கருத்தரிக்க

 *எளிதில்கருத்தரிக்கும் வழிகள்:-*


*1).கர்ப்பப்பை:-


பெண்களுக்கு கர்ப்பப்பை, இரண்டு கருமுட்டை பை, மற்றும் கரு இணைப்பு குழாய் அமைந்திருக்கிறது. இந்த இரண்டு கருமுட்டை பைகளிலும் 3 அல்லது 4 முட்டைகள் வளரும். இதில் ஆரோக்கியமாக தனித்து வளரும் ஒரு முட்டை தான் கருமுட்டையாக இருக்கும். இவை மேலும் வளர்ந்து மாதவிடாய்க்கு பிறகு 14 ஆம் நாளில் வெளிவரும். இப்படி வரும் கருமுட்டையின் ஆயுள் காலம் 24 மணி நேரம் என்றாலும் அவை வீரியத்தோடு இருக்கும் காலம் 15 மணி நேரம்.


இந்த நேரத்தில் உடலுறவு கொள்ளும் போது ஆண்களின் வீரியமிக்க விந்தணுக்கள் ஒன்று இந்த கருமுட்டையுடன் இணைந்தால் அது கருவாக மாறும். இல்லையெனில் அந்த கருமுட்டை இப்படிதான் கருத்தரிப்பு நிகழ்கிறது. இதில் கவனிக்க வேண்டியது பெண்களது மாதவிடாய் சுழற்சி காலம் சீரான முறையில் உரிய இடைவெளியில் வெளிப்படுகிறதா!? என்பது தான்.


*2).மாதவிடாய் காலம்:-*


எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியான சுழற்சியில் மாதவிடாய் உண்டாவதில்லை. சிலருக்கு 28 நாட்களும், சிலருக்கு 30 நாட்களும், சிலருக்கு 35 நாட்களுமாக இருக்கும். மேலும் சிலருக்கு ஒவ்வொரு மாதமும் இந்த நாட்களின் இடைவெளியில் முன்கூட்டி அல்லது தள்ளி வேறுபாடு உண்டாகும். பெரும்பாலும் எல்லோரும் மாதவிடாய் முடிந்து 5 ஆம் நாள் முதல் உடலுறவு கொண்டால் கருத்தரித்தல் சாத்தியமாகிறது என்று நினைக்கிறார்கள்.


ஆனால் மாதவிடாய் நிறைவு நாளான 5 ஆம் நாள் தொடங்கி அடுத்த மாதவிடாயின் முதல் நாள் வரை கருத்தரித்தலுக்கு ஏற்ற காலம் தான் என்று சொல்லலாம். அதே நேரம் கருமுட்டை வெளிப்படும் நேரத்தில் உறவு கொண்டால் கருத்தரிக்க வாய்ப்பு மிகவும் அதிகம்.


*கருமுட்டை வெளியாகும் நாள்:-*


முதலில் உங்கள் மாதவிலக்கு சுழற்சியை காலண்டரில் குறித்துகொள்ளுங்கள். தொடர்ந்து மூன்று மாதங்கள் உரிய இடைவெளியில் மாதவிடாய் சுழற்சி நடைபெறு கிறதா என்பதை கவனியுங்கள். 28 நாட்கள் அல்லது 30 நாட்கள் என இந்த இடைவெளி யில் மாதவிடாய் வந்தால் நீங்கள் சரியான முறையில் திட்டமிடலாம். மாதவிடாய் முடிந்த பிறகு 14 ஆம் நாளில் கருமுட்டை வெளிப்படும்.


(சில பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் கூட கருமுட்டை வெளியேறும் நாட்களில் வித்தியாசம் இருக்கும். சில பெண்களுக்கு மாதத்தில் இரண்டு கருமுட்டை கூட வெளியேறும்) இவை வெளியேறிய 24 முதல் 30 மணி நேரத்துக்குள் ஆணின் விந்தணுக்களை சேர வேண்டும். ஆணின் விந்தணுக்கள் 5 நாள்கள் வரை கருப்பை குழாய்க்குள் வீரியமாகவே இருக்கும் என்பதால் கருமுட்டை இணையும் போது கருத்தரித்தல் சாத்தியமாகும்.


*கரு உறுதி:-*


கருமுட்டையும் விந்தணுக்களும் இணையும் போது அவை கருப்பை நோக்கி நகர்ந்து உயிரணுக்களாக பிரியும். இவை கருப்பையினுள் சென்றதும் கருவுற்ற முட்டை கருப்பையின் வெளிப்புற பகுதியிலிருந்து உள்புறம் செல்லும் பகுதியில் கர்ப்பப்பைக்குள் தங்க வேண்டும். அப்போதுதான் கரு உறுதி செய்யப்படும். கருவுற்ற முட்டைகளில் சுமார் 40% கருப்பையை தாண்டி வெளிப்புற கருப்பை சுவரில் தங்கிவிடும். இது தான் டம்மி அல்லது பொய் கர்ப்பம் என்றும் அழைக்கப்படுகிறது.


*உறவு நிலை:-*


உங்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரிஸ் போன்ற பிரச்சனைகள் இல்லாத பட்சத்தில் மாதவிடாய் காலத்துக்கு பின்பு 14 ஆம் நாளில் கருமுட்டை வெளியாகும் நாளுக்கு முந்தைய இரண்டு நாள்களிலிருந்து உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்க வாய்ப்பு 92 முதல் 96% வரை அதிகம். ஒவ்வொரு மாதமும் நீங்கள் குழந்தைபேறுக்கு தயாராவதாக இருந்தால் நீங்கள் உறவு கொள்ளும்போதும் உங்கள் நிலையை மாற்றி கொள்வது நல்லது.


விந்தணுக்கள் வேகமாக நீந்திசெல்லும் படியான நிலைக்கு உறவின் போது கருமுட்டையும் விந்தணுக்களும் சேரும் நேரத்திலும் இவை ஆரோக்கியமாக இருந்தால் கருவும் உறுதியாக வளரும்.

மாதவிடாய்க்கு பின்பு 5 ஆம் நாள் முதல் அடுத்த மாதவிடாய் நாட்கள் வரை உடலுறவு கொள்வதன் மூலம் கருவுறும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.


மாதவிடாய் சீரற்று இருக்கிறது. அப்படியெனில் கருமுட்டை வெளியேறுவதை எப்படி கண்டறிவது என்னும் குழப்பம் பலருக்கு உண்டு. கருமுட்டை வெளியேறுவதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்துகொள்ளலாம்.

அதற்கு முன் இது குறித்து ஆய்வுகள் என்ன சொல்கிறது என்பதையும் அறிவோம்.


*ஆய்வு சொல்லும் தகவல்:-*


20 முதல் 44 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். இவர்கள் மாதவிடாய் காலத்துக்கு பிந்தைய கருமுட்டை வெளியாகும் நாள் கணக்கில் கொண்டு உறவு கொண்டதாக தெரிவித்தார்கள்.


அதன்படி38% பெண்கள் ஒரு மாதத்திலும், 68% பெண்கள் மூன்று மாதகாலங்களிலும், 81% பேர் ஒரு வருட காலத்திலும் கருத்தரித்ததாக தெரிவித்தார்கள்.


அதன்படி38% பெண்கள் ஒரு மாதத்திலும், 68% பெண்கள் மூன்று மாதகாலங்களிலும், 81% பேர் ஒரு வருட காலத்திலும் கருத்தரித்ததாக தெரிவித்தார்கள்.


முதல் ஆறுமாதத்தில் கருத்தரிக்காத பெண்கள் அடுத்த ஆறுமாதங்களில் கருத்தரிக்க அதிக வாய்ப்புண்டு. ஆய்வுகள் முடிவுகள் பெண்களின் உடல்நிலையை கொண்டு சற்று மாற்றம் இருக்கும் என்று கூறினாலும் பெண்கள் மாதவிடாய்க்கு பிறகு உரிய இடைவெளியில் உறவு கொண்டால் 84% கருத்தரிக்க வாய்ப்பு இருப்பதாகவே கூறுகிறது.


மனதில் கொள்ள வேண்டியவை:-


நீங்கள் திருமணத்துக்கு பிறகு தற்காலிகமாக குழந்தை பேறை நிறுத்தியிருந்தால் இந்த வாய்ப்புகள் சற்று தள்ளிப்போக வாய்ப்புண்டு.

கருத்தரிக்க முயற்சி செய்யும் போது உறவின் போது அந்தரங்க உறுப்பில் எண்ணெய், ஜெல் போன்றவற்றை தவிர்த்துவிடுங்கள்.

இவை விந்தணுக்களின் வீரியத்தை குறைக்கும். உறவுக்கு பின் உடனடியாக பெண்கள் தங்கள் உறுப்பை சுத்தம் செய்வது கருத்தரித்தலை தள்ளிபோட செய்யும்.


*கருமுட்டை அறிகுறி:-*

கருமுட்டை வெளியேறும் போது பெண்களின் உடலில் வெப்பம் அதிகமாக இருக்கும்.உறவின் போது ஆண்களை போன்று பெண் உறுப்பில் இருந்தும் ஒரு வெள்ளை திரவம் வெளிப்படும். இது நீர் போன்று இல்லாமல் சற்று அடர்த்தியாக காணப்படும். அப்படி இருந்தால் கருத்தரிக்க அதிக வாய்ப்புள்ளதாக எடுத்துகொள்ளலாம்.மாதவிடாய் சுழற்சி சீரான இடைவெளியில் இருந்தால் மேற்குறிப்பிட்ட நாளில் உடலுறவு கொள்வதன் மூலம் எளிதில் கருத்தரிக்க வாய்ப்புண்டு.உங்கள் மாதவிலக்கு உரிய இடைவெளியில் வந்தால் இந்த குறிப்புகள் நிச்சயம் உங்களுக்கு உதவும்.ஆனால் மருத்துவர்கள் அறிவுறுத்துவது மாதவிடாய் முடிந்த காலத்திலிருந்து அடுத்த மாதவிடாய் காலம் வரை தொடர்ச்சியான தாம்பத்தியம் மேற்கொண்டாலே கருத்தரிப்பு சாத்தியமாகும் என்பதுதான்.

மேலும் விவரங்கள் மற்றும் மருத்துவ உதவிக்கு தொடர்பு கொள்ளவும்:-

Dr.M.Ramachandran.B.A.M.S.,

Nature Care Ayurveda

Cell:7010302640

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி