நோயின்றி வாழ

 நோயின்றி வாழலாம் வாங்க


   தும்பை இலை குப்பைமேனி இலை கரிசலாங்கண்ணி இலை இவை மூன்றையும் சம அளவாக பொடிசெய்து இதில் மூன்று கிராம் எடுத்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் எந்த நோய்களும் தோன்றாது


உடலுக்கு சுறுசுறுப்பு உண்டாகும்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

உடலுக்கு நோய்கள் வராமல் தடுக்கும் 


உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் வைத்திய முறைகளில் இதுவே  மிகவும் எளிய வைத்திய முறையாகும்


உடல் நோய்கள் நீங்க 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க


  சுக்கு.                                கடுக்காய் 

  கொத்தமல்லி.              நெல்லிக்காய்

  வாய்விளங்கம்            தான்றிக்காய்


     இவை அனைத்தையும் சம அளவாக பொடி செய்து  இதில் மூன்று கிராம் எடுத்து முந்நூறு மில்லி தண்ணீருடன் கலந்து சபாதியாகச் சுண்டக்காய்ச்சி காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் மேலும் உடலில் நோய்கள் தோன்றாத வண்ணம் உடலை காக்கும்


குறிப்பாக

உடல் சூட்டால் கண்ணில் பீளை கட்டுவது குணமாகும் கண் எரிச்சல் நிவர்த்தியாகும் மேலும் கண்களில் நோய்கள் வராத படி கண்களை பாதுகாக்கும்


காது சம்பந்தமான நோய்கள் மற்றும் சுவாச சம்பந்தமான நோய்கள் அனைத்தும் விலகும்


வாய்ப் புண் மற்றும் வாய் நாற்றம் குணமாகும் தலைவலி மற்றும் தலை மயக்கம் நிவர்த்தியாகும் மூளைக்கு வலிமையைத் தந்து தலையில் நோய்கள் ஏற்படாத வண்ணம் உடலை வளர்க்கும்


நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்

            உணவு முறை வைத்தியம்


  கறிவேப்பிலை புதினா கொத்தமல்லி இவை மூன்றையும் சம அளவாக எடுத்து இதில் மிளகு சீரகம் பூண்டு சேர்த்து இதை மூலிகை சூப்பாக செய்து தினந்தோறும் காலை வேளையில் டீ காபிக்கு பதிலாக பருகி வந்தால் உடலில் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்


 புதினா இலையை மட்டும் காயவைத்து பொடி செய்து இதனோடு பனங்கற்கண்டை சமமாக சேர்த்து இதை காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்


  திராட்சைப் பழரசத்தை பசும்பால் கலந்து பருகி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்கும் இதன் மூலம் நோய் இல்லாமல் நம்மை வாழவைக்கும்


 மாதுளம் பழத்துடன் தேங்காயை சமமாகக் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்கும் உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் உண்டாகும் அழகும் ஆரோக்கியமும் நீடிக்கும்


பேரீச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து சாப்பிட்டு வந்தாலும் தேங்காயுடன் பேரிச்சம் பழத்தை கலந்து சாப்பிட்டு வந்தாலும் உடலுக்கு தேவையான சத்துக்களும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலும் உறுதியாக உண்டாகும் இது உறுதி


உடல் வலி நீங்க 

உடலில் நோய்கள் வராமல் இருக்க


 திரிபலா முடக்கற்றான் விஷ்ணுகிரந்தி திரிகடுகு இவை அனைத்தையும் சம அளவாகக் கலந்து கொண்டு இதில் மூன்று கிராம் எடுத்து வெந்நீருடன் கலந்து காலை மாலை இரு வேளையும் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர உடலில் இருக்கின்ற வலிகள் அனைத்தும் நீங்கும் உடலுக்கு ஆரோக்கியம் ஏற்பட்டும் உடலில் எப்போதும் நோய் எதிர்ப்பாற்றல் நிரந்தரமாக நீடித்து நிலைத்திருக்கும்


            வளமுடன் வாழ வாழ்த்துக்கள்    

                       சித்தர்களின் சீடன்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி