கு பலவிதமான தீங்குகளை ஏற்படுத்துகின்றன. இவை உடலில் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது.


மேலும் பொரித்த உணவு பொருட்களில் உள்ள அதிக கொழுப்பு மற்றும் கிரீஸ் குடலில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்கிறது.


இதுவும் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது. மேலும் இந்த உணவு வகைகள் நீரிழிவு மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்துகிறது.


5.மதுபானம்


நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புவோர் பீர், ஒயின் அல்லது ஆல்கஹால் நிறைந்த பானங்கள் ஆகியவற்றை தவிர்த்துவிடுங்கள்.


ஒரு கிளாஸ் ஆல்கஹால் அதிக தீங்கை ஏற்படுத்தாது என்றாலும், அதிகப்படியான ஆல்கஹால் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை பெரிதும் பாதிக்கிறது.


அதிகப்படியான குடிப்பழக்கம் நிமோனியா மற்றும் பிற சுவாச நோய்களுக்கு வழிவகுக்கும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி