முகம் பொலிவு பெற

 🇨🇭#முகத்தில்_வரும்_அனைத்து_சரும #பிறச்சனைகளுக்கும்…❗


💊#வீட்டு_மருத்துவத்தில்_தீர்வு…❓❗


🇨🇭#இதற்கான_தீர்வுகள்


⭐ முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளியைப் போக்க……


ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப்

பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும் புள்ளியின்

மேல் போட்டு வரவும் .


தினமும் இது போல் செய்து வர சில நாட்களில் கரும் புள்ளி மறைந்து விடும்.


🇨🇭 முகப் பரு – கரும் புள்ளி 💊

தழும்புகள் நீங்க 


1 – கோபி சந்தனம் – ஒரு டீ ஸ்பூன் அளவு


2 – பாதாம் பருப்பு – மூன்று (நீரில் ஊற வைத்தது)


3 – தயிர் – 2 – டீ ஸ்பூன்


4 – எலுமிச்சை சாறு – 2 – டீ ஸ்பூன்

இவைகளை அரைத்து எடுத்து முகம்,கழுத்து பகுதி

களில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும்.


இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப்பரு ,கரும்புள்ளி ,தழும்புகள் நீங்கி முகம் அழகு

பெரும்.


🇨🇭 தழும்பு நீங்க 💊


அதிமதுரம்  : 30 க்ராம்


தாமரைக்கிழங்கு : 30 க்ராம்


அல்லிக்கிழங்கு 30 க்ராம்


அருகம்புல் 30 க்ராம்


வெட்டிவேர் 30 க்ராம்


ஜடாமஞ்சி 30 க்ராம்


மரமஞ்சள் வேர்ப்பட்டை 30 க்ராம்


இவற்றைச் சுத்த நீர்  விட்டு அரைத்து சீசாவிலே பத்திரப்படுத்தவும் ஓரு நாள் முழுவதும் மருந்து சீசாவைத் தண்ணீரில் ஊறப் போடவும் அதன் பிறகே எடுத்துப் பூசவேண்டும் குளிர்ந்த நீரினால் அலம்பித் துணியினால் நன்றாகத் துடைக்கவும் தழும்புகள் மறையும்.


🇨🇭 முகத்தில் தழும்புகள் – தீப்புண்💊 தழும்புகள் மறைய 


அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்து தேங்கா எண்ணையில் விட்டு குழப்பி வைத்துக் கொள்ளவும்.


இதனை இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வர தழும்புகள் படிப்படியாக மறையும்.


💊ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப்பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும் புள்ளியின் மேல் போட்டு வரவும்....தினமும் இது போல் செய்து வர சில நாட்களில், தழும்பு, கரும் புள்ளி மறைந்து விடும்.


💊கோபி சந்தனம் – ஒரு டீ ஸ்பூன் அளவு

பாதாம் பருப்பு – மூன்று 

(நீரில் ஊற வைத்தது)


தயிர் – 2 – டீ ஸ்பூன்


எலுமிச்சை சாறு – 2 – டீ ஸ்பூன்.....


இவைகளை அரைத்து எடுத்து முகம், கழுத்து பகுதி களில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும்.....இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப் பரு ,கரும்புள்ளி ,தழும்புகள் நீங்கி முகம் அழகு

பெரும்.


🇨🇭முகத்தில் தழும்புகள் – தீப்புண்💊 தழும்புகள் மறைய 


அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரி யாக்கி தூள் செய்து தேங்கா எண்ணையில் விட்டு குழப்பி வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வர தழும்புகள் படிப்படியாக மறையும்.


💊கசகசா, மஞ்சள் துண்டு


2 ஸ்பூன் கசகசா எடுத்து தண்ணீரில் ஊறவைக்கவும். சிறிதளவு மஞ்சள் துண்டு, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும்.


இந்தக் கலவையை முகத்தில் அம்மை வடுக்கள் உள்ள இடத்தில் நன்றாகத் பூசி உலற விடுங்கள். 20 நிமிடம் கழித்து பாசிப் பருப்பு மாவினால் முகத்தைக் கழுவுங்கள். மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினுமினுக்கும்.


💊எலுமிச்சை வைத்தியம்


ஒரு எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டவும். அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். தினசரி இதனை செய்து வர அம்மைத் தழும்புகள் மறைந்துவிடும்.


🇨🇭 முகப்பரு,கரும்புள்ளி நீங்க,சிவப்பு💊 அழகு பெற 


➡தேவையான பொருட்கள்


1 - முல்தானி மட்டி பொடி - 200,கிராம் 


2 - கஸ்தூரி மஞ்சள் பொடி - 50, கிராம் 


3 - பூலாங்கிழங்கு பொடி - 50, கிராம் 


4 -கோரைக் கிழங்கு பொடி - 50, கிராம் 


5 -நன்னாரி வேர் பொடி -50, கிராம்,


இவைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன வாங்கி ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.இதனை இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து பால் சிறிது விட்டுக் குழப்பி முகத்தை 

நீரில் கழுவித் துடைத்து விட்டு முகத்திலும் கழுத்துப் பகுதிகளிலும் பூசி விட்டு அமர்ந்து அரை மணிநேரம் கழித்து குளிர்ந்தநீரில் கழுவி 

விடவும் .இதே போல் வாரம் இரண்டு முறை செய்து வர முகப்பரு ,கரும்புள்ளி, இவைகள் நீங்கும் மேலும் முகத்தின் தோல் பகுதியில் உள்ள இறந்த செல்

களை அகற்றும்,முகம்

மென்மையாகும்,சிவப்பு 

அழகு கிடைக்கும். இது அனுபவ முறையில் கைகண்ட முறையாகும்.


🇨🇭முகத்தில் அம்மை வடு ,தழும்பு நீங்க 


1 -- கருவேப்பிலை - ஒரு கை பிடி 


2 - கசகசா - ஒரு டீ ஸ்பூன் 


3 - கஸ்தூரி மஞ்சள் - சிறிய துண்டு 


இதனை அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து குளித்து வர அம்மை தழும்பு மறைந்துவிடும்.


🔴இயற்கை முறையில் வெள்ளையாக தேவையான பொருட்கள்❓


உருளைக் கிழங்கு ஒன்று, கேரட் ஒன்று, தக்காளி இரண்டு. இவற்றை கொண்டு எப்படி மருந்தை செய்வதென பார்க்கலாம்.


முதலில் உருளைக்கிழங்கை தோள் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள், இதனுடன் கேரட்டை கழுவி சிறு துண்டுகளாக வெட்டி சேருங்கள், தக்காளியையும் கழுவி இதனுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.


இப்போது இந்த ஜூஸை ஐஸ் கியூப் ட்ரே ஒன்றில் உற்றி குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுங்கள். கலவை ஐஸ் கியூப் ஆனதும் காலை மற்றும் மாலை கை, கால், முகம் முழுவதும் மிக்ஸ் செய்த ஐஸ் கட்டியால் மசாஜ் செய்து சில நிமிடம் விட்டு சோப் பயன்படுத்தாமல் கழுவி விடுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வாருங்கள் இயற்கையாக வெள்ளையாகலாம்..!!


⭕ தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பின்னர் பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.


⭕மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.


⭕தினமும் ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவி வரும் போது முகம் பளபளப்பாகவும், மிகவும் இளமையாகவும் காணப்படும்.


⭕அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவி வரும் போது முகத்தில் முடி வளர்ச்சி குறைந்து தேவையற்ற முடிகள் நீங்கி முகம் அழகு பெறும்.


⭕வேப்பிலை, புதினா, சிறிதளவான மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி, அத்தூளில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்து வரும் போது, முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.


🇨🇭#_முகத்தில்_வளரும்_தேவையற்ற #முடிகளை_நீக்க…❓❗


👌குப்பைமேனி இலைப்பொடி, 


கோரைக் கிழங்குப் பொடி, 


கடலைமாவு, 


கஸ்தூரி மஞ்சள் பொடி, 


அடுப்பு சாம்பல் 


ஆகிய அனைத்தையும் தலா 50 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து கலக்கவும். இதில் இருந்து அரை டீஸ்பூன் எடுத்து, அதில் 10 சொட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த பேஸ்ட்டை தேவையற்ற முடிகள் உள்ள பகுதியில் தடவவும். பேஸ்ட் நன்கு காய்ந்ததும், போதுமான அளவுக்கு அழுத்தித் தேய்க்க... வேர்க்கால்கள் வலுவிழந்து உதிர்ந்துவிடும். இதைத் தொடர்ந்து 3 மாதங்கள் செய்து வர நாளடைவில் உதிர்வு நிகழும்.


அடுப்பு சாம்பல் கிடைக்காதவர்கள் தேங்காய் ஓட்டைக் கொளுத்தி அதன் மூலம் கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இயற்கை முறையில் செய்யும் இந்த முறையால் எந்த பக்க விளைவுகளும் இல்லை.


💊 குப்பை மேனி இலை, 💊


வேப்பங்கொழுந்து, 


விரலி மஞ்சள் 


ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும்.

இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும்.


தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.


💊தேவையான பொருட்கள்💊


சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்


எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்


தேன் - 1 டீஸ்பூன்


மைதா/சோள மாவு - 1-2 டீஸ்பூன்


வேக்சிங் ஸ்ரிப் அல்லது ஒரு துண்டு துணி


ஸ்படுலா அல்லது கத்தி


👉செய்முறை❓


ஒரு பௌலில் சர்க்கரை, எலுமிச்சை, தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, 3 நிமிடம் சூடேற்ற வேண்டும். கலவையானது கெட்டியாக இருந்தால், சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, அறைவெப்ப நிலையில் குளிர வைக்க வேண்டும். பின் மைதாவை முடி உள்ள இடத்தின் மேல் தடவிக் கொள்ளவும். பின்பு கத்தியால் கலவையை எடுத்து, முடி உள்ள இடத்தில், அது வளரும் திசையை நோக்கி தடவி, பின் வேக்சிங் ஸ்ரிப் அல்லது துணியை அவ்விடத்தில் வைத்து, முடி வளரும் எதிர் திசையை நோக்கி இழுக்க வேண்டும். இப்படி முற்றிலும் முடி நீங்கும் வரை செய்யுங்கள்.


💊1 டேபிள் ஸ்பூன் அயோடின் 2% மற்றும் 1 கப் பேபி ஆயிலை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முடி உள்ள முகம்,கை, கால் பகுதிகளில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் அப்பகுதிகளில் உள்ள முடி மாயமாய் மறைவதோடு, இனிமேல் அப்பகுதியில் முடியின் வளர்ச்சியும் குறைய ஆரம்பித்து, நாளடைவில் வளராமல் நின்றுவிடும்.


💊நலுங்கு மாவைத் தேய்த்துக் குளிப்பதும் நல்லது


💊கோரைக் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் இரண்டும் ஒரு பங்கும்; அம்மான் பச்சரிசி எனும் எளிய மூலிகையை அதில் பாதி பங்கும் சேர்த்து நன்கு மை போல் அரைத்துக்கொண்டு, தேவையற்ற முடியுள்ள (மீசைப் பகுதியில்) போட்டுவைத்து அரை மணி நேரம் கழித்துக் கழுவிவந்தால் முடி நீங்கும். 


⏩கடலை மாவு⏪


கடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.   


⏩தேன்⏪


கடினமாக இருக்கும் தேனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால், முகத்தில் வளரும் முடிகளை தடுக்கலாம். வேண்டுமெனில், தேனுடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து செய்யலாம். 


⏩எலுமிச்சை மற்றும் சர்க்கரை⏪


30 கிராம் சர்க்கரையை எலுமிச்சை சாறு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால், முடியின் வளர்ச்சியானது தடைபடும்.


⏩கடலைமாவு தயிர் மஞ்சள் தூள்⏪


இது ஒரு பாரம்பரிய முறை என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்த முறையை அக்காலத்தில் இருந்து பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். அது என்ன முறையெனில், கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி படிப்படியாக குறையும்.


⏩பப்பாளி மற்றும் மஞ்சள்⏪


பப்பாளி மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக கலந்து, அதனை முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். இதன் மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.


⏩சோள மாவு⏪


ஒரு டீஸ்பூன் சோள மாவில், 1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதனை முகத்தில் தடவி, உலர விட்டு கழுவினால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, இறந்த செல்களும் வெளியேறிவிடும். 


⏩மஞ்சள்⏪


அக்காலத்தில் மக்கள் தினமும் மஞ்சள் தேய்த்து குளிப்பதனால் தான், அவர்களது சருமத்தில் முடிகளின்றி, சருமம் பட்டுப்போன்று இருந்தது. எனவே தினமும் இதனை தடவி குளித்து வந்தால், முடிகளின் வளர்ச்சி குறைவதோடு, முடிகளும் நீங்கிவிடும். 


⏩கடுகு எண்ணெய்⏪


கடுகு எண்ணெய் கூட தேவையில்லாத முடிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். அதற்கு கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.


👌 கடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.


👌 கஸ்தூரி மஞ்சள் தூள் 

1 ஸ்பூன், காய்ச்சாத பால் 2 ஸ்பூன் ஆகியவை சேர்த்து முகத்தில் தடவ நாளடைவில் முடி உதிர்வதுடன், முடியின் வளர்ச்சி குறையும். மேலும் சருமம் அழகு பெறும்.


👌 சிறிதளவு எலுமிச்சை சாறுடன், தேன் சேர்த்து நன்றாக குழைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர் நீரில் கழுவ சருமம் சுத்தமடைவதோடு, தேவையற்ற ரோமங்கள் குறைய்யும்.


⭐இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமடையும்.


⭐வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.


⭐பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர்ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.


⭐தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.


⭐ கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.


⭐தேன் மூன்று மேசைக்கரண்டி எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை( கறுவா) தூள் கலந்து கரும்புள்ளிகள்உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.


⭐ முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதேபோல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.


⭐ முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங் களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.


⭐ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர,கரும்புள்ளிகள் மறையும்.


⭐ கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.


⭐உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.


⭐எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர அவை நாளடைவில் மறைந்து விடும்.


⭐வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.


⭐ முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.


⭐முட்டைகோசுடன் பன்னீர் ரோஜாவை மசித்து அதில் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.


⭐வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் கரும்புள்ளிகள் நீங்கும்.


⭐சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்.


⭐தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.


⭐முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளியைப் போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப்பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும்புள்ளியின் மேல் போட்டு வரவும். தினமும் இது போல் செய்து வர சில நாட்களில் கரும்புள்ளி மறைந்து விடும்.


⭐புதினா இலையை அலசி ,நன்கு அரைத்து முகத்திலும்,கழுத்திலும் தேய்க்கவும்.அரை மணிநேரத்திற்க்கு பிறகுகழுகிவிடவும்.


⭐பரு தழும்பு மாற 1டீஸ்பூன் முள்ளங்கிஅரைத்து, 1 டீஸ்பூன் மோரில் கலக்கி முகத்தில் தேய்த்து 1 மணிநேரத்தில் கழுகிவிடவும்.


⭐4,5 பாதம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து அதில் 2 ஸ்பூன் பால்,1 ஸ்பூன் ஆரஞ்ச்சாறு ,1 ஸ்பூன் கேரட் ஜூஸ் சேர்த்து அரைத்து முகத்திலும்,கழுத்திலும் தேய்க்கவும் அரைமணிநேரத்திற்குப் பிறகு கழுகிவிடவும்.முகத்தின் தோல் பொலிவு பெரும்


⭐பழுத்த தக்காளி ஒன்றும்,மூன்று சொட்டு ஆரஞ்சாறும் சேர்த்து முகத்திலும்,கழுத்திலும் தேய்த்து 20 நிமிடத்திற்குப் பிறகு கழுகி விடவும்.


⭐தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, சந்தனம் ஆகியவற்றை திட்டமான முறையில் கலந்து தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பருக் குறையும்.


⭐சிறிது படிகாரத்தை எடுத்து தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். அந்த தண்ணீரால் முகத்தை சில நாட்கள் தொடர்ந்து கழுவி வந்தால் முகப்பருவினால் தோன்றிய தழும்புகள் குறையும்.


‬⭐பாசிப்பயறு மாவு, எலுமிச்சைச்சாறு சேர்த்துத் தடவ முகப்பரு நீங்கும்.


⭐அவரை இலைச்சாற்றை தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால் முகப்பரு,தழும்புகள் நீங்கி முகம் பளபளக்கும்.


⭐முகப்பரு வந்த கருப்பு தழும்பு போக என்ன செய்ய வேண்டும் முகப்பரு, கரும்புள்ளிகள், தழும்புகள் அவரை இலை சாறு தினமும் முகத்தில் பூசி காயவிட்டு குளிக்க முகம் பளபளக்கும், தழும்புகள், கரும்புள்ளிகள், முகப்பரு நீங்கும்.


⭐நாட்டு மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் புனுகு வாங்கி வந்து முகப்பரு எங்கெங்கு உள்ளதோ அங்கங்கே தடவி விட்டு சில மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு மறைந்து போகும். 


⭐2 ஸ்பூன் கசகசா எடுத்து தண்ணீரில் ஊறவைக்கவும். சிறிதளவு மஞ்சள் துண்டு, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும்.


இந்தக் கலவையை முகத்தில் அம்மை வடுக்கள் உள்ள இடத்தில் நன்றாகத் பூசி உலற விடுங்கள். 20 நிமிடம் கழித்து பாசிப் பருப்பு மாவினால் முகத்தைக் கழுவுங்கள். மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினுமினுக்கும்.


⭐எலுமிச்சசம் பழம் சாறு எடுத்து ஒரு மெல்லிய துணியினாலோ, மிருதுவான பஞ்சினாலோ தொட்டுப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் உலரவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள். முகம் கருமை நிங்கும். தொடர்ந்து சில நாட்கள் இதை செய்து வர முகம் பளிச் ஆகும்.


 ⭐பப்பாளிப் பால் சிறந்த மருந்தாகும். பப்பாளி மரத்திலிருந்து எதை உடைத்தாலும் பால் வரும். அதைச் சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். இதை கால் மணி நேரம் வைத்திருக்கவும். பின் முகப்பரு எங்கே உள்ளதோ அங்கே இக்கலவையை நன்றாக பூசி ஊறவைத்து பின் கழுவவேண்டும். இதனால் முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி