சங்கன் இலை

 சர்வ விஷங்களையும் வியாதிகளையும்  

          நீக்கும் சங்கிலை வைத்தியம்


    சங்கிலை மிளகு திப்பிலி 

இவை மூன்றையும் சம அளவாக பொடிசெய்து இதில் ஐந்துகிராம் எடுத்து முந்நூறு மில்லி தண்ணீரில் கலந்து பாதியாக சுண்ட காய்ச்சி காலை வெறும் வயிற்றில் இதை பருகிவந்தால் இதன் மூலம்  நுரையீரல் வலிமை பெறும்


சுவாச தொந்தரவுகள் அனைத்தும் நீங்கும் உடலுக்கு தேவையான பிராணசக்தி முழுமையாக கிடைக்கும் 

ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படாது எப்பொழுதும் ஆரோக்கியமாக வாழலாம்


நாட்பட்ட சுரம் நீங்க

  

  சங்கன் வேரை இடித்து பொடி செய்து இதில் மூன்று கிராம் எடுத்து தேனில் குழைத்து தினம் இருவேளை ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட சுரம் மற்றும் உட்காய்ச்சல் நீங்கும்


சர்க்கரை நோய் குணமாக


    சங்கன் வேர் பட்டையை பொடி செய்து இதில் மூன்று கிராம் எடுத்து தண்ணீருடன் கலந்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து பருகி வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பத்தே நாட்களில் குறைந்து சமநிலைக்கு வந்துவிடும்


சுவாச கோளாறுகள் நீங்க


   சங்கிலை இண்டு இலை தூதுவளை கண்டங்கத்திரி சுக்கு இவை அனைத்தையும் சமமாகப் பொடி செய்து இதில் மூன்று கிராம் எடுத்து 300 மில்லி தண்ணீரில் கலந்து இதை பாதியாக காய்ச்சி காலை வேளையில் பருகி வந்தால் சுவாசம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும் இதன் மூலம் சுவாசம் சீராக நடைபெறும்


உடல் வலிமை பெற


  சங்கிலையை மட்டும் பொடி செய்து இதில் மூன்று கிராம் எடுத்து இதை தேனுடன் குழைத்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் உறுப்புகள் அனைத்தும் வலிமைப் பெறும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்


வாத நோய்கள் நீங்க


  சங்கிலை மற்றும் சங்கன் வேர் பட்டை இரண்டையும் சம அளவாக எடுத்து பொடிசெய்து இதில் மூன்று கிராம் பொடியை வெந்நீரில் கலந்து காலை மாலை இரண்டு வேளையும் தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகி வந்தால் பாரிச வாதம் நீங்கும் வாய்வு தொல்லை விலகும் ஆரம்ப நிலையிலுள்ள பக்கவாதம் குணமாகும்


உடல் வலி நீங்க 


  சங்கிலை வேப்பிலை குப்பைமேனி நாயுருவி நொச்சி இவைகளை வகைக்கு ஒரு கைப்பிடி எடுத்து இதை நீரிலிட்டு காய்ச்சி இதில் வேது பிடித்து வந்தால் வாதத்தால் ஏற்பட்ட வீக்கம் குணமாகும்


மூட்டுவலிகள் நீங்கும் உடலில் ஏற்பட்ட அனைத்துவிதமான வலிகளும் நீங்கும்

சளி மற்றும் கபம் நீங்கி சுவாசம் சீராக நடைபெறும் பக்கவிளைவு இல்லாத வைத்திய முறை இது


கப ரோகங்கள் நீங்க


  சங்கிலை தூதுவளை இரண்டையும் சம அளவாக பிரித்து இதை மைபோல் அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர சளி மற்றும் இருமல் நீங்கி தொண்டைக்கட்டு குணமாகும் மேலும் காமம் சார்ந்த அனைத்து நோய்களும் விலகும் நுரையீரலுக்கு பலம் கிடைக்கும் சுவாசம் சீராக நடைபெறும்


சங்கிலை வேப்பிலை சமன் அளவாக எடுத்து நன்றாக அரைத்து இதில் ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து சுடவைத்து ஆறிய நீரில் கலந்து பருகி வந்தால் குழந்தை பிறந்து கர்ப்பப்பையில் தங்கி இருக்கும் அழுக்குகள் வெளியேறிவிடும் மேலும் ஜன்னி மற்றும் இழுப்பு நோய்கள் வராமல் தடுக்கும் வைத்திய முறை இது


தோல் நோய்கள் நீங்க


   இரண்டு கைப்பிடி அளவு இதன் இலையை கொண்டு வந்து நீரிலிட்டு கொதிக்க வைத்து இதை குடித்து வந்தால் சொறி சிரங்கு போன்ற தோல் நோய்கள் நீங்கும்


   100 மில்லி விளக்கெண்ணையில் 10 கிராம் சங்கம் வேர்ப்பட்டையை கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி உடல் முழுவதும் தேய்த்து வந்தால் உடலில் ஏற்பட்ட கரப்பான் மற்றும் தோல் நோய்கள் அனைத்தும் விலகும்


        வளமுடன் வாழ வாழ்த்துக்கள்  

                    சித்தர்களின் சீடன்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி