மூளை பலம் பெற

 *   மறதி நோய் நீங்க மூளை பலம் பெற

                     மூலிகை மருத்துவம்


   மருதாணி இலை எனும் மருதோன்றியின் விதையை இளம் சூட்டில் கருகாத வண்ணம் வறுத்து பொடி செய்து கொண்டு இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு இந்தப் பொடி மூழ்கும் அளவிற்கு தேனை ஊற்றி நன்றாக கிளறி  வைத்துக் கொண்டு


       இதில் ஒரு ஸ்பூன் எடுத்து ஆகாரம் சாப்பிடுவதற்கு முன் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இதை சாப்பிட்டு வந்தால் மூளையின் பலவீனம் நீங்கி மூளை பலம் பெறும்


  தலையில் ஏற்படும் நோய்கள் அனைத்தும் நீங்கும் மறதி நோய் விலகும் ஞாபகசக்தி ஏற்படும் மயக்க நோய் தீரும் மதிமயக்கம் குணமாகும்


மூளை சுறுசுறுப்பாக இயங்க


  மூங்கில் வேர் பொடியை மூன்று கிராம் எடுத்து முந்நூறு மில்லி தண்ணீரில் போட்டு இதை பாதியாக சுண்டக் காய்ச்சி

வடிகட்டி வைத்துக் கொண்டு இதில் சிறிதளவு சீனி சர்க்கரை கலந்து தினம் இருவேளை சாப்பிட்டு வர அதிக குளிர்ச்சியாலும் அதிக வெப்பத்தாலும் தலையில் ஏற்படும் அனைத்து நோய்களும் நீங்கி கண் காது மூக்கு வாய் மற்றும் மூளை சம்பந்தமான எந்த நோய்களும் வராமல் உடலை காக்கும் இதன் விளைவாக மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும்


        மறதி நோய் நீங்க 

ஒரு மாபெரும் மருந்து


   பிரம்மந்தண்டு மூலிகையை முழு செடியாக வேருடன் கொண்டு வந்து தண்ணீரில் போட்டு சுனை போக நன்றாக அலசி இதை காயவைத்து இடித்து துணியில் சலித்து வஸ்திரகாயம் செய்து கொண்டு இதில் ஒரு கிராம் அளவு எடுத்து பசும் பாலில் கலந்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து பதினைந்து நாட்கள் சாப்பிட்டு வர ஞாபக மறதி நோய் நீங்கும் இரத்தம் சுத்தமாகும் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும் உடலுக்கு சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் உண்டாகும்


மேலும் ஞாபக சக்தியைத் தரும் நல்ல மருத்துவம் இது


            வளமுடன் வாழ வாழ்த்துக்கள்    

                      சித்தர்களின் சீடன்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி