கருப்பு உப்பு

 கருப்பு உப்பு பயன்கள்:


கருப்பு உப்பு என்று அழைக்கப்படும் இவ்வகை உப்பு, இமயமலையின் அருகில் உள்ள பல்வேறு எரிமலைகளின் கல் உப்பு எனவும் சொல்லப்படுகிறது.  மேலும் ஹிமாலயன் பிளாக் சால்ட் (Himalayan black salt), சுலேமனி நமக், பிட் லோபோன், காலா நூன், படா நூன் என இமயமலை பகுதிகளில் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த உப்பின் மணமானது வித்தியாசமாக முட்டையின் மணத்தை போல் இருக்கும். சல்பர் இதில் கலந்திருப்பதால் இந்த மணம் வருகிறது. இந்த உப்பு கருப்பு மட்டுமல்லாமல் இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது. கருப்பு உப்பு ஆயுர்வேதத்தில் பல மருத்துவங்களில் பயன்படுத்தப்படுகிறது.


வடஇந்தியாவில் அதிகம் பயன்படும் கருப்பு உப்பு:


பங்களாதேஷ், நேபாளம், இந்தியா மற்றும் பாக்கிஸ்தானின் உணவு வகைகளில் ஒரு வித்தியாசமான சுவையினை பெற, இவ்வகை உப்பு பயன்படுத்தப்படுகிறது. நம்முடைய இந்தியாவில் வடஇந்தியாவில் மட்டுமே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, பிரபலமான சாட்ஸ், சட்னி, சாலடுகள் போன்ற உணவுவகைகளிலும், எல்லா வகையான பழங்கள், ரைத்தாக்கள் மற்றும் பல சுவையான தென் இந்திய சிற்றுண்டிகளில் இந்த கருப்பு உப்பு சேர்க்கப்படுகிறது.


#உடல்_எடையை_குறைக்கும்_பிளாக் #சால்ட்’:


◆உடல் எடை பிரச்சனையை குணமாக்க இந்த கருப்பு உப்பு பயன்படுகிறது. கடல் உப்பை நீங்கள் உணவில் சேர்த்துக்கொண்டு வரும் பொழுது உங்களுடைய உடல் எடையானது மிக வேகமாக அதிகரிக்கும். ஆனால் இந்த கருப்பு உப்பை நீங்கள் உணவில் சேர்த்து வரும் பொழுது உங்களுடைய உடல் எடையை குறைக்கும். பல உடல் எடை குறைக்கும் ஆயுர்வேத மருந்துகளில் இந்த கருப்பு உப்பே பயன்படுத்தப்படுகிறதாக கூறப்படுகிறது. உணவில் கருப்பு உப்பு மட்டுமே சேர்த்து சமைப்பது மூலம் உங்கள் உடல் எடை குறைவதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.


◆மூட்டு வலி, தசை பிடிப்பிற்கு, கருப்பு உப்பை வெறும் வாணலியில் நன்றாக வறுக்கவும். அதை, கொட்டி விடாதபடி ஒரு கெட்டியான துணியில்க மூட்டையாக்கி கட்டிக் கொள்ளவும். வலி இருக்கும் இடங்களில் உப்பு ஒத்தடம் கொடுத்தால், நல்ல பலன் தெரியும்.

ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ் தொந்திரவு, ஜலதோஷம், மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும் பட்சத்தில், இன்ஹேலரில், கருப்பு உப்பினை பொடித்துப் போட்டு சுவாசித்தால், மூச்சுத்திணறல் இருக்காது.


◆சிறிது கருப்பு உப்பை நீரில் கரைத்துக் கொண்டு அத்துடன் இஞ்சி எலுமிச்சை சாறினை சேர்த்துப் பருகினால், மலம் இளகி வெளியேறும்.

கொலாஸ்ட்ரல் அளவு அடிக்கடி வேறுபடாமல், ஆரோக்கியமான ஒரே நிலையில் பாதுகாக்கப் படுவதால், சீரான ரத்த ஓட்டம் இருக்கும். கெட்ட கொழுப்புத் தன்மையை மட்டுப்படுத்துகிறது.


◆கருப்பு உப்பில், ஆல்கலைன் நிரம்பி இருப்பதால், அதற்கு அமிலத் தன்மையைக் கட்டுப் படுத்தும் தன்மை இருப்பதால், நெஞ்செரிச்சலை நீக்குகிறது.


◆கருப்பு உப்பை உட்கொள்வதால், உறக்கத்தினைத் தரும் செரோடினின், மெலோடினின் ஆகிய இரு ஹார்மோன்களையும் பாதுகாப்பான நிலையில் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளதால், தூக்கமின்மை பிரச்சனையும் நீங்கும்.


◆கருப்பு உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகப்படுத்தப்படாமல் வைத்திருக்கும் என்பதால், நீரிழிவு நோய்காரர்களை  இன்சுலின் போட்டுக் கொள்வதிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.


◆ஒரு தாமிரப் பாத்திரத்தில் சிறிது கருப்பு உப்பைப் போட்டு, மிதமான தீயில் வைத்து, உப்பு நிறம் மாறியவுடன், தீயிலிருந்து நீக்கி, அந்த உப்பினை சிறிது எடுத்து, நீரில் கரைத்துக் குடித்தால் ஆகாரம் உண்டவுடன், ஜீரணம் ஆகாமல், மேலுக்கு உணவு எதிர்த்து வருவதை தடுக்கிறது.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி