நோய்எதிர்ப்புசக்தி பானம்

 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் கிருமிகளை அழிக்கும் மூலிகை பானம்


இதற்கு தேவையான பொருட்கள்


1.எலுமிச்சை பழம் - 1

2.இலவங்கப்பட்டை - 10g அளவு

3.பூண்டு - 3 பல்

4.கிராம்பு - 4

5.இஞ்சி - 10g அளவு

6.துளசி இலைகள் -  8

7.வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

 

செய்முறை


ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீரை எடுத்து அதில் லவங்கப்பட்டை, பூண்டு, கிராம்பு, இஞ்சி, துளசி இலைகள், வெந்தயம் இதை சேர்த்து ஒரு சில நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். 


தண்ணீர் கொதித்த பிறகு ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க விடுங்கள். 


இந்த பானத்தை தனியாக எடுத்து வைத்து ஆறிய பிறகு இதை வடிகட்டுங்கள். 


இந்த பானத்தில் பாதி அளவு எடுத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் குடியுங்கள்.


மொத்த பானத்தையும் காலை, மாலை என 2 வேளையாக குடிக்க வேண்டும்.


👉🏼துளசி இலைகள்


இந்த பானம் தயாரிக்க வேண்டிய இந்த எல்லா பொருள்களும் மிகவும் எளிதாக நமக்கு கிடைக்கக் கூடியவை. ஆனால் அதிக அளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டவை. முக்கியமாக இதில் சேர்க்கப் படக்கூடிய துளசி இலைகள் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. ஒவ்வொரு நாளும் சில துளசி இலைகளை சாப்பிடுவது நோய்த்தொற்று பிரச்சினைகளை எதிர்த்துப் போராடும். இதில் இருக்கக்கூடிய பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், வைரஸ் தடுப்பு பண்புகள், பூஞ்சைக்காளான் எதிர்ப்பு பண்புகள் எல்லா நுண் கிருமிகளையும் எதிர்த்துப் போராடக் கூடியது. சுவாசம் சம்பந்தமாக வரக்கூடிய எல்லா நோய் தொற்றுகளையும் தடுக்கக்கூடியது. காய்ச்சல், சளி, இருமல் மற்றும் பிற வைரஸ் தொற்றுகளை தடுக்க இந்த துளசி உதவுகிறது.

 

👉🏼இலவங்கப்பட்டை


உணவுகளில் நறுமணத்தையும் ருசியையும் கொண்டுவரக்கூடிய இலவங்கப்பட்டையில் பாலிஃபீனால்கள் மற்றும் புரோந்தோசயனிடின்கள் போன்ற ஆக்சிஜனேற்ற பண்புகள் அதிக அளவில் உள்ளது. இலவங்கப் பட்டையில் இருக்கக்கூடிய ஆன்டி-வைரல், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகள் வெளியிலிருந்து வரக்கூடிய நோய் கிருமிகளால் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றுக்கான வாய்ப்புகளை மிக வேகமாக குறைகிறது.


👉🏼வெந்தயம்


வெந்தய விதைகளில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. இது நம்முடைய உடலில் நீரை சமநிலைப் படுத்துகிறது. வாயு, அஜீரணம் மற்றும் பிற செரிமான சிக்கல்களை தடுக்கவும் உதவுகிறது. மேலும் வெந்தயத்தில் இருக்கக்கூடிய அமினோ அமில கலவைகள் இன்சுலின் சுரப்பையும் தூண்டுகிறது. அதுமட்டுமில்லாமல் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

 

👉🏼பூண்டு


பூண்டு சாப்பிடும்பொழுது அது ரத்த ஓட்டத்தில் வைரஸை எதிர்த்துப் போராடக்கூடிய செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. பூண்டில் அல்லின் என்கிற ஒரு கலவை காணப்படுகிறது. பூண்டை நாம் சாப்பிடும் பொழுது நம்முடைய ரத்தத்தில் கலந்து அல்லிசினாக மாறுகிறது. இந்த கலவை தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் நோய்களை தடுக்கவும் உதவுகிறது.


👉🏼இஞ்சி


இஞ்சியில் அதிக அளவில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும், ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் இருக்கிறது. இது நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தைக் கூட்டும். இஞ்சி போன்ற அதிக ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது நம்முடைய உடலில் ஏற்படக்கூடிய செல்களின் சிதைவு பிரச்சனையை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்கும். இஞ்சி அதிக அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது.

 

இப்படி இந்த பானத்தில் சேரக்கூடிய எல்லா பொருட்களும் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. அதுபோல நம்முடைய உடலில் வெளியிலிருந்து வரக்கூடிய வைரஸ், பாக்டீரியா போன்ற நச்சு கிருமிகளை சிறந்த முறையில் எதிர்த்துப் போராடக் கூடியது. ஆகையால் இந்த பானத்தை நீங்கள் தொடர்ந்து குடித்து வரும் பொழுது நச்சுக் கிருமிகளால் ஏற்படக்கூடிய தொற்று பிரச்சனைகள் குறைந்து உங்களுடைய உடல் ஆரோக்கியமாக மாறும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி