அல்புமின்

 🇨🇭#உங்களுக்கு_சிறுநீர்_நுரை_போன்று #வெளியேறுன்கிறதா❓


🇨🇭 #அவசியம்_இதைப்_படியுங்கள்❗


⭕ அல்புமின் என்பது என்ன❓ அது ரத்தத்தில் இருந்து சிறுநீரில் கலந்தால் என்ன ஆகும்❓


👉அல்புமின் என்றால் என்ன❓


சிறுநீரில் உள்ள அல்புமினுரியா அல்லது அல்புமின் சில தொடர்புடைய சிறுநீரக நோயின் அறிகுறியாகும். 


அல்புமின் என்பது ஒரு வகை புரதம். இது பொதுவாக இரத்தத்தில் காணப்படுகிறது. 


இந்த புரதம் சிறுநீரில் கலக்கும் போது சிறுநீரக பிரச்சனைகளை உண்டாக்குகிறது. 


ஒரு ஆரோக்கியமான சிறுநீரகத்தின் வேலை என்னவென்றால் அல்புமின் புரதத்தை இரத்தத்தில் இருந்து சிறுநீருக்குள் செல்ல அனுமதிக்காது. ஆனால் சிறுநீரின் (நெப்ரான்களில்)வடிப்பான்களில் அமைப்பில் ஏதேனும் சேதம் நேர்ந்தால் சிறுநீரகங்களில் செயல்பாடு சீர்குலையும். இதனால் இரத்தத்தில் உள்ள அல்புமின் சிறுநீருக்குள் எளிதாக நுழைந்து விடுகிறது. (நெப்ரான்களில்)

வடிப்பான்களில் சரியாக வடிகட்ட முடியாமல் போய் விடுகிறது. 

👉சிறுநீரில் அல்புமின் இருப்பதை

புரோட்டினூரியா என்கின்றனர்.


🔴 சிறுநீரில் உள்ள அல்புமின் அதிகம் வெளியேறினால்……

IgA நெப்ரோபதி வியாதி ஏற்படும்❗


💢 நெப்ரோபதியின் அறிகுறிகள்❓


IgA நெப்ரோபதியின் வியாதியில் பெரும்பாலானவர்களுக்கு சிறுநீர் கழிக்கையில் வலியில்லாமல் இரத்தமாக வருவது முதல் அறிகுறியாக இருக்கும்.


👉பலமுறை இது………


 தொண்டை வலி, 


இருமல், சளியைத் தொடர்ந்து வரும். 


சிலருக்கு வயிற்றுப் போக்கு, 


அபூர்வமாக கடின உடற்பயிற்சியைத் தொடர்ந்து கூட வரலாம் 


இரத்தம் கலந்த சிறுநீர் லேசாக கலங்கலாகத் தோன்றலாம் 

பால் இல்லாத தேநீர் போன்ற பழுப்பு நிறம் சிலருக்கு நல்ல சிவப்பு நிறம் என்றும் தோன்றலாம்.


பொதுவாக இது வலி இல்லாமல் வரும் சிலருக்கு சிறுநீரகங்கள் உள்ள பகுதியில் லேசான வலி வரலாம். 


சிறுநீரில் சிலருக்கு கண்ணுக்கு தெரியும் அளவு இரத்த ஒழுக்கு விட்டு விட்டு வரும் இடையில் சிறுநீர் தெளிவாக தோன்றினாலும் அதனை எடுத்து உறுப்பெருக்கியில் (MICROSCOPE) பரிசோதித்து பார்த்தால் அதில் இரத்த சிவப்பணுக்கள் அதிகமாக இருப்பது தெரிய வரலாம் சிலருக்கு சிறுநீரில் இரத்த அணுக்கள் வராமல் கூட போகலாம்.


இன்னும் சிலருக்கு சிறுநீரில் புரத ஒழுக்கு (proteinuria) வரலாம். இது சிறுநீரை பரிசோதிக்கும் போது தெரிய வரும் இந்த புரத ஒழுக்கு மிக அதிகமாக இருந்தால் அது நெப்ரோடிக் சின்ட்ரோம் எனப்படும் பாதிப்பாக மாறி அவருக்கு உடலில் நீர் கோர்த்து முதலில் கணுக்கால் பின்னர் கால், கை, முகம் மற்றும் உடல் முழுவதும் வீக்கம் என தொந்தரவாக தெரிய வரும் சிலருக்கு முதன் முதலில் உயர் இரத்த அழுத்தம் கண்டு பிடிக்கப்பட்டு அதன் காரணத்தை ஆராயும் போது இது தெரிய வரலாம்.


🉐 சிறுநீரில் புரோட்டீன் அதிகமாவதற்கான காரணங்கள்❓


▶உடல் வறட்சி


▶கடுமையான உடற்பயிற்சி


▶மன அழுத்தம்


▶காய்ச்சல்


▶கடுமையான குளிர் வெப்பநிலை


🈵 யாருக்கெல்லாம் இப்பிரச்சனையின் அபாயம் உள்ளது❓


◀சர்க்கரை நோய்


◀உயர் இரத்த அழுத்தம்


◀அமிலோய்டோசிஸ்


◀பெர்கர் நோய்


◀இதய உள்ளுறையழற்சி


◀இதய செயலிழப்பு


◀ஹாட்ஜ்கின் லிம்போமா


◀லூபஸ்


◀மலேரியா


◀மைலோமா


◀ஆர்த்தோஸ்டேடிக் புரோட்டினூரியா


◀கர்ப்பம்


◀முடக்கு வாதம்


◀சிக்கிள் செல் இரத்த சோகை


⭕ சிறுநீரில் புரோட்டீன் அதிகம் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்❓


➡நுரைப் போன்ற சிறுநீர்


➡மூச்சு விடுவதில் சிரமம்


➡அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம்


➡களைப்பு


➡கை, கால் அல்லது முக வீக்கம்


➡சரும வறட்சி


➡தூங்குவதில் சிரமம்


➡விக்கல்


➡குமட்டல்


➡வாந்தி


➡கவனம் செலுத்த முடியாமை


⭕சிறுநீரில் உள்ள அல்புமின் ஏன் முக்கியமானது❓


நாள்பட்ட சிறுநீரக நோயின் வளர்ச்சியை சரிபார்க்கவும், மக்களிடையே சிறுநீரக நோய் இருக்கிறதா என்பதை அறியவும், சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு அதன் கட்டத்தை அறியவும் சுகாதார வழங்குநர்கள் அல்புமினுரியாவை சரிபார்க்கிறார்கள். அல்புமினியாவின் அளவை பொருத்து இது கணக்கிடப்படுகிறது.


⭕புரோட்டினூரியா ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகள்❓


இப்படி சிறுநீரகத்துக்குள் நுழையும் புரதத்தால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிப்படைகிறது. இதனால் உடலில் பல சிக்கல்கள் ஏற்பட ஆரம்பிக்கும். சிறுநீரக செயல்பாடு முழுமையாக பாதிப்படையக் கூட வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் கூட சிறுநீரக நோய்க்கு ஆபத்து காரணிகளாக அமைகின்றன. எனவே ஆயுர்வேத சிகிச்சையின் மூலம் இந்த ஆபத்து காரணிகளை கட்டுப்படுத்த முடியும்.


🔴தொடர்புடைய ஆபத்து காரணங்கள்❓


⭐உயர் இரத்த சர்க்கரை காலப்போக்கில் உங்க சிறுநீரகத்தை சேதப்படுத்தி விடும். எனவே இரத்தத்தில் இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


⭐உயர் இரத்த அழுத்தமும் சிறுநீரகத்தை எளிதாக சேதப்படுத்தி விடும். எனவே இரத்த அழுத்த பிரச்சனைகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.


🉐 சிறுநீரக புரதம் கசிய காரணங்கள்❓


⏩ஒரே நேரத்தில் அதிகமாக ஆன்டி பயாடிக் எடுத்துக் கொள்வது


⏩திடீரென்று ஷாக் அல்லது விபத்துகள் சிறுநீரகத்தை பாதிக்கிறது. 


⏩உடலில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் கூட புரோட்டினூரியாவிற்கு காரணம் ஆகலாம்.


⏩பரம்பரை ரீதியாக சிறுநீரக பிரச்சினை இருப்பது.


⏩கர்ப்பிணி பெண்களுக்கு தற்காலிகமாக புரோட்டினூரியா இருக்கும்.


🇨🇭புரோட்டினூரியாவை கண்டறிவது எப்படி❓


💉 சிறுநீரில் அல்புமின் இரத்த பரிசோதனைள்❓💉


1, eGFR

[ Estimation of Glomerular filtration rate ]


2,  Creatinine   

     Urea

     Uric Acid


3,  Urine for Microalbumin


3, Urine Routine Analysis Test


5, ELECTROLYTE


6, Lipid Profile


     HDL            

     LDL

     TGL


7, CBC 

    ESR 

    

8, IgE


9, LFT


10, KUB ABDOMEN & Pelvic CT SCAN


👉 ஆரம்ப கட்டத்தில் புரோட்டினூரியாவின் அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை. ஆரம்பத்தில் புரதத்தின் அளவு குறைவாக இருக்கும். எப்பொழுது சிறுநீரில் புரதத்தின் அளவு அதிகமாகுமோ அப்பொழுது அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். எனவே ஆரம்பத்திலேயே இதைக் கண்டறிவது சிகிச்சை பெறுவது நல்லது.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி