வலிப்பு நோய்

 🇨🇭#வலிப்பு_நோய்………


🇨🇭#தலைவலிக்கு_அடுத்தபடியாக……


🇨🇭 #அதிகம்_பேரைப்பாதிப்பது 

#இது_தான்…❓❗


👉 வலிப்பு நோய்யும் அதற்க்கான 

வீட்டு வைத்தியமும்…❓❗


💢 வலிப்பின் வகைகள்...❓


மூளையில் எந்தப் பகுதி பாதிக்கப்படுகிறதோ, அதற்கேற்ப வலிப்பின் தன்மை வேறுபடும். 


♦மூளையின் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும் பாதிப்பால் வருவது

 பகுதி வலிப்பு (Partial seizure).


நாம் அவ்வப்போதுக் காண்கிற பொதுவான வலிப்புகள் உடல் முழுவதும் பரவியிருக்கும். இந்த வகைக்கு  முழுவீச்சு வலிப்பு

(Generalised seizure) என்று பெயர். இவை தவிர இன்னும் பல துணை வகைகளும் உள்ளன. 


⭕ நரம்பு மண்டலத்தில் இரு வகை உள்ளது.                                     


👉 1.மூளையின் கட்டுப்பாட்டில் இயங்குபவை

(Cerebro-spinal system of nerves)


பேசுதல், நடத்தல், செயல் புரிதல்.                                                                                

👉2.தாமாகவே இயங்குபவை

(Autonomic system of nerves)


இதயம் துடித்தல், நுரையீரல் விரிந்து சுருங்குதல்,குடல்கள் இயக்கம்.                                                                                                                                                

⭕ காக்கை வலிப்பு (epilepsy)


பித்தம் சரீரமெங்கும் பாய்ந்து சித்தங் கலங்கிப் பிரதிக்ஞையற்று மயங்கி…… 


நாக்கை,உதட்டை,நாசியை,விழியை,

புருவத்தை சேர்த்திழுத்து வலிப்புக்கண்டு அவயங்களுதறிக் கூலமலக்கிக் கீழே தள்ளும்.

வாயில் வெண்ணுரை தள்ளும்.

மேற்சுவாசம்வாங்கும்.                                                                         


⏩குதிரை வலிப்பின் குணம்⏪


கண்ணும் புருவமும் கருத்திருக்கும்,


கையும்காலும் ஒருபக்கந் திருத்தி வலிப்புக் காணும்,


வாயில் வெண்ணுறை தள்ளும்,


விழி கண்ணைப் பார்த்து நிற்கும். 


அவயங்கள் தீப்போல் காந்தும்.


உடல் படபடத்து நடுக்கும்.


நெஞ்சில் கபம் கட்டும்.     


⏩குமரகண்ட வலிப்பின் குணம்⏪


கண்ணும் வாயும் கோணும்


காலும் கையும் ஒருபக்கம் விட்டுவிட்டு வலிப்பெடுக்கும்


சுரங் காயும்


தலை வலிக்கும்


எமக் கோட்டாலைப்போல வருத்தப்படுத்தும்


மூர்ச்சைகாணும்.                                                


⏩முயல்கண்ட வலிப்பின் குணம்⏪


வாயால் மண்ணைக்கவ்வும்


நுரை தள்ளும்


விழிவிட்டுஞ் சேர்ந்து நட்டமாய் நிற்கும்


துள்ளதுள்ள வலிக்கும்


தோள்,மார் வலிகூட்டி சுருக்குவிக்கும்


சோக்கம் துயரம் மிகும்.    


⏩ நரம்புதளர்ச்சி(nervous debility)⏪


தவறான உணவுப் பழக்கங்கள்,


வாழ்க்கைமுறை, 


இந்திரிய விரயம், 


நச்சுப்பொருட்களின் நரம்புமண்டல தாக்கல்.                                                  


⭕ வலிப்பு நோயை காக்காய்வலிப்பு 

என்று தவறாக அழைக்கப்படுகிற…❗


👉வருவது ஏன்❓

      

  மூளை, நரம்பு தொடர்பான நோய்களில் தலைவலிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரைப் பாதிப்பது, வலிப்பு நோய். ‘காக்காய் வலிப்பு’என்று தவறாக அழைக்கப்படுகிற இந்த நோய் இடம், பொருள், ஏவல் பார்க்காமல் திடீரெனத் தாக்கும். 


பிறந்த குழந்தை, இளைய வயதினர், முதியவர் என எல்லா வயதினரையும் இந்த நோய் பாதிப்பதாலும், வலிப்பு பற்றிய மூடநம்பிக்கைகள் நம் சமூகத்தில் அதிகம் என்பதாலும், இது குறித்த விழிப்புணர்வைப் பெற வேண்டியது அவசியம்.


⏩ எது வலிப்பு❓எது வலிப்புநோய்❓


👉 வலிப்பு என்பது……


""ஒரு நோயின் 

அறிகுறி மட்டுமே."" 


👉 இதுவே ஒரு நோயல்ல……


மூளை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ…

அதிகக் காய்ச்சல், ரத்தக் கொதிப்பு 

போன்றவற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ தெரிவிக்கும் அறிகுறியாக வலிப்பு ஏற்படுகிறது.


ஒருவருக்கு வலிப்பு வரும்போது கையும் காலும் வெட்டி வெட்டி இழுக்கும். வாயில் நுரை தள்ளும். கண்கள் மேலே சுழன்று, நாக்கு, பற்களுக்கிடையில் சிக்கி, கடிபட்டு, வாயிலிருந்து ரத்தம் வழியச் சுயநினைவை இழந்து தரையில் கிடப்பார். சில நிமிடங்களில் இது சரியாகி, பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார். இந்த ‘நிகழ்வு’க்குப் பெயர் ‘வலிப்பு’ (Fits) ஒருவருக்கு இரண்டு முறைக்கு மேல் வலிப்பு வந்திருக்குமானால், அவருக்கு… வலிப்புநோய் (Epilepsy) இருப்பதாகக் கொள்ள வேண்டும்.


👉எப்படி ஏற்படுகிறது❓


மூளை மற்றும் நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அந்தச் செல்களுக்கிடையில் இயல்பாகவே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. 


ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால் இந்த மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாகி, ஒரு மின் புயல் போல் கிளம்புகிறது. அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதைத்தான் 'வலிப்பு' என்கிறோம்.


பூமியின் உள்அடுக்குகளில் உண்டாகிற அதிகப்படியான அதிர்வுகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துவதைப்போல், மூளையில் உண்டாகிற மின் அதிர்வுகள் வலிப்புக்குக் காரணமாகின்றன.


💢என்ன காரணம்❓


▶ அடிபடுதல், 


▶பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு, 


▶மூளையில் கட்டி, 


▶ரத்தக்கசிவு, 


▶ரத்தம் உறைதல், 


▶கிருமி தொற்று, 


▶புழுத் தொல்லை, 


▶மூளை காய்ச்சல், 


▶மூளை உறை அழற்சி காய்ச்சல், 


▶டெட்டனஸ் 


போன்றவை வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணங்களாளும்…………


➡உயர் ரத்த அழுத்தம், 


➡நீரிழிவு, 


➡சிறுநீரகக் கோளாறுகள் 


போன்றவையும் வலிப்பு வருவதைத் தூண்டக்கூடியவையே.


வலிப்பு உள்ளவர்களின்  பரம்பரையாகவும் வலிப்பு வரலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. 


கர்ப்பிணிகளுக்கு ரத்தக்கொதிப்பு இருந்தால், பிரசவக் காலத்தில் வலிப்பு வருவதுண்டு. 


▶பக்கவாதம், 


▶மூளையில் ஏற்படும் ரத்தக்குழாய் மாற்றங்கள், 


▶அல்சைமர் நோய், 


▶ரத்தத்தில் தட்டணுக்கள் மற்றும் சோடியம் அளவு குறைதல் 


போன்ற காரணங்களால் வயதானவர்களுக்கு வலிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு மன உளைச்சல் காரணமாக ‘பொய் வலிப்பு’ (Pseudo seizure) வருவதும் உண்டு. பல நேரம் எந்தக் காரணத்தையும் கண்டுபிடிக்க முடியாத வலிப்புகளே அதிகமாகக் காணப்படும்.


💢குழந்தைகளுக்கு

வரும்வலிப்பு…❗


▶பிறக்கும்போது ஏற்படும் ஆக்சிஜன் குறைபாடுகள், 


▶குறைப் பிரசவம், 


▶பிரசவக் காலத் தொற்றுநோய்கள், 


▶பிரசவத்தின் போது தலையில் அடிபடுதல் 


போன்றவற்றால் குழந்தைகளுக்கு வலிப்பு வருகிறது. 


⏩இவர்களுடைய…… 


➡ரத்தத்தில் கால்சியம், 


➡குளுக்கோஸ், 


➡மக்னீசியம் 


அளவு குறைந்தாலும் வலிப்பு வரும்.

குழந்தைகளுக்குக் காய்ச்சல் காரணமாக வலிப்பு வருவதுதான் அதிகம். 


பெரும்பாலும் 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சாதாரணக் காய்ச்சலாக இருந்தால்கூட, உடலின் வெப்பம் திடீரென அதிகரித்தால் வலிப்பு வருவது உறுதி. சூடம் சாப்பிட்ட குழந்தைக்கு வலிப்பு வருவதுண்டு.


💢 என்ன பரிசோதனை❓


வலிப்பு வந்தவர்கள் மூளை நரம்பியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் சில அடிப்படை…… 

ரத்தப் பரிசோதனைகளோடு மூளையின் மின்னோட்டத்தை அளவிடும்……


▶ஈ.ஈ.ஜி., 


▶வீடியோ ஈ.ஈ.ஜி.’, 


▶சி.டி.ஸ்கேன், 


▶எம்.ஆர்.ஐ. 


▶ஸ்கேன், 


▶பெட் (PET) ஸ்கேன், 


▶ஸ்பெக்ட் (SPECT) ஸ்கேன் 


முதலியவற்றைச் செய்து வலிப்பு நோய்க்குக் காரணத்தை அறிந்து, வலிப்பின் வகை தெரிந்து சிகிச்சை பெற வேண்டும்.


♦குழந்தைகளுக்கு வலிப்பைத் தடுப்பது எப்படி❓


கர்ப்பத்துக்கு முன்பும் பின்பும் கர்ப்பிணிகளை முறைப்படி பராமரிப்பது, மருத்துவமனையில் தேர்ச்சிபெற்ற மருத்துவரிடம் பிரசவம் மேற்கொள்வது ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே வலிப்பு உண்டாவதைத் தடுக்கலாம். குழந்தைக்குக் காய்ச்சல் வராமல் பார்த்துக்கொள்வது, காய்ச்சல் வந்தால் உடனடியாகக் காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகளைக் கொடுப்பது, காய்ச்சல் கண்ட குழந்தையின் உடலில் ஈரத் துணி கொண்டு ஒத்தடம் கொடுப்பது, காய்ச்சல் உள்ள குழந்தையைக் குளிரூட்டப்பட்ட அறையில் படுக்கவைப்பது போன்ற முதலுதவிகளை உடனே செய்வது போன்றவற்றால், காய்ச்சல் வலிப்பைத் தடுத்துவிடலாம். வலிப்பு மருந்துகளைத் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு மீண்டும் வலிப்பு வருவதைத் தவிர்த்துவிடலாம்.


⏩ எச்சரிக்கைகள்❗❗


> வலிப்பு வந்தவர்கள் விபத்துக்கு உள்ளாவதைத் தடுக்க வேண்டியது முக்கியம். இயந்திரங்களில் பணிபுரிவது, உயரமான இடங்களில் வேலை செய்வது, தண்ணீரில் அல்லது தண்ணீருக்கு அடியில் இயங்கும் பணிகளில் ஈடுபடுவது, வாகனம் ஓட்டுவது போன்ற பணிகளைத் தவிர்க்க வேண்டும்.


> வலிப்பு உள்ள குழந்தைகளைக் குளம், குட்டை, ஏரி, கிணறு, அருவி ஆகிய இடங் களில் குளிப்பதற்கும், நீர் நிலைகளின் அருகே விளையாடுவதற்கும் அனுமதிக்கக் கூடாது.


> வலிப்பு வந்தவர்கள் மது அருந்தக்கூடாது. அப்படி அருந்தினால், வலிப்புக்கான மருந்து முழுவதுமாக வேலை செய்யாது.


> வலிப்பு மருந்தை ஒரு வேளைக்குச் சாப்பிட மறந்துவிட்டாலும், அது நினைவுக்கு வந்ததும், உடனே விட்டுப்போன மருந்தைச் சாப்பிட்டுவிட வேண்டும்.


> வேறு ஏதேனும் நோய்க்காகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது வலிப்பு நோய்க்குச் சாப்பிடும் மருந்துகளை மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.


> மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலிப்பு நோய் மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்தக் கூடாது.


🇨🇭 முன்னெச்சரிக்கை அறிகுறிகள்❓❗


பொதுவாக வலிப்பு நோய் திடீரென்றுதான் வரும். என்றாலும், அது வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாக, ‘ஆரா’ (Aura) என்று அழைக்கப்படுகிற எச்சரிக்கை மணி அடிப்பது போன்ற அறிகுறிகள் தோன்றலாம். அவை:


> திடீர் தலைவலி, உடல் சோர்வு.


> குழப்பமான மனநிலை.


> பதற்றம், பயம், வியர்த்தல்.


> காதில் மாயக் குரல் கேட்பது.


> கண்கள் கூசுவது அல்லது மங்கலான பார்வை.


> உடலில் மதமதப்பு.


> நடை தடுமாற்றம்.


இந்த அறிகுறிகள் தென்பட்டால் வலிப்புப் பிரச்சினை உள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப் பான இடத்துக்குச் சென்று படுத்துக்கொள்வது நல்லது. அப்படியும் வலிப்பு வந்துவிட்டது என்றால், அருகில் உள்ளவர்கள் இவ்வாறு செய்யுங்கள்:


> அவரை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்கவையுங்கள்.


> சட்டை பொத்தான், இடுப்பு பெல்ட், கழுத்து ‘டை' போன்றவற்றைத் தளர்த்தி, நன்கு சுவாசிப்பதற்கு வழிவகை செய்யுங்கள்.


> மின்விசிறி/ கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்க வழி செய்யுங்கள்.


> அருகில் காயத்தை ஏற்படுத்தும் கூர்மையான பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்.


> மூக்குக் கண்ணாடி, செயற்கை பல் செட்டை அகற்றிவிடுங்கள்.


> உமிழ்நீர் வழிந்தால் துடைத்து விடுங்கள்.


> ஒருவருக்கு வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது ஆபத்து. உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சையை அளிக்க வேண்டியது அவசியம். அதன்பின், சிறப்பு மருத்துவரிடமோ அல்லது பாதிக்கப்பட்டவர் ஏற்கெனவே சிகிச்சை பெறும் மருத்துவரிடமோ அழைத்துச் செல்லுங்கள். வலிப்பு வந்தவருக்குச் சிகிச்சை பெறச் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விளைவுகள் உடலில் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.


❌ என்ன செய்யக் கூடாது ❓


> அவரைச் சுற்றிக் கூட்டம் கூட அனுமதிக் காதீர்கள்.


> வலிப்பு வரும்போது அவருடைய கை, கால்களை அழுத்திப் பிடித்து வலிப்பைக் கட்டுப்படுத்த முயற்சிக்கக் கூடாது.


> வலிப்பு நின்று, நினைவு திரும்பும்வரை அவருக்குக் குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் தரக்கூடாது.


> முழு நினைவு வந்ததை உறுதி செய்து கொண்டு ( இதற்கு அவர் பெயரைச் சொல்லச் சொல்லலாம்) தண்ணீரைப் பருகச் செய்யலாம்.


> வலிப்பு ஏற்படும்போது, அவர்கள் கையில் இரும்புச் சாவி கொடுப்பதால் எந்தப் பலனும் இல்லை.


> மூக்கில் வெங்காயச் சாற்றை ஊற்றுவதும் கூடாது.


🇨🇭 சிகிச்சை என்ன❓


வலிப்பு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமோ என அச்சப்படத் தேவையில்லை. 


மருந்து மாத்திரைகளைச் 

சாப்பிட ஆரம்பித்து, 

3 ஆண்டுகள்வரை வலிப்பு வரவில்லை என்றால், மாத்திரைகளைச் சிறிது சிறிதாகக் குறைத்து, பின்னர் முழுவதுமாக நிறுத்திவிடலாம். 


மாத்திரைகளை நேரம் தவறி உட்கொள்வதோ, விட்டுவிட்டுச் சாப்பிடுவதோ, உடனடியாக நிறுத்துவதோ கூடாது. 


வலிப்புக்கான சிகிச்சையில் இதுதான் முக்கியம்.


#வலிப்பு_நோய்_வீட்டு_மருத்துவம்


⭕ துவக்கநிலை சாம்பிள் காக்கை வலிப்பு உணவு டயட்❓


👉காலை: 


3 முட்டை ஆம்லட்..நெய்யில் 


👉மதியம்:  


சிக்கன் லெக் பீஸ்...100 கிராம் பிராக்களி, லெட்டுஸுடன் அல்லது சிக்கன் சாலட்.


👉மாலை: 


1 துண்டு சீஸ். 30 கிராம்


👉மாலை: 


சிகப்பிறைச்சி (ஆடு, பீஃப், ).


உடனே இதை துவக்கவேண்டும் என இல்லை... மெதுவாக காலை உணவாக முட்டையை அறிமுகபடுத்தவேண்டும். 


⏩மதியம் 


சிக்கன் வைத்து கொடுக்கவேண்டும்

அரிசி கொஞ்சமாக கொடுக்கலாம்...கோதுமை வேண்டாம். சோயா, மக்கா சோளம்  பக்கம் போகவேண்டாம்.


⏩இரவு 


மீன் கொடுத்து கொஞ்சமாக சோறு கொடுக்கலாம். இப்படி படிப்படியாக இந்த டயட்டுக்கு கொண்டுவர வேண்டும். துவக்கத்தில் காய்கறிகளை கொடுத்து வரவும். சமையல் எண்ணெயாக நெய் மட்டும் பயன்படுத்தவும்.


💊மருந்து ஒன்று💊


பனை வெல்லம் – 500 கிராம்

     

எலுமிச்சம்பழம் – 10 எண்ணிக்கை

     

தாளிச பத்திரி – 35 கிராம்

     

சுக்கு – 35 கிராம்

     

மிளகு – 35 கிராம்

     

திப்பிலி – 35 கிராம்

     

இலவங்கம் – 35 கிராம்

    

சாதிக்காய் – 15 கிராம்

     

சாதிபத்திரி – 15 கிராம்


     இரண்டு லிட்டர் பசுவின் பாலின் பனை வெல்லத்தைப் போட்டு சிறிதளவு சூடுகாட்ட வேண்டும். வெல்லம் பாலில் கரைந்ததும், எலுமிச்சம் சாறு விட்டு காய்ச்ச வேண்டும். பாகு பதமாக வரும் சமத்தில் மற்ற சரக்குகளின் சூரணத்தைப் போட்டுக்கிளறி விட்டு இறக்கிவிட வேண்டும். ஆறிய பிறகு 200 கிராம் நெய், 150 கிராம் தேனையும் சேர்த்துக் கிளறிவிட்டுக் கொள்ளவும். தினமும் அதிமாலை மற்றும் மாலை வேளையில் 1 ஸ்பூன் சாப்பிட அற்புத பலன் கிடைக்கும்.


👉வலிப்பு நோய், வாயு 

மற்றும் பித்தக்கோளாறுகள்


👉வயிற்றுவலி, வயிற்றுப் பொறுமல், அஜீரணம் போன்றவற்றை மிகவும் நல்ல முறையில் குணப்படுத்தும் .


💊மருந்து இரண்டு💊


வேப்பிலை - - ஐந்து  கிராம்


வில்வ இலை - - ஐந்து கிராம் 


துளசி இலை - - ஐந்து கிராம் 


கடுக்காய் தோல் ... மூன்று கிராம் 


நூறு மில்லி நீரைக் காய்ச்சி 

ஒவ்வொரு பொருளாகப் போட்டு சிறு தீயில் கொதிக்க வைத்து 

முப்பது மில்லி தீந்ராக்கி  இறக்கி 

வடிகட்டி நாள் தோறும் காலை மாலை

 உணவுக்கு  முப்பது நிமிடங்களுக்கு முன்ஒரு மண்டலம்  குடித்து வர 

காக்காய் வலிப்பு நோய் குணமாகும்.


அசைவம் தவிர்க்க வேண்டும்.

உப்பு குறைத்துப் பயன்படுத்த வேண்டும்.                         


💊மருந்து மூன்று💊


அமுக்கிராக்கிழங்கு 500கிராம்,


மிளகு 25 கிராம்,


சுக்கு 25கிராம்,


அதிமதுரம் 25கிராம்,


ஏலஅரிசி 25கிராம்,


சாதிக்காய் 25கிராம்,


அனைத்து பொருட்களையும் 

இடித்து சலித்து நன்கு கலந்து, வைத்து கொண்டு…… காலை, இரவு உணவிற்குப் பின் ஒரு தேகரண்டி உட்கொண்டு பால் அருந்த நரம்புத் தளர்ச்சி நீங்கி வலிப்பு குணமாகும்.


 🔯பத்தியம்                                                 


குளிர்ந்த பானங்கள், மீன், கருவாடு போன்ற அசைவ உணவுகளை தவிர்க்கவும்.


💊மருந்து நான்கு💊


👉வசம்பு சூரணம்


வசம்பு ......இருபது கிராம்


சுக்கு .....பத்து கிராம்


மிளகு.......... பத்து கிராம்


திப்பிலி ...... பத்து கிராம்


கடுக்காய் .. பத்து கிராம்


பெருங்காயம் .......... பத்து கிராம்


உப்பு ..............கால் தேக்கரண்டி


அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்து சூரணமாக்கி வைத்துக் கொள்ளவும்.


இந்த வசம்பு சூரணத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து

அளவு தேனில் கலந்து குழைத்து

தினமும் காலை மட்டும் ஒருவேளை

உணவு உண்டு ஒரு மணி நேரத்திற்குப் பின் சாப்பிட்டு வர படிப்படியாக நோய் கட்டுக்குள் வந்து இருபத்தி நான்கு நாட்கள் அதாவது அரை மண்டலத்தில்

முழுமையான குணம் அடையலாம்.


💊மருந்து ஐந்து💊


வசம்பு தூள்


வல்லாரைத் தூள்


வெந்தயம் அரைத்த பொடி


கஸ்தூரி மஞ்சள் தூள்


திப்பில் பொடி


ஆகிய ஐந்து பொடிகளையும்

சம அளவு ஒன்றாகக் கலந்து

சூரணமாக்கி வைத்துக் கொண்டு

இந்த சூரணத்தில்ஒரு கிராம் அளவு எடுத்துதேனில் குழைத்துதினம் காலை,மாலைஇரண்டு வேளையும் சாப்பிட்டுவர வலிப்பு நோய் அதனால் ஏற்படும் காய்ச்சல் உடல் சூடாகுதல்

தலைவலி,ஆகிய பக்க விளைவுகளும் சரியாகி நோய் முழுமையாக குணமாகும்.


⏩ மேற்கூறிய மருந்துகளுக்கு துணை உணவாக பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கீழ்க்கண்ட பாசிப் பயறு கசாயம் குடித்து வரலாம்…


▶▶நூறு மில்லி கொதிக்கும் நீரில்……


➡பாசிப் பயறு ( தோலுடன் ) ஒரு தேக்கரண்டி


➡சோம்பு என்ற பெருஞ்சீரகம் அரை தேக்கரண்டி


➡மல்லித் தழை ஐந்து கிராம்


போட்டு நன்கு கொதிக்க விட்டு

ஐம்பது மில்லியாக சுருங்கிய தீநீராக்கி

இறக்கி வடிகட்டி பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை குடித்து வர

நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

இது கை கண்ட எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்.


🇨🇭#சிறு_கை_வைத்தியம்🇨🇭


⏩காட்டுக் கொடித்தோடை

(துரைப்புடலை) என்னும் தாவரத்தின் வேரை கசாயமாக்கி குடிக்க நாளடைவில் வலிப்பு நோய் குணமாகும்.


⏩அரை டம்ளர் பாலில்,அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி , அதில் 5 அல்லது 6 பூண்டு பற்களை சேர்த்து,வேகவைத்து தினமும் குடித்து வர, கை கால் வலிப்பு குணமாகும்.


⏩வெள்ளை வெங்காயத்தை தட்டிச்சாறு பிழிந்து வலிப்பு வந்தவரின் காதில் 2 அல்லது 3 சொட்டு விட்டால் காக்காய் வலிப்பு அடங்கிவிடும். 


⏩வெள்ளை பூசணிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள, திடீர் திடீர் என்று ஏற்படும் வலிப்பு நோய்களையும் குணமாக்கும்.


⏩தேங்காய் எண்ணையை அடிக்கடி குடித்து வர வலிப்பு குணமாகும்.


⏩தினமும் துளசி இலையை வாயில் போட்டு மென்று விழுங்கி வந்தால் நரம்பு மற்றும் முளை வலிமையாகி, அடிக்கடி கை,கால் வலிப்பு வருவது குறையும்.


⏩ஒரு கைப்பிடி அருகம்புல், மிளகு 25, இடித்து 4ல் ஒன்றாய்க் காய்ச்சி வடித்து, காலை மாலை 250மிலி பருகிவர வலிப்பு குணமாகும் .


⏩தினமும் முன்று வேளை வாழைப்பழம் சாப்பிட்டு வர வலிப்பு வருவது குறையும்.ஏனெனில் இதிலுள்ள பொட்டாசியம் இரத்தம் உறைதலை கட்டுப்படுத்துகிறது.

இதனால் மூளைக்கு செல்லும் இரத்தம் சிராகிறது.இதனால் வலிப்பு வருவது தடைபடுகிறது.


⏩அகத்திக்கீரை, மிளகு, பசுவின் கோமியம் ஆகிய மூன்றையும் சேர்த்து அரைத்து அடைபோல் தட்டி காயவைத்து தூளாக்கி பொடிசெய்து நசியவிட (மூக்கில் உறிஞ்சு) வலிப்பு நோய் படிப்படியாக குறையும். 


⏩அரைக்கீரையுடன் சுக்கு, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் குளிர் சன்னி, வலிப்பு நோய் போன்றவை குணமாகும்.


⏩மாங்கொட்டைக்குள் இருக்கும் பருப்பை வேகவைத்து சாப்பிட்டால் வலிப்பு, கோடைகாலத்தில் ஏற்படும் உஷ்ணபிணிகள் போன்றவை தீரும்.


⏩கொய்யா தளிர் இலைச் சாறு பருகிவர காய்ச்சல்,காக்கா வலிப்பு குணமாகும். 


⏩முருங்கை பட்டையை நீர்விட்டு அவித்துச் சாறெடுத்து ரசமாக்கி உணவுடன் சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.


⏩இரண்டு கிராம் பொரித்த பெருவெங்காயத்தை பனை வெல்லத்தில் பொதித்து உண்டுவர சன்னி, வலிப்பு ஆகியவை தீர்ந்துவிடும். 


⏩தும்பை இலையை கசக்கி பிழிந்து துளி மூக்கில் விடவும் இரண்டு மூன்று தரம் விட்டுவர காக்காய் வலிப்பு நோய் குணமாகிவிடும்.


⏩திராட்சை பழச்சாற்றை தினம் மூன்று வேளையும் இரண்டு தேக்கரண்டி அளவு கொடுத்து வர குழந்தைகளின் வலிப்பு நோய் தீர்ந்து விடும்.


⏩வலிப்பு வந்தவுடன் பார்லி அரிசியில் இளநீரையும், தேனையும் கலந்து சாப்பிட்டால் நரம்பு பலமடைந்து வலிப்பு குணமாகும்.


⏩வலிப்பு நோய் உள்ளவா்கள் தினசாி வெள்ளைஆட்டுப் பாலை சாப்பிட்டு வர அந்நோயில் இருந்துபாதுகாக்கப்

படுகின்றாா்கள்.

 

⏩இரண்டு கிராம் பொரித்த பெருவெங்காயத்தை பனை வெல்லத்தில் பொதித்து உண்டுவர வாதநோய், மண்டை நீரேற்றம், சன்னி, உதிரச் சிக்கல், கீல்வாதம் வெறிநாய்க்கடி, வலிப்பு தொண்டைக்கம்மல், செரியாமை, பேதி, வயிற்றுப்பெருமல், வயிற்றுவலி, குட நுண் புழுக்கம் ஆகியவை தீர்ந்துவிடும்.


⏩இனிப்பு மாம்பழச்சாறு,தேன் சமன் கலந்து சாப்பிட்டுவர நரம்புத்தளர்ச்சி நீங்கும். 


⏩அவுரி, வசம்பு, உள்ளி சமனிடித்து நாசியில் நசியமிட வலிப்பு நோய்கள் மாறும்.       


⏩வசம்பு,பெருங்காயம்,திரிகடுகு,

கடுக்காய்தோல்,அதிவிடயம்,கருப்பு உப்பு சமன் பொடி செய்துகாலை மாலை 1தேக்கரண்டி கொடுத்துவர காக்கை வலிப்பு தீரும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி