மன அழுத்தம்

 🇨🇭 #மன_அழுத்தமுடையோருக்கு

#ஏற்படும்_உடல்_பாதிப்புகளும்……


💊 #அதை_தீர்க்கும் 

#வீட்டு_வைத்தியங்களும்…❗❓


👉 மன அழுத்தம் என்பது இல்லாமல் இன்றைய வேகமாக உலகில் யாராலும் இருக்க முடிவதில்லை. காரணம் சூழ்நிலை தாக்குதல்கள்.


20 சதவீத நோய்கள் மன அழுத்தத்தினாலேயே ஏற்படுகின்றன என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. பலவித நோய் தாக்குதல்களுக்கு இன்று மருத்துவத்தில் தீர்வு உண்டு. இது விஞ்ஞானத்தின் முன்னேற்றம். வருமுன் காப்பதற்கும் பல தீர்வுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவைதான் தடுப்பு ஊசிகள், சத்து மாத்திரைகள், உணவு முறைகள், சுகாதாரச் சூழ்நிலை என உருவாயின. ஆயினும் மக்கள் அதிகமாக நோய் வாய்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.


இன்னும் சொல்லப் போனால் இளைய சமுதாயம் அதிகம் நோய் வாய்படுகின்றது. அதிக தலைவலி என்று சொல்லாத இளைய சமுதாயம் குறைவு. டென்ஷன் என்ற சொல், குழந்தைகளின் முதல் சொல் ஆகிவிட்டது. 30 வயதிற்குள் மாரடைப்பு என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. எந்த துறையில் இருப்போரும் மன அழுத்தத்துடனேயே இருக்கின்றனர்.


💢👉 இன்றைய சூழல் இருக்கும் 

நிலை என்ன❓


அதிக எதிர்பார்ப்புகள் அநேகரிடத்தில் இருக்கின்றது. வேலை கொடுப்பவரும் அதிகம் எதிர்பார்க்கிறார். வேலை செய்பவரும் அதிகம் எதிர்பார்க்கிறார். இதனால் இருவருக்குமே ஏமாற்றம் ஏற்படுகின்றது. இதே நிலை தான் பெற்றோர்கள், பிள்ளைகள் உறவிலும் உள்ளது. நடக்க முடியாத ஒன்றினை நடக்க வேண்டும் என்ற பிடிவாதம் பலரை நிம்மதியற்றவர்களாக ஆக்கி விடுகின்றது.


மிக ஏழைகள் நிறைந்த நம் நாட்டில் நல்ல நிலையில் இருக்கும் அநேகருக்கும் சரி, சாதாரணமானவர்களுக்கும் சரி பணமே பத்தவில்லை. ஏழைகளின் நிலையினை என்ன சொல்வது? யாருமே ஆரோக்கியமான பேச்சுகளை பேசுவதில்லை. பண்பான பேச்சுகள் பஞ்சமாகி விட்டது. உரத்த குரலில் தடித்த வார்த்தைகளில் எங்கும் எதிலும் சண்டைதான். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையினை அலுவலகத்திலேயே வாழ்ந்து முடித்து விடுகின்றான். சுகவாசிகளை காணும் கடும் உழைப்பாளி நொந்து விடுகின்றான்.


இவையெல்லாம் மனிதனை மனஅழுத்தம் உடையவனாக ஆக்கி விடுகின்றது. இந்த மன அழுத்தமே உடலில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. சிறிது மனஅழுத்தம் இல்லாவிடில் மனிதன் முழு சோம்பேறி ஆகி விடுவான். நேரத்திற்கு எழ வேண்டும். நேரத்தில் செய்ய வேண்டும், கடமைகளை ஆற்ற வேண்டும் என்ற ஒரு பொறுப்புணர்ச்சி அளவான மன அழுத்தத்தினை கொடுக்கவே செய்யும்.


👉இந்த மனஅழுத்தம்……


♐ ஐம்புலன்களை கூராக்கும்.


♐ சக்தி கூடும், வேகம் கூடும், கவனிப்பு கூடும்.


♐ சவால்களை ஏற்கச் செய்யும்.


டி.வி. பார்த்தல், விளையாட்டில், பொழுது போக்கில் மனஅழுத்தமே இல்லை. பரீட்சையில் மனஅழுத்தம் உண்டு. ஆனால் இந்த மனஅழுத்தம் சக்தி எல்லையைத் தாண்டும் பொழுது அது ஆபத்தாகிறது. 


⭕#உடனே……


✴ அட்ரினல், கார்டிசால்ஹார்மோன் சுரக்கும்.


✴ இருதயம் தடதடவென அடித்துக் கொள்ளும்.


✴ ரத்த கொதிப்பு கூடும்.


✴ மூச்சு வேகமாகும்.


✴ தன் உயிரையும் காத்து, பிறர் உயிரையும் காப்பர்.


ஆக மனஅழுத்தம் சற்று கூடும் பொழுது சிறிது நேரம் அமைதியாய் மூச்சு விடுங்கள். நமது வேகஸ் நரம்பு ஐம்புலன்களோடு சம்பந்தப்பட்டது. ஆக ஒருவரை சற்று அமைதிப்படுத்திக் கொள்ள அறியும் பொழுது உடல் நலம் எந்த விதத்திலும் பாதிப்பு அடையாது. நம்மால் அமைதியின் மூலமே பல செயல்களை சாதிக்க முடியும் என்பதனை உணர வேண்டும். 


💢👉மன அழுத்தமுடையோருக்கு ஏற்படும் உடல் பாதிப்புகள்.❓


➡ அதிகமாக வியர்க்கும்


➡ முதுகு வலி இருக்கும்


➡ நெஞ்சு வலி இருக்கும்


➡ தாய், தந்தையருக்கு அதிக மனஉளைச்சல் இருந்தால் குழந்தைகள் அதிகம் குண்டாக இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.


➡ சதை பிடிப்பு, சதை வலி


➡ அடிக்கடி தலைவலி


➡ இருதய நோய்


➡ உயர் ரத்த அழுத்தம்


➡ நோய் எதிர்ப்பு சக்தி இன்மை


➡ நகம் கடித்தல்


➡ நரம்பு துடிப்பு


➡ உடலில் ஊசி குத்துவது போன்ற உணர்வு


➡ தூக்கம் சரி வர இன்மை


➡ வயிறு சரியின்மை


போன்றவை இருக்கும்.


💢👉 மனஅழுத்தம் உடையோர் வெளிப்படும் மன பாதிப்புகள்❓


▶ கோபம்


▶ படபடப்பு


▶ சோகம்


▶ சோர்வு


▶ பாதுகாப்பின்மை போல் உணர்தல்


▶ எரிச்சல்


▶ கவனமின்மை ஆகியவை ஆகும்.


மனஅழுத்தம் சிறிய, பெரிய என எந்த செயலானாலும் ஏற்படும். ஒருவருக்கு சாதாரணமாகத் தெரியும் ஒரு வேலை மற்றொருவருக்கு சுமையாகத் தெரியும். 


💢👉ஆயினும் மனஅழுத்தம் ஏற்படுத்தும் சில பொதுவான காரணங்கள் உள்ளன.❗


▶ குடும்ப பிரச்சினைகள்


▶ பணப்பற்றாக்குறை


▶ தீரா நோய்


▶ வேலை பளு, வேலை செய்யும் இடத்தில் பிரச்சினை


▶ நேரமின்மை


▶ அடிக்கடி இடம் மாற்றும் வேலை


▶ உறவுகளில் கசப்பு


▶கருச்சிதைவு


▶ தாய், தந்தை ஆகும் பொழுது அந்த திடீர் பொறுப்பு


▶ நெரிசலான போக்குவரத்தில் அடிக்கடி செல்வது


▶ வேலை இழத்தல்


▶ பக்கத்து வீட்டின் அதிக சத்தம் (சண்டை, பைக், கார் சத்தம்)


▶ நெரிசலான சூழ்நிலை கொண்ட வீடு


▶ கர்ப்பம்


▶ உத்யோக ஓய்வு


பொதுவில் கர்ப்ப காலத்தில் தாய்க்கு மன அழுத்தம் இருந்தால் அது குழந்தையை பாதிக்கும். அக்குழந்தை பள்ளியில் மற்ற குழந்தைகளால் சீண்டி தொந்தரவு செய்யப்படும். அக்குழந்தை தைரியமின்றி, தன்னம்பிக்கை இன்றி இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.


💢👉மனஅழுத்தம் உடையோர் வெளிப்படுத்தும் நடவடிக்கைகள்❓❗


⬇ அதிகம் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.


⬇ மிகவும் குறைவாக சாப்பிடுவார்கள்.


⬇ உணவுக்கு ஏங்குவார்கள்.


⬆ திடீரென கோபத்தில் கத்துவார்கள்.


⬇ குடி பழக்கம் ஏற்படும்.


⬅ சமூகத்திலிருந்து ஒதுங்குவார்கள்.


✴ அடிக்கடி அழுவார்கள்.


✴ உறவுகளில் பிரச்சினை இருக்கும்.


மனஅழுத்தத்தினை சரிவர கவனியாது விட்டு விட்டால் அது தொடர் அழுத்தம் ஆகிவிடும். இந்த பாதிப்பு உள்ளவர்களைப் பார்த்தால்

எதையுமே நெகடிவ் எனப்படும் எதிர் மறையாகத்தான் பார்ப்பார்கள். (உதாரணம்) வெளியில் போனால் விபத்து நிகழும் என்பார்கள்.


▶ எதற்கெடுத்தாலும் பயம் என்பார்கள்.


▶ வேகமாகப் பேசுவார்கள்.


▶ எண்ண ஓட்டம் மிக வேகமாக இருக்கும்.


▶ சதா கவலை மட்டும்தான் இவர்கள் வாழ்க்கையாகி விடும்.


▶ எக்ஸிமா, சோரியாசிஸ் போன்ற சரும பிரச்சினைகள் ஏற்படும்.


▶ தனிமை படுத்தப்பட்டது போல் உணர்வார்கள்.


▶ எதையும் தவறாகவே புரிந்து கொள்வார்கள்.


▶ மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு உடையவர்களாக இருப்பார்கள்.


நடக்க முடியாத ஒன்றை நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதில் உள்ள நடைமுறை உண்மையை இவர்களால் உணரவே முடியாது. 


💢👉மன அழுத்தம் இல்லாதிருக்க நீங்களே உங்களுக்குச் செய்து கொள்ள வேண்டிய உதவிகள்.❓❔❔


மன அழுத்தம் என்பது இல்லாமல் இன்றைய வேகமாக உலகில் யாராலும் இருக்க முடிவதில்லை. காரணம் சூழ்நிலை தாக்குதல்கள். நீங்கள் வேலைக்குச் செல்பவரோ, வீட்டில் இருப்பவரோ, வயதானவரோ, இள வயதோ மன அழுத்தம் நீங்க நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று உடற்பயிற்சிதான். உடற்பயிற்சி உடலுக்கு மட்டும் நன்மை அளிப்பதில்லை. மனதிற்கும் நம்மை அளிக்கின்றன. மன அழுத்தம் நீங்குகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன.


எளிதான உடற்பயிற்சி, நடைபயிற்சி, அதையாவது செய்யுங்கள். குழந்தைகளுக்கு நீச்சல், ஓட்டம், சைக்கிள் போன்றவற்றினை இப்பொழுதிலிருந்தே நன்கு பழக்கி விட்டீர்கள் என்றால் மன அழுத்தம் என்ற பாதிப்பின் பிடியில் அவர்கள் சிக்க மாட்டார்கள்.


* வேலையை பிரித்துக் கொடுங்கள். ‘அனைத்துமே நான் செய்தால் தான் சரியாக இருக்கும்’ என சொல்லி எல்லா வேலைகளையும் தலை மேல் இழுத்து போட்டு திணறுபவர் ஏராளம். இவ்வாறு செய்வதால் உடல், மனம் இரண்டும் சோர்ந்து விடும். வேலையும் சீராக முடியாது. அவரவர் வேலையை அவரவரை செய்ய விடாது தானே செய்வதும் தவறே. ஆக வேலையினை பிரித்துக் கொடுங்கள். மற்றவர்களையும் பொறுப்பேற்கச் செய்யுங்கள்.


* கடுமை இல்லாத கண்டிப்பு இருக்க வேண்டும். இதன் பொருள் என்ன? ஒருவர் சற்று ஏமாந்தவர் போல் இருந்தால் அனைவரும் எல்லா வேலைகளையும் அவர் மீதே திணிப்பர். ஆகவே ‘முடியாது’ என்பதனையும் ‘உங்களுக்கு வேலை கூடுதல்’ என்பதனையும் கடுமை இல்லாத வார்த்தைகளால் கண்டிப்பாக சொல்லி விடுங்கள்.


* குடி பழக்கமும், புகை புழக்கமும் மன அழுத்தத்தினை கூட்டவே செய்யும். அநேகரும் மன அழுத்தம் தீர குடி பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்கின்றனர். புகை பிடித்தல், டென்ஷன் ஏற்பட்டவுடன் முதல் தீர்வாக செய்வர். இவை இரண்டும் ஒருவரை மிக மோசமான நிலைக்கு கொண்டு செல்லும். இதனை அடியோடு நீக்குவதே மன அழுத்த தீர்வாகும்.


* இதே போல் காபி குடிப்பதும். அடிக்கடி காபி குடிக்கும் பழக்கம் உடையோர் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுவர். அதிக காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் இன்றே அதனை கை விடுங்கள்.


⏩ சத்தான உணவு


பழங்களும், காய் கறிகளும் மன அழுத்தம் நீக்கும் மிக சிறந்த உணவுகள். அதிக எண்ணெய், மசாலா உணவுகளை கண்டிப்பாய் தவிர்த்து பழங்களையும், காய்கறிகளையும் உண்ணுங்கள்.


⏩ நேரம்


 எதனையும் நேரப்படி முறையாகச் செய்யுங்கள். விடிய விடிய கண் விழிப்பது, பகலில் தூங்குவது, பாதி ராத்திரி உண்பது, காலை பட்டினி கிடப்பது போன்று தாறுமாறான வாழ்க்கை முறைகள் காலப் போக்கில் மன அழுத்தத்தினை ஏற்படுத்தும்.


⏩ மூச்சுப் பயிற்சி


யோகா பயிற்சி முறையில் மன அழுத்தம் இன்றி இருப்பதற்கான சில மூச்சு பயிற்சி முறைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.


💚 மனம் விட்டு பேச சில நல்ல உறவுகள், நட்பு அவசியம்.


💚 தியானம், யோகா, மன இறுக்க தளர்ச்சி பயிற்சி முறைகள் அனைவருக்குமே அவசியம்.


🇨🇭#மனஅழுத்தம்_குணமாக 

#வீட்டு_வைத்தியம்


💊#மனஅழுத்தம்_குறைய…💊


❓தேவையான பொருட்கள்


மகிழம்பூ – 100 கிராம்


ரோஜாப்பூ – 100 கிராம்


தாமரைப்பூ – 100 கிராம்


தண்ணீர்விட்டான் கிழங்கு – 100 கிராம்


சுக்கு – 10 கிராம்


ஏலக்காய் – 10 கிராம்


ஆகியவற்றை சேர்த்து அனைத்தையும் ஒன்று கலந்து தூள் செய்யுங்கள்.


     இதில் காலை, இரவு உணவுக்குப்பின் இருவேளையும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டுவர…… 


மனபயம், 


மன அழுத்தம், 


மன உளைச்சல் 


போன்றவை தீரும். மன அழுத்த நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இதனைச் சாப்பிடுவர அளப்பரிய பலன்களைப் பெறலாம்.


💊#மனஉளைச்சல்_நீங்க❓💊


❓தேவையான பொருட்கள் 


பொன்னாங்கண்ணி – 100 கிராம்


கரிசலாங்கண்ணி - 100 கிராம்


சீந்தில் - 100 கிராம்


வல்லாரை - 100 கிராம்


ஆகியவற்றை எடுத்து நன்கு வெயிலில் காயவைத்து ஒன்ரு கலந்து தூள் செய்துகொள்ளவும்.


இதில் மூன்று கிராம் அளவு, ஒரு டம்ளர் பசும்பாலுடன் சேர்த்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, அபார நினைவாற்றல் உண்டாகும். மேலும் சோர்வு, படபடப்பு, தூக்கமின்மை, ரத்த அழுத்தம், மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற கோளாறுகளும் தீரும்.


💊#தூக்கமின்மை_பிரச்சனை_நீங்கி💊

#மனசு_புத்துணர்வு_பெற…


❓தேவையான பொருட்கள்❗


பிங்க் நிற இமாலய கல் உப்பு – 2 டேபிள் ஸ்பூன்


நாட்டுச் சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்


தேன் – 5 டேபிள் ஸ்பூன்


👉தயாரிக்கும் முறை


ஒரு பாட்டிலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு குலுக்க வேண்டும். இப்படி குலுக்குவதால், அந்த அனைத்து பொருட்களும் ஒன்று சேர்ந்து, ஒரு ஒருபடித்தான கலவை கிடைக்கும். இந்த கலவையைக் கொண்டு தூக்கமின்மை பிரச்சனைக்கு உடனடி தீர்வைக் காணலாம்.


👉பயன்படுத்தும் முறை


இந்த கலவையை இரவில் படுக்கும் முன் அல்லது நடுராத்திரியில் எழும் போது, ஒரு டேபிள் ஸ்பூன் கலவையை எடுத்து நாக்கிற்கு அடியில் வையுங்கள். அந்த கலவையை கரைவதற்குள், நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற்றுவிடுவீர்கள். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள். இதை முயற்சித்தால் அசந்துபோய்விடுவீர்கள்.


⭕ வல்லாரைக் கீரை


மன அழுத்தத்தை எதிர்ப்பதற்கு மிக முக்கிய பழங்கால மூலிகை. நமக்கு கடுமையான மன அழுத்தம் உண்டாகும்போது, ​​நமது உடலில் உள்ள ஹார்மோன்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைய நடைபெறுகின்றன.


மன அழுத்தத்தை அதிகப்படுத்தும் ஹார்மோனான கார்டிசோலின் (Cortisol) அளவு மிக அதிகமாக ஆகும். வல்லாரைக் கீரை, அனைத்து மன அழுத்தம் தொடர்பான ஹார்மோன்களை ஒழுங்குபடுத்த உதவுகிறது மற்றும் மனதில் ஒரு இனிமையான விளைவை உருவாக்குகிறது.


⭕மாதுளம் பழரசம்


மாதுளையில் இருக்கும் இயற்கை நிறமான அடர்சிவப்பு மனதை லேசாக்குகிறது, இதில் உல்ல யுரொதலின் ஏ எனும் சத்து நம் உடலின் செல் சுத்திகரிப்பு மையத்தை புத்துணர்வோடு வைத்திருக்கிறது.


அதிலும் சர்க்கரை ஐஸ்கட்டிகள் போன்றவற்றை விடுத்து நேரடியான மாதுளை ரசம் அருந்துவதே மன அழுத்தத்திற்கு நல்லது.


⭕வாழைப்பழம்


மூளையில் சுரக்கும் செரோட்டனின் சுரப்பியை சமநிலையில் வைக்க வாழைப்பழம் உதவுகிறது. செரோடினின் சீரற்ற முறையில் இருப்பதால் பலவித உளவியல் பாதிப்புகள் ஏற்படுகிறது.


அதனை சீராக்குவதில் வாழைப்பழம் பெரும்பங்கு வகிக்கிறது. ஆகவே எப்போதும் உம்மென்று இருப்பவர்களுக்கு அடிக்கடி வாழைப்பழம் உண்ணக் கொடுக்கலாம். அதன் மூலம் அவர்கள் சமநிலையோடு இருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம்.


⭕அமுக்கிரா கிழங்கு பொடி


சித்த வைத்தியத்தில் சிறப்பான இடம் இந்த அமுக்கிரா கிழங்கு பொடிக்கு உண்டு. நரம்பு தளர்ச்சி நோய்க்கு ஏற்றது தாம்பத்தியத்திற்கு உதவுவது போன்ற சிறப்புகள் அமுக்கிரா கிழங்கிற்கு உண்டு என்றாலும் மன அழுத்தம் போக்குவதற்கும் பெரும் துணை புரிகிறது.


தூங்கும் முன் ஒரு டம்ளர் பாலில் அரை ஸ்பூன் அமுக்கிரா கிழங்கு பொடி போட்டு அருந்தி வர மன அழுத்தத்தால் ஏற்படும் தூக்கமின்மை குறைபாடுகள் நீங்கி எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் நிம்மதியாக உறக்கம் வரும்.


⭕ஜாதிக்காய் பொடி


பாலில் ஜாதிக்காய் பொடியை ஒரு சிட்டிகை சேர்த்து அருந்தி விட்டு, உறங்க சென்றால் அதீத கனவுகள் பதட்டங்கள் நிறைந்த தூக்கம் இல்லாமல், அமைதியான உறக்கமும் தெளிவான கனவுகளும் ஏற்படும்.


⭕மண்பானை நீர்


அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி மண்பாண்ட தண்ணீர் அருந்துவது நலம் பயக்கும். மேலும் அந்த நீரில் வெட்டி வேர் போட்டு குடிப்பது அல்லது சீரகம் போட்டு வைத்து குடிப்பது மனம் சிறப்பாக செயல்பட உதவி செய்யும்.


⭕தினசரி இரண்டு முறை குளியல்


மன அழுத்தம் ஏற்படும்போதெல்லாம் சில சமயம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் ஷவரில் சற்று நேரம் நின்று விட்டு வந்தால் சற்று மன பாரம் குறைந்து லேசாகி விடும். சில சினிமா காட்சிகளில் கூட இது போல காட்டுவதுண்டு. அது உண்மைதான் என்கிறது அறிவியல்.


அதிலும் ஒருசில தைலங்களை இந்தக் குளியலில் இணைத்துக் கொள்வதன் மூலம் மன அழுத்தம் என்பது வெகு சீக்கிரம் காணாமல் போய்விடும்.


லாவண்டர் தைலம் , டி ட்ரீ தைலம் ரோஸ்மேரி தைலம் போன்றவைகள் விற்பனைக்கு கிடைக்கின்றன.


இவைகளை குளியலில் சிறிது சொட்டுகள் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல பலன், நாள் முழுதும் சுறுசுறுப்பு, மகிழ்வான மனநிலை போன்றவற்றை பெறலாம்.


⭕உணவு முறை


மன அழுத்தம் நீங்க உணவு முறையிலும் கவனம் செலுத்த வேண்டும் செயற்கை நிறமூட்டப்பட்ட உணவுகள் கவன சிதைவு நோய்களை உண்டாக்கும்.


எண்ணையில் பொறித்த உணவுகளை குறைத்து ஆவியில் வேக வைத்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மனம் சமநிலையோடு இருக்க உதவி செய்யலாம்.


⭕ வைட்டமின் டி


வைட்டமின் டி குறைபாடு இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மனநிலையும் சீராக இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கும். உணவில் காளான்கள், முட்டை, சோயா பால் ஆகியவற்றை சேர்த்துக்கொள்வதன் மூலம் வைட்டமின் டி சத்துக்களை பெற முடியும்.


⭕ கார்போஹைட்ரேட்


கார்போஹைட்ரேட் உள்ளடங்கிய உணவு வகைகளை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நரம்புத் தளர்ச்சி, கவலை, தூக்கமின்மை போன்றவற்றிற்கு கார்போஹைட்ரேட் குறைபாடு முக்கிய காரணமாக இருக்கிறது. முழு தானியங்கள், புழுங்கல் அரிசி போன்றவை கார்போஹைட்ரேட் நிரம்பப்பெற்றவை. அவைகளை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


⭕ மூளைக்கு...


பீன்ஸ், சோயா, பருப்புகள், இறைச்சிகள், பருப்பு வகைகள், பன்னீர் போன்ற புரத சத்து நிறைந்த உணவுகளையும் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது மூளைக்கும், மன நலனுக்கும் புத்துணர்வு அளிக்கும்.


⭕ பழங்கள்


மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் செர்ரி பழ வகைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. திராட்சை, செர்ரி பழங்கள், கீரைகள் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.


⭕ ஒமேகா 3


ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு பதார்த்தங்கள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும், மனச்சோர்வை குறைக்கவும் உதவுகின்றன.


⭕ வெண்ணெய்


மதிய உணவில் வெண்ணெய் சேர்த்து கொள்வது நல்லது. அதிலிருக்கும் நல்ல கொழுப்பு, மூளை வேகமாக செயல்பட துணைபுரியும்.


⭕ காளான்கள்


காளான்கள் மன ஆரோக்கியத்திற்கு நல்லவை. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது. நல்ல மனநிலையை ஊக்குவிக்கும் உணவு பட்டியலில் வெங்காயமும் இடம்பிடித்திருக்கிறது. வெங்காயத்தையும், இஞ்சியையும் உணவில் சேர்ப்பது புற்றுநோய் பாதிப்பில் இருந்து காக்கவும் உதவுகிறது.


⭕ தக்காளி


தக்காளி பழத்தில் போலிக் அமிலம் மற்றும் ஆல்பா- லிபோயிக் அமிலம் ஆகியவை அதிகம் உள்ளன. இவை இரண்டும் மனச்சோர்வுக்கு எதிராக போராடும் வல்லமை படைத்தவை. தக்காளி பழத்தை சாலட்டுகளாக மற்ற காய்கறிகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.


⭕ பீன்ஸ்


பீன்ஸை உணவில் சேர்த்து கொள்வது இதயத்திற்கு நல்லது. மனநலனுக்கும் நன்மை சேர்க்கும்.


⭕ வாழைப்பழம்


வாழைப்பழம் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாகும்... இதில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது இந்த பொட்டாசியம் நீங்கள் மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர துணை புரிகிறது.


⭕ டீ குடிக்கலாம்


டீ பிரியர்கள் நிச்சயமாக ஒவ்வொரு வீட்டிலும் இருப்பார்கள். உங்களுக்கு மன அழுத்தம் இருக்கும் போது சூடாக ஒரு டீ குடியுங்கள் உங்களது மனது லேசாகும்.


⭕ மீன்


ஒமேகா 3 பேட்டி ஆசிட் நிறைந்த உணவான சால்மன் போன்ற மீன்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. இந்த மீன்களை நீங்கள் மன அழுத்தத்துடன் இருக்கும் போது சாப்பிடலாம்.


⭕ கேரட்


கேரட் பச்சையாக சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்றது. மேலும் கேரட்டில் மிக அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளது.. இது உங்களது பசியை போக்கி உங்களது மன சோர்வையும் நீக்குகிறது.


⭕ பால்


ஒரு டம்ளர் பாலில் அதிகமாக விட்டமின் பி, புரோட்டின், விட்டமின் டி மற்றும் எலும்புகளை பலப்படுத்தும் கால்சியம் மற்றும் உங்களது தசைகளின் வலிகளை போக்கும் தன்மையும் உள்ளது. தூங்குவதற்கு முன்னர் ஒரு டம்ளர் பால் குடித்தால், உங்களுக்கு நன்றாக தூக்கம் வரும்.


⭕ நட்ஸ்


சோர்வு உங்களது வேலைகள் மற்றும் திறனை குறைக்கும் திறனை கொண்டவை.. இது காய்ச்சல் வந்தது போன்ற உணர்வை தரும். இது போன்ற சோர்வில் இருந்து விடுபட நீங்கள் பாதாம், வால்நட்ஸ் போன்றவற்றை சாப்பிடலாம். இது உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இதில் உடலுக்கு தேவையான விட்டமின்களும், ஜிங்க்கும் உள்ளது.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி