இயற்கை வாழ்வு

 வாழ்வியல் முறையில் எவற்றைக் கடைபிடித்தால்  நமது உடலைக் கழிவுகளற்ற உடலாகப் பராமரிக்க முடியும் ...?


* எந்திரத்தனமாக மூன்று வேளை உண்ணாமல்

நன்கு பசித்தபின்பு உணவு உண்பது...

மூன்று வேளையா, இரண்டு வேளையா, அல்லது ஒருவேளை உண்பதா என்பதை அவரவர்களின் பசியே தீர்மானிக்கிறது ...


* அடுத்ததாக நீர் என்பது உடலின் கழிவுகளை நீக்க உதவும் என்ற அடிப்படையில் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர், நான்கு லிட்டர் என்று நீர் அருந்துவதைத் தவிர்த்து 

தாகம் இருக்கும் போது 

தேவையான அளவிற்குத் தண்ணீர் அருந்துவது ... தண்ணீர் தவிர, இளநீர் 

உட்பட சுவையுடன் இருக்கும் பானங்கள் அனைத்தும் உணவுப்பட்டியலில்தான் வரும் என்பதையும் புரிந்துகொள்க ...


*  இரவுத் தூக்கம் ..

இரவு உணவை 7 மணிக்குள் முடித்துக்கொண்டு,  இரவு

9 - 9:30 மணிக்குள் படுக்கைக்குச் செல்வது, அதிகாலை 3 மணி வரை உறங்குவது சிறந்தது ...


* உடல் என்பது எந்திரமல்ல என்பதைப் புரிந்துகொண்டு, 

போதிய ஓய்வினை உடலுக்கு அளிப்பது ...


மேற்கூறியவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை சிதைக்காமல் பார்த்துக்கொள்வதற்காகக் கடைபிடிக்கவேண்டியவை ...


அடுத்து நமது உடலைக் கழிவுகள் இல்லாமல் பராமரிப்பதன் மூலம் நோயெதிர்ப்பாற்றலை வலுப்படுத்தி, விழிப்போடு வைத்துக்கொள்வதற்கு, குறிப்பிட்ட கால இடைவெளியில் விரதம் மேற்கொள்வது ....


அனைத்து மதங்களும் ஏதோ ஒருவகையில் விரதத்தை வலியுறுத்துகின்றன ...


இது நாள்வரை விரதமே இருந்து பழக்கமில்லாதவர்கள் 

துவக்க காலத்தில் சமைத்த உணவினைக் கைவிட்டு, காலையில் எழுந்ததில் 

இருந்து, பசிக்கும் 

பொழுது பழங்கள் மட்டும் எடுத்துக்கொண்டு, மாலை 6 மணிக்கு மேல் கஞ்சி அருந்தி, விரதத்தினை முடிக்கலாம் ...


பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பழவிரதம் எடுக்கலாம் ..


சமைத்த உணவினைக் 

கைவிட முடியும் என்று நம்பிக்கை வந்த பின்பு, 

பழச்சாறுகளுடன் விரதம் மேற்கொள்ளலாம் ...


அதாவது பசிக்கும்பொது, விரும்பிய பழச்சாறுகள் அருந்தி, மாலையில் கஞ்சியோடு விரதத்தை முடிப்பது ...


அடுத்தது நீர் விரதம்....


பசிக்கும்போதும் தாகம் எடுக்கும்போதும் சிறிதளவு நீர்மட்டுமே எடுத்துக்கொள்வது... மாலையில் பழச்சாறுடன் விரதத்தை முடித்து, இரவில் தேவைப்பட்டால் கஞ்சி எடுத்துக்கொள்ளலாம் ...


அடுத்து முழு விரதம் ...


காலையில் இருந்து மாலை வரை எந்த உணவும், நீரும் அருந்தாமல் இருப்பதே முழு விரதம் ஆகும்...

விரதத்தின் முழுமையான பலன்களும் இந்த முழு விரதத்தில்தான் கிடைக்கும் ...

காலையில் இருந்தே உணவையும், நீரையும் கைவிட்டு, மாலையில் சற்று

நீர் அருந்திவிட்டு, பழச்சாறு அருந்தி, விரதத்தை முடிக்கலாம்... இரவு தேவைப்பட்டால் கஞ்சி எடுத்துக்கொள்ளலாம் ...


இந்த விரதத்தை மேற்கொள்ளும் துவக்க காலத்தில் லேசான காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சோர்வு, ஏற்கனெவே இருக்கும் உடல் தொந்தரவுகள் அதிகரிப்பது போன்றவை நடக்கும் ...


உடலின் வியர்வை நாற்றம் கூடுவது, வெளி மூச்சு நாற்றத்துடன் வெளிப்படுவது, சிறுநீர் துர்நாற்றத்துடனும் அடர் நிறத்துடன் வெளிப்படுவது இவை உடலின் கழிவு நீக்கத்தினைக் குறிக்கிறது ...


வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் மாதத்திற்கு, இரண்டு அல்லது மூன்று 

முறை விரதங்களை மேற்கொண்டு கழிவுகளற்ற உடலாக நம் உடலைப் பராமரிப்பதன் மூலம் 

நோய்கள் அண்டாமல் ஆரோக்கிய வாழ்வை அனைவராலும் மேற்கொள்ள

முடியும் ... 


இவற்றோடு உடலின் நவ துவாரங்களின் வழியாகவும், தோலின் மூலமாகவும் வெளியேறுவது அனைத்தும்

கழிவுகளே ... காய்ச்சல் என்பது நோயல்ல ... கழிவுகளை முறையாக வெளியேற்ற உடலைத் தயார் செய்யும்

நோயெதிர்ப்பு சக்தியின் பணியே என்பதைப் புரிந்து கொண்டு கழிவு நீக்கத்திற்கு

முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பது ...


இவற்றை  முறையாகக் கடைபிடிக்கும் எவரும் 

நோய்கள் குறித்த, கிருமிகள் குறித்த பயமின்றி வாழலாம் ....


கழிவுகளே நோய்களுக்கும்,

கிருமிகளுக்கும் ஆதாரம்...


அ. புனிதவதி

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி