சர்க்கரை நோயின் அறிகுறிகள குணமாக

 சர்க்கரை வியாதியால் அதிகமாக 

சிறுநீர் கழிந்தால் அதற்கான வைத்தியம்


  மஞ்சள் கிழங்கை பொடி செய்து இதில் இரண்டு கிராம் எடுத்து தேனில் குழைத்து தொடர்ந்து ஒரு மண்டலம் காலை வேளையில் சாப்பிட்டு வர நீரிழிவு எனும் சர்க்கரை நோயின் பாதிப்பால் ஏற்பட்ட அடிக்கடி சிறுநீரை கழிக்க வைக்கும் வெகு மூத்திரம் எனும் நோய் வெகு எளிதாக குணமாகும்


வலிப்பு நோய்கள் வாத நோய்கள் வண்டுகடி கிரந்திப் புண்கள் உஷ்ண தேகத்தில்  வரும் நமைச்சல் அரிப்பு சொறி கரப்பான் போன்ற தோல் நோய்களும் குணமாகும்

 

  தேகம் அழகு பெறும் மேலும் கபம் சார்ந்த நோய்கள் அனைத்தும் விலகும் சுவாசப் பிரச்சினைகள் தீர்ந்து சுவாசம் எளிதாக நடைபெறும் சர்க்கரை நோயின் அளவை சமநிலைப்படுத்தும்


வெகுமூத்திர நோய் தீர

          இன்னொரு முறை


தேவையான பொருட்கள்


மஞ்சள் கிழங்கு 

ஆவாரை விதை  

நீர் பூலா ( கொழுந்து இலைகள்)


செய்முறை


    இவை மூன்றையும் சம அளவாக பொடி செய்து கொள்ள வேண்டும்


அதன்பின்


   அத்தி மரப்பட்டையை அரை கிலோ அளவு கொண்டுவந்து இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி இதை 250 மில்லியாக சுண்ட காய்ச்சி இதை கசாயம் செய்து கொள்ள வேண்டும்


பொடி செய்து வைத்திருக்கும் மூலிகை கலவையில் அத்தி மரப்பட்டை கசாயத்தை விட்டு நன்கு அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரைகளாக செய்து நிழலில் உலர்த்தி ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும்


  இந்த மாத்திரையை காலை மாலை இருவேளையும் தொடர்ந்து பதினைந்து சாப்பிட்டு வந்தால் அடிக்கடி சிறுநீரை கழிக்க வைக்கும் வேகம் மூத்திர நோய் நீங்கி சர்க்கரையின் அளவு சமநிலைக்கு வந்துவிடும்


சர்க்கரை நோயை சமநிலையில் வைத்திருக்க ஒரு எளிய வைத்திய முறை


தும்பை துளசி சிறுகுறிஞ்சான் இந்த மூன்று இலைகளையும் வகைக்கு பத்து எண்ணிக்கை வீதம் எடுத்து இதனோடு மூன்று மிளகு சேர்த்து காலை வெறும் வயிற்றில் இதை நன்றாக மென்று விழுங்கி வர சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் வெகு மூத்திர நோய் வெகு எளிதாக குணமாகும்


சர்க்கரை நோயால் ஏற்பட்ட 

சத்துப் பற்றாக்குறை நிவர்த்தியாக


ஒரு கைப்பிடி சிறுகுறிஞ்சான் இலையை கொண்டு வந்து மை போல அரைத்து சுண்டைக்காய் அளவிற்கு மூன்று உருண்டைகள் செய்து ஐம்பது மில்லி தேங்காய் பாலுடன் கலந்து தினந்தோறும் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால்  சர்க்கரை வியாதியால் ஏற்பட்ட உடல் தளர்வு நீங்கி உடலுக்கு உற்சாகமும் புத்துணர்ச்சியும் கிடைப்பதோடு உடலுக்கு வலிமையும் உண்டாகும் நீர்த்த விந்து கெட்டிப்பட்டும் விந்து உற்பத்தி அதிகரிக்கும் உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும்


இன்னொரு முறை


  வில்வ இலை நூறு கிராம் ஜாதிக்காய் இருபத்தைந்து கிராம் இவைகளை பொடி செய்து ஒன்றாக கலந்து இதில் மூன்று கிராம் எடுத்து தினம் இருவேளை தொடர்ந்து இருபது  நாட்கள் பசும்பாலுடன் கலந்து பருகிவர உடல் சோர்வுகள் நீங்கும் உடலுக்கு தேவையான சத்துக்கள் உண்டாகும்

விந்து கெட்டிப்பட்டு போக சக்தி அதிகரிக்கும் மேலும் உடல் குளிர்ச்சி அடையும் வெப்ப நோய்கள் அனைத்தும் குணமாகும்


சீரண குறைபாடு உள்ளவர்கள் பசும் பாலுக்குப் பதிலாக ஆறிய வெண்ணீரில் இந்த மூலிகை பொடியை கலந்து பயன்படுத்தி பயன் பெறலாம்


      வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

                  சித்தர்களின் சீடன்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி