மரணபயம் வேண்டாம்

 🇨🇭#மரணத்தை_கண்டு_அஞ்சவேண்டிய #அவசியம்_இல்லை..❗❗


🇨🇭#பயத்தால்_வாழ்க்கையும் #பொருளாதாரத்தையும்

#இழக்காதீர்கள்…❗❗❓❓


👉எந்த ஒரு நோய் ஏற்பட்டாலும் நாம் இறந்து விடுவோமோ என்ற பயத்தின் காரணமாக...


உயர் தர மருத்துவ சிகிச்சை,ஸ்கேன்,மருத்துவ பரிசோதனை என பல லட்சங்களை இழந்து கடைசியில் 100 ரூபாய் மருந்தில் அந்த நோய் குணமாவதை பார்க்கிறோம்..சிலர் அனுபவித்தும் இருப்பார்கள்..


தீராத நோய் என்று எதுவும் இல்லை..எல்லா நோய்களுக்கும் மருந்து இந்த பூமியில் உண்டு..அதனை #தேடுவதில் கவனம் செலுத்த வேண்டும்..


அதே நேரத்தில் நாம் இறந்து விடுவோமோ என்று பயந்தால் மருத்துவர்கள் செல்வந்தர்களாக ஆகி விடுவார்கள்..


இறை நம்பிக்கை கொண்டவர்கள் எவரும் மரணத்தை கண்டு பயப்படுவதில்லை..


பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் நிச்சயம் மரணம் உண்டு..அது எந்த நேரத்தில் நிகழும் என்பது நம்மை படைத்த இறைவனுக்கே தெரியும்..


நோயால் பீடித்த பலரும் உயிருடன் இருக்கின்றனர்..ஆரோக்கியமாக இருப்பவர்கள் திடீரென மரணத்தை தழுவுகின்றனர்..எனவே மரண பயத்தை மனதிலிருந்து நீக்குங்கள்..


நோய் ஏற்பட்டால் முதலில் இறைவனிடம் நம்முடைய நோயை நீக்க பிரார்த்தனை செய்யுங்கள்...பிறகு தங்களால் இயன்ற பொருளாதாரத்தை தர்மம் செய்யுங்கள்..பின்னர் மருத்துவ சிகிச்சையை மேற்க்கொள்ளலாம்..தர்மம் உயிரையும் காக்கும்..


நம் சந்ததிகளையும் வளமாக்கும்..நோயை நீக்கும் மருந்துகளில் முதலிடம் வகிப்பது தர்மம் மட்டுமே..


இறை நம்பிக்கை கொண்ட அனைத்து சகோதரர்களும் முழுமையான ஈடுபாட்டுடன் இறைவனை வணங்குங்கள்..


கடமைக்கு இறைவனை வணங்காதீர்கள்..


இறைவழிபாடு முடிந்தவுடன் உங்களின் உடலும் உள்ளமும் இலகுவாக வேண்டும்.அதுவே சரியான முறையான வழிபாடு ஆகும்..இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்..


மரணம் என்ற சம்பவம் நமக்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது..அது ஒரு நாள் நடந்தே தீரும். அதற்கு நம் உடலையும் உள்ளத்தையும் தயார் படுத்த வேண்டும்..


அதனை முன்னிறுத்தி ..நாம் ஒவ்வொரு காரியத்தையும் செய்யும்போது அந்தக்காரியத்தில் தவறோ,குற்றமோ,பாவமோ ஏற்பட 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை..இதனால் நாமும் நம்மை சார்ந்தவர்களும் நன்மை அடைவர்.


உயிர் உடலை விட்டு நீங்கி விட்டால் எவ்வளவு பெரிய பதவிகள், செல்வங்கள் இருந்தாலும்...அந்த உடலை பாதுகாத்து வைக்க மாட்டார்கள்..அதன் பெயர் பிணம்...என்று பெயர் மாறி விடும்..இந்த நாற்றமெடுத்த உடலை புதைக்கவோ அல்லது எரிக்கவோ போகிறார்கள்..எனவே உலகில் வாழும் காலம் குறுகியதாகவோ அல்லது விரிவானதாகவோ கிடைக்கப்பெற்றவர்கள் மரணத்தை பற்றி கவலைப்படாமல் சந்தோஷமாக வாழ பழகுங்கள்..இதனால் உள்ளமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்..


நம்மாளான உதவிகளை பிறருக்கு செய்து கொண்டே இருங்கள்..பிறரின் சந்தோஷத்தில் மகிழ்ச்சி கொள்வது பேரானந்தம்..அதற்கு ஈடு இணை இல்லை..இந்த மகிழ்ச்சியே உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைக்கும்..


கருவறையில் குழந்தை இருக்கும்போது இருட்டில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று மகிழும்..ஆனால் குழந்தை பிறந்து வெளிச்சத்தை பார்த்து பயந்து அழும்..பிறகு பழக பழக வெளிச்சை கண்டு அஞ்சாது..அதுபோல்தான் மரணமும்..அதைக்கண்டு நாம் பயப்படுகிறோம்..குழந்தையைப்போல..ஆனால் மரணித்து விட்டால்..அந்த வாழ்வில் மனம் திளைத்து விடும் எனவே……


மரணத்தை கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை..


பயத்தால் வாழ்க்கையும் பொருளாதாரத்தையும் இழக்காதீர்கள்..


இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக..

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி