மூட்டுவலி வகைகள்

 🇨🇭#மூட்டுவலிகளில்_என்னென்ன #வகைகள்_இருக்கு…❓


🇨🇭#அதன்_பாதிப்புகள்_என்ன❓❓❓


👉 சில மூட்டுகளை மட்டும் பொதுவா பாதிக்கிற #Mono_arthritis  


👉 பல மூட்டுகளை பாதிக்கிற வியாதியை #Poly_arthritis   என இரண்டு வகையான பிரிக்கலாம்.  


⭕ #மூட்டு_வியாதிகளில்_பல_வகை

#உண்டு.


🔯  1.முதியவர்களை  அதிகமாக பாதிக்கும் ஆஸ்டியோ  ஆர்த்ரைடீஸ் எனப்படும் சந்திவாதம். 


▶ மூட்டுகளில் உள்ள எண்ணெய் பசை குறைவினால் வரக்கூடியது.


⏩ முழங்காலில் உள்ள இணைப்பிலும், எலும்புகளுக்கிடையிலும் ஒருவித ஜவ்வு இருக்கும். இதற்கு கார்டிலேஜ் என்று பெயர். இந்த ஜவ்வு தான் முழங்கால் மூட்டு தேய்ந்து போகாமல் பாதுகாக்கிறது. 


▶ முழங்கால் மூட்டும், எலும்பும் ஒன்றோடொன்று ஊராய்ந்து போகாமல், எளிதில் அசைவதற்கு ஜவ்வு அவசியம். 


▶ ஒருவேளை இந்த ஜவ்வு தேய்ந்து போகும் போதுதான் வலி உண்டாகிறது.

நன்கு உறுதியான மேற்புறமுள்ள இணக்கமான சவ்வு (முழங்கால் மூட்டு இணைப்பின் மீது மிருதுவாக இந்த திசு இருக்கிறது) கிழிந்து விடுதல் மற்றும் நீங்கிவிடுவதன் மூலமாக எலும்புகள் சொரசொரப்புடன் ஒன்றுடன் ஒன்று நேரிடையாக உராய்வதால் வலி மற்றும் வீக்கம் ஆகியவை ஏற்படுகிறது


▶ பொதுவாக 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வரலாம் .  எந்தவிதமான காரணமும் இல்லாமலும் வயதின் காரணமாகவும் வரலாம்


▶ அதிகமாக வாகனம் ஓட்டுவதாலோ, 

ஹார்மோன் கோளாறுகளாலோ, 

பெண்களுக்கு கர்ப்பபை எடுத்தால் எஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் குறையும்.  


▶ மாதவிடாய் நின்ற பின்னும் இந்த ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் குறைந்துவிடும்.  இது எலும்பில் கால்சியம் சத்தை தக்கவைத்துக்கொள்வதில் பிரச்சினை உண்டுபண்ணி எலும்பை வலுவிக்க வைக்கும் வியாதியான 

osteo porosis  (கடல் காற்றில பக்கத்தில் இருக்கிற இரும்புத் தகரம் தானாக  அரிக்கப்பட்டு ஓட்டை விழுகிற மாதிரி பெரிய  எலும்புகளில் கண்ணுக்குத் தெரியாத  ஓட்டைகளை உண்டுபண்ணும்) 

உருவாக காரணமாக அமைந்துவிடும். 


⏩ அதிக எடைபோட்டாலும் (குண்டாக) இது சீக்கிரமாக வரலாம்.  நடக்கும் போது கூட வலி ஏற்படலாம்.  இந்த நோய் எந்த மூட்டில் வேண்டுமானாலும் வரலாம்.  உடல் எடையை  தாங்கக்கூடிய மூட்டுகள் அதிகமாக பாதிக்கப்படும்.  படிக்கட்டில் ஏறும் போது இந்த நோயாளிகள் அதிகமாக சிரமத்தை உணர்வார்கள்.


🈵 2. Rhematioid Arhtritis - முடக்கு வாதம் என்னும் -வாத  ரத்தம்


➡20 வயது முதல் 50 வயது உள்ளவர்களுக்கு வரலாம். பெரும்பாலும் ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.


➡தூங்கி எழுந்தவுடன் மூட்டுகளில் இறுக்கமும் - வலியும் கூடுதல் தெரியும்.


➡ இது வாத நீரில் ஒருவகையும்ணுகூட சொல்லலாம். குளிர்ந்த நேரங்களில் அதிக வலியா தெரியும்..


➡ பொதுவாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகள் பாதிக்கப்படுகிறது. கைமூட்டுகளை, கால்கள் என்றால் இரண்டு கால் மூட்டும் பாதிக்கப்படுகிறது. (Symmetrical Arthritis) – RA Factor – Positive 

ஆக ரத்தப் பரிசோதனையில் தெரியும்...  


⏩ பரம்பரையாகவும், அடிபடுவதாலுமம், மன உளைச்சலாலும் கூட இது வரலாம். 


⏩ மூட்டுகளை தவிர நுரையீரல், இருதயம், கண்களைக் கூட இது பாதிக்கும். 


▶ வயிற்றுக் கோளாறுகள் பிற்காலங்களில் ஏற்படலாம்.


↙ Rheumatic Fever Licks the Jounts & Kicks the Heart’ ன்னு சொல்லுவாங்க.  இதைத் தடுக்கத்தான் ஆங்கில மருத்துவத்தில் பென்சிலின் ஊசி போடுவாங்க.  ஆனால் அது முழு தீர்வு அல்ல.  


↗ தோள்பட்டை வலியும், கால் மூட்டு வலியும், மூட்டுகளின் அமைப்பும் மாறிவிடலாம்.  விரல்கள் வாத்து கழுத்துப் போலவும், கட்டைவிரல் ‘Z’ போலவும் மாறிவிடலாம். 


🈳  3.குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் வரக்கூடிய மூட்டு வியாதி 


◀16 வயதுக்கும் குறைவாக இருப்பவர்களை தாக்கும்.


◀ஒரு மூட்டோ அல்லது பல மூட்டுகளோ பாதிக்கப்பட்டிருக்கலாம். 


◀ வலியும், மூட்டுகளின் இயக்கமும் குறையலாம்


◀மூட்டுகள் சூடாகவும் இருக்கும். 


◀சுரத்தினாலோ, அடிபட்டதினாலோ, காசநோய், பொன்னுக்கு வீங்கி, ஜெர்மன் அம்மை நோய்கள் வந்த குழந்தைகளுக்கும் இது வரலாம். 


▶ 6 வாரத்திலிருந்து 3 மாதம் வரை இருக்கலாம்.


▶ மூட்டு வலியும், கல்லீரல் வீக்கமும், விட்டுவிட்டு வரும்


↗ இந்நோயை நிர்ணயம் செய்து தகுந்த மருந்துகளைக் கொடுத்துகுணப்படுத்தா விட்டால் மூட்டுவலியும், மூட்டு வேலை செய்யாமல் போவதையும் தடுக்க முடியாது. 


➡ அதனால் 5 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்கள் #ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் #பாக்டீரியாவினால் தொண்டை அலர்ஜி ஏற்பட்டு ருமாட்டிக் சுரத்தினால் பாதிக்கப்படுகிறார்கள். இதனையும். ஆரம்பத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம்.


🈯 4. Gout arthritis  எனப்படும் முட்டுகளில் உப்பு நீரால் உண்டாகும் மூட்டுவலி-#ஆமவாதம்


➡ Gout arthritis  என்ற மூட்டுவலி யூரிக் அமில படிவுகள் மூட்டுகளின் உள்ளேயும், வெளியேயும் படிவதினால் ஏற்படுகிறது.


➡ 70 சதவிகிதம் யூரிக்  அமிலம் சிறுநீர் மூலமும், செரிமான  உறுப்புகள் மூலமும் வெளியேற்றப்படுகிறது.


➡ அதிகமாக வெளியேற்றப்படாமல் இருக்கும் போது இப்படி ஏற்பட்டுவிடுகிறது.  

அடிபடுவதினாலோ, 


➡ அதிக மது அருந்துவதாலோ நிறைய அசைவ உணவு வகைகள் சாப்பிடுவதாலோ, இனிப்பு ரொட்டிகள் சாப்பிடுவதாலோ, காளாண்களை உண்ணுவதாலோ, காலிபிளவர்களை சாப்பிடுவதால் கூட உண்டாகலாம், 


➡ எடைஅதிகரிப்பு, பரம்பரை, 

சுற்றுப்புற சூழ்நிலைகள் முதலியவையும் இதனை உண்டாக்கலாம்.


⏩ பெண்களுக்கு  மாதவிடாய் நிற்கும் போது 40-50 வயது வரை உள்ளவர்களுக்கும் அதிகம் வாய்ப்புண்டு என்றாலும், எந்த வயதிலும் இது ஏற்படலாம்.  இது ஆண்களை அதிகமாக பாதிக்கிறது.  சிறிய மூட்டுகள் முதற்கொண்டு பெரிய  மூட்டுகள் வரை எல்லாமும் இதனால் பாதிக்கப்படலாம். இதற்காக கொடுக்கப்படும் ஆங்கில மருந்துகள் சமயங்களில் சுத்தமாக பலனளிக்காமல் போகின்றது. உணவு கட்டுப்பாடு இல்லாமல் எந்த மருந்தும் உதவாது. மூட்டுகளில் அதிக வீக்கமும் இருக்கும். பாரா தைராய்டு சுரப்பிகள் அதிக வேலையும், தைராய்டு சுரப்பிகளின் குறைவான வேலையும் இதற்கு காரணமாக அமையலாம்.


⏩ ஆயுர்வேதத்தில் இந்த நோயை 

ஆமவாதம்னு சொல்லுவாங்க ஆமம் எனப்படுவது - நமது உடம்பில் செரிக்கப்படாமல் விஷ்மாக சேர்ந்த உணவுகள். 


📶 5. தொற்று கிருமிகளால் வரும் மூட்டுவலி (Infective Arthritis)


👉 பாக்டீரியா, வைரஸ், கொனோரியா , சிபிலீஸ், எயிட்ஸ் போன்ற பல வியாதிகளும், சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களாலும் இந்த மூட்டு வலி உருவாகலாம்.


➡ மூட்டு வலியும் வீக்கமும் மூட்டைச்சுற்றி சிவந்து காணப்படும். காய்ச்சல், குளிர், பொதுவான உடல் சோர்வு,வலி தோன்றும்


➡ நிவாரணி  பொருட்கள் பயன்படுத்துபவர்கள் , சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள், சிலவகை புற்றுநோய் உள்ளவர்களும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.


 ➡ பொன்னுக்கு வீங்கி, ஜெர்மன் , மணல்வாரி அம்மை.  Hepatitis – B  வைரஸ் போன்ற வைகளாலும் பாதிக்கப்படும்போது இந்நோய் மூட்டுகளில் வலிகளை உண்டாக்கி பிறகு  மூல காரணமான தொற்றுநோய் குணமாகும்போது இதுவும் தானாகவே குணமாகிறது. 


➡ SLE (Systemic Lupus Erythematosus) 

நோய்கிருமிகளும் மூட்டுவலிக்கு காரணமாகலாம்.  

பெண்களை இது அதிகம் பாதிக்கும்.  தோல், மூட்டுகள், சிறுநீரகம், 

முதலியவை இதனால் பாதிக்கப்படுகிறது.  பல மூட்டுகளும் பாதிப்படையலாம்.  முகத்தில் வண்ணத்துப்பூச்சி போன்ற தழும்பு ஏற்படலாம்.  வெயில் அலர்ஜி, வாய்புண்ணும் இதில் வர வாய்ப்புண்டு.


🈸 6. Ankylosing Spondylosis  - 

#தனுர்வாதம்


👉 HLA-B 27E என்ற ரத்தப் பரிசோதனை மூலம் கண்டுபிடித்து உறுதி செய்யப்படும் இந்த நோய் முதுகு வலி, கழுத்து வலியில் ஆரம்பிக்கும். இந்த நோய் முதுகெலும்பில் நடுவிலே இருக்கும் மிக மெல்லிய சவ்வு போன்ற Disc எனப்படும் தட்டுப்போன்ற Shock Observer போல வேலை செய்யும் அமைப்பை கெடுத்து தடிமனாகி Disc -  சவ்வு கடினமாகி ஒன்று மேல் ஒட்டிக்கொண்டு திரும்ப இயலாத அளவுக்கு சிரமத்தை கொடுக்கும் பயங்கரமானவியாதி இது


🈁 7. பலவீனம் சக்தி இழப்பீட்டினாலும் ஏற்படும் மூட்டுவலி


➡ அளவுக்கு மீறிய உடற்பயிற்சி, #அளவுக்கு_மீறிய_விந்து_இழப்பு (புணர்ச்சி ) முட்டில் உள்ள பசைகளை குறைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதை ஆயுர்வேதத்தில் சுக்கிரம் என்னும் விந்து குறைவினால் சந்திசிதிலத்வம் (மூட்டுகள் வலுவிலந்து போதல்) ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.


🇨🇭#வைத்தியர்_யாஸீன் 


☎ 999 437 9988 ----   81 4849 6869


#மேலப்பாளையம்_திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி