சியாட்டிகா

 .                      Sciatica: 

.           பேராசன நரம்பு தாபிதம்

.       *******************************

Sciatica என்பது Sciatic nerve  செல்லும் பாதையில் ஏற்படக்கூடிய வலி ஆகும் . இந்த வலியானது(Shooting or Shock) அதிர்ச்சி அல்லது படபடப்பாக வேகமாக பாதிக்கப்பட்ட நரம்புகளில் பரவுகிறது. இந்த வலியானது தண்டுவடத்தின் கீழ் பகுதியிலிருந்து தொடை முதல் கால் பாதம் வரை பின்பகுதியில் பரவுகிறது.


பொதுவாக தண்டுவட எலும்புகளை இணைக்கும் சவ்வு பாதிப்படைந்து சற்று வெளியே தள்ளப்படுவதன்            (Spinal disc hernination) காரணமாக ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட Lumbar or sacral nerve roots ல் அழுத்தம் ஏற்படுவதன் விளைவாக நரம்புகளின் செயல்பாடு குறைந்து வலி ஏற்படுகிறது. இந்த வலியானது இடுப்பு புட்டப்பகுதி தொடை கால் பாதம் வரை பின்பகுதியில்    பரவுகிறது  .


 நோய்கான காரணங்கள்

*****************************

அதிக எடை தூக்குதல் காரணமாகவோ விபத்தின் காரணமாகவோ வம்சி இடை  தட்டு அதாவது தண்டுவட எலும்புகளை இணைக்கும் சவ்வு பாதிப்படைந்து சற்று வெளியே தள்ளப்படுவதன் காரணமாக (Spinal disc hernination) Sciatic nerve) பாதிப்படையும் .

இதனால் உண்டாகும் வலியானது குனியும்போதும் உட்காரும்போதும் அதிகரிக்கும். பின் படுக்கும் போதும் நடக்கும் போதும் வலி குறையும் .மேலும் Sciatic nerveயை சுற்றியுள்ள திசுக்களில் வீக்கம் ஏற்படுவதன் காரணமாக Sciatica வரலாம்.

தண்டுவடத்தில் நரம்புகள் செல்லும் பாதையானது, தண்டுவட தசைகளின் அடர்த்தியை அதிகரித்தல் தண்டுவட பாதையில் புதிய எலும்புகள் உருவாதல் வம்சி இடைத்தட்டு வீக்கம் கொள்ளுதல். வம்சி இடைத்தட்டு, நோயினால் அழிதல் .தண்டுவட இணைப்பு உடைதல் .தண்டுவட எலும்பு தேய்மானம் அடைதல் .கட்டிகள் போன்ற காரணங்களால் சுருக்கம் அடைகிறது. .இதனையே Spinal stenosis என்கிரோம்.இதன் காரணமாக Sciatic nerve பாதிப்படைந்து Sciatica வரலாம்.

மேலும் தண்டுவட எலும்பு (Vertebra) முன்னோக்கி நழுவுதல் காரணமாக அதாவது Spondylolisthesis னால் Sciatic  nerve பாதிப்படையும்.

புட்டப் பகுதியில் உள்ள தசைகள் (Piriformis muscle) கட்டிகளினாலோ நலிவடைவதனினாலோ பாதிப்படைந்தால் இந்த தசைகளின் மேல் செல்லும் Sciatic nerve அழுத்தத்தின் காரணமாக பாதிப்படையும் . இதனை Piriformis syndrome என்று கூறுவர்.

மேலும் இதனை Wallet sciatica என்று கூறுவர். ஏனென்றால் Walletயை ஆண்கள் பேண்ட் ல் உள்ள பின் பகுதியில் உள்ள பாக்கெட்டில் வைத்து அமரும்போது புட்ட தசைகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு Sciatic nerveல் பாதிப்பை ஏற்படுத்தி வலியை உண்டாக்குகிறது.

மேலும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில்  எடை அதிகரிப்பு காரணமாக அழுத்தம் ஏற்பட்டு Sciatic nerve பாதிப்படையலாம் .மற்றும் இடுப்பு எலும்பு பகுதி மற்றும் தண்டுவடத்தில் உண்டாகும் கட்டிகள் புற்றுநோய் நோய்த்தொற்று உடல் எடை அதிகரித்தல் , அதிக வேலை பளு போன்ற காரணங்களினாளும் Sciatic nerve பாதிப்பைகிறது.   


  நோய்கணிப்பு.

***-*************

 Physical test: Straight leg raising test: 


நோயாளியை நேராக படுக்க வைத்து பாதிப்படைந்த அதாவது Sciatica  மற்றும் தீவிர வலி(Radicular pain) உள்ள காலை நேராக மேல் நோக்கி உயர்த்த வேண்டும் .அவ்வாறு உயர்த்தும்போது 60 டிகிரிக்கும் முன் இடுப்பு எலும்பு பகுதியில் வலி ஏற்பட்டால், அதாவது 40 டிகிரி அல்லது 30 டிகிரி உயர்த்தும் போது வலி ஏற்பட்டால் Sciatic nerve பாதிப்படைந்துள்ளது என்று ஆகும் .

மேலும் முழங்கால் மூட்டை மடக்கும் போது ஏற்பட்ட வலியானது குறையும் .ஏனெனில் அவ்வாறு செய்யும் போது Sciatic nerve அமைதி அடைகிறது மேலும் காலை நேராக உயர்த்தி பிடித்து பாதத்தை கீழ்நோக்கி அழுத்தும் போது வலி ஏற்பட்டாலும் அது Sciatic nerve பாதிப்பினால் உண்டாகும் வலியாகும். மற்றும் MRI மூலம் Sciatica கண்டறிய இயலும்   . 

   

நோயின் அறிகுறிகள்.

**************************

இடுப்பு, தொடை ,கால் பாதம் வரை பின்பகுதியில் தாங்க முடியாத வலி. பாதிக்கப்பட்ட காலில் தசை பலம் குறைதல். உணர்வின்மை ,எரிச்சல் ,புட்ட பகுதியில் வலி .ஆகியவை காணப்படும். 


       

     சித்த மருத்துவம்: 

***********************

பேராசன நரம்பு தாபிதம்: 

சித்த மருத்துவத்தில் இதனை வாதத்தம்பம் என்று அழைப்பர்     :                   '

          உற்பவிக்கும் வதாமது எழுந்து பொங்கி 

          உயர் காலின் புறவடியைக் குடைந்து பற்றி  .

      தெற்பவிக்கும் வீக்கமாய்ச் செழும்ப லுண்டாய்த்  .

             தேகமெங்கும் நோவாகித் திமிருமாகி.  

              விற்பவிக்கும் வில்லுபோல் விதனமாகி 

           மிடுக்கான மாந்தனைப்போல் விதனமாகிப்.    

           பற்பவிக்கும் பரன்றனையே நினையா மூடர்.

                .. படுகின்ற வாதஸ்தம் படுமாம் பாரே''    .


      பொருள்: 

***************

வளி குற்றமானது தன்னளவில் மிகுந்து கால்புறவடியிறங்கி அங்கு குடைதல், எரிச்சல் ,தெறிப்பு ,வீக்கம் முதலிய         குறிகுணங்களை உண்டாக்கி உடல் முழுவதும் 

நோக செய்து, திமிரை உண்டாக்கி உடலை வில்போல வளைக்கச் செய்யும்.

மருத்துவம்.

*************

இதற்கு ஆங்கிலத்தில் சரியான மருத்துவம் கிடையாது.

சித்தமருத்துவத்தில்.அயவீர செந்தூரம்.நாகசுண்ணம்.

பிரம்ம லிங்க செந்தூரம்.சங்கு பற்பம்.சிலாசத்து பற்பம்.

அமுக்ரா சூரணம்.எட்டி மாத்திரை போன்றவைகளை பயன் படுத்தி விரைவாகவும். நிறந்தரமாகவும் குணப்படுத்தலாம்.

*************************************

வைத்தியர் சுகவனேஸ்வரன் 

சேலம் ஆத்தூர்..

************************************

************************************

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி