Posts

Showing posts from January, 2021

தலைசுற்றல் குணமாக

 வெர்டிகோ மற்றும் மயக்கம் குணமாக வல்லாரை 100 கிராம் வசம்பு 100 கிராம்                மிளகு 50 கிராம் திப்பிலி 50 கிராம் மஞ்சள் 100 கிராம்               கழற்சி விதை 50 கிராம் இவைகளை சூரணித்துக் கொள்ளவும் இதில் வசம்பை கரியாக்கி சேர்க்கக் தேவை இல்லை அப்படியே சேர்க்கலாம் காலை மாலை 3 கிராம் சூரணத்தை தேனில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும் வெர்டிகோ குணமாகும் திடிர் திடிர் என ஏற்படும் மயக்கும் குணமாகும் ஜன்னி மற்றும் திடிரென உணர்வற்று போதல் குணமாகும் நாபக மறதி, கிறுக்றுப்பு உயரமான கட்டிடத்தில் ஏறினால் கீழே தள்ளுவது போன்ற உணர்வு குணமாகும் மூளைக்குப் போகும் ரத்தக் குழாயில் ஏற்படும் கட்டி மற்றும் அடைப்புகள் குணமாகும் எளிமையான மருந்து ஆனால் மாபெரும் வேலை செய்யும் யார் வேண் மானாலும் இதனை தயார் செய்யலாம் தகவல் தொடர்புக்கு    Jeeva Shakthi         | KKE அக்பர் ஜி                      ஜீவசக்தி ஹெர்பல் கிளினிக் ஈரோடு - 2....

மாதுளம் பழம்

 ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் சிறந்த பலனை தரும் மாதுளம் பழம்.: இதயநோய்கள், இதய பலவீனம் நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்கு மாதுளை சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடைக்கூடும். மூக்கிலிருந்து குருதி வடிவதை நிறுத்த மாதுளம் பூச்சாற்றுடன் அறுகம்புல் சாற்றையும் சம அளவு கலந்து தரலாம். மாதுளம்பழச் சாறு ஒருடம்ளர் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும். அதிக தாகத்தைப் போக்கும். நெஞ்சு  எரிச்சல், மந்தம், அடிக்கடிமயக்கம் போன்றவை நீங்கும். மாதுளம் பழத்தின் மேல்புறம் ஒரு துளையிட்டு, அதனுள் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி, அதனை ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் முழுவதும் பழத்தில் கலந்து விடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதயவலி நீங்கிவிடும். இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது, இருமலை நிறுத்துகிறது. மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை...

துளசி மல்லி கசாயம்

 சளி,இருமல்,ஆஸ்துமா குறைக்கு உதவும் துளசி மல்லி கஷாயம்: தேவையான பொருட்கள்: பச்சைத் துளசி  –  50 கிராம் சுக்கு                     –    20 கிராம் மிளகு                   –   அரை ஸ்பூன் ஏலக்காய்            –   5 தனியா(மல்லி விதை) – 20 கிராம் பனை வெல்லம் –   தேவையான அளவு செய்முறை: முதலில்  துளசி , சுக்கு , மிளகு , ஏலக்காய்,  மல்லி ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு  தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும் . பின்னர் அதனை வடிகட்டி அதனுடன் பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து  அருந்தவேண்டும். இதனை தினமும் காலை உணவுக்கு பின் அல்லது இரவு உணவுக்கு பின் எடுக்கவும் பயன்கள்: இந்த கஷாயத்தை குடித்து வந்தால் சளி, இருமல்,தும்மல்,மூக்கடைப்பு ஆஸ்துமா  மற்றம் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு முழு ஆரோக்கியம் பெறலாம்.

விக்கல் தீர மருந்து

 #விக்கலுக்கு தொடர்ச்சியாக வரக்கூடிய விக்கலுக்கு இன்னும் சித்தர்கள் கூறிய மருத்துவம் ஊர்வசி வைத்தியம் எனும் நூலில் இருந்து திப்பிலி    -  1   பலம்   சீரகம்        -  1   பலம்  மேற்கண்ட இரண்டு தினுசும் சுத்தி செய்து சூரணித்து வஸ்திரகாயம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் தொடர் விக்கல் கண்டபோது ஒரு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து உண்ண விக்கல் தீரும் குருவே துணை அகத்தியர் குடில்

வெரிகோஸ்வெய்ன்

 வெரிகோஸ் நோயை குணப்படுத்தும் அற்புத மருத்துவம் : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்த வெரிகோஸ் நோய் ஏற்படலாம். நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், மைக்ரோபியல் போன்ற நோய்கள் நம்மை எளிதாக தாக்குகிறது. வெரிகோஸ் வெயின் நோய் ஏற்பட காரணம் என்ன? நமது உடலில் உள்ள ரத்தம் வேறொரு பகுதிக்கு செல்ல முடியாமல் ரத்த நரம்புகளிலே தங்குவதால் நரம்புகள் புடைத்து மற்றும் விரிவடையும் இதை தான் வெரிகோஸ் வெயின் நோய் என்கிறோம். இந்நோயை குணப்படுத்துவதற்கு நீண்ட நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டும். இந்த வெரிகோஸ் வெயின் வருவதற்கு முக்கிய காரணம் அதிகமான உடல் எடை மற்றும் ரத்த அழுத்தம் போன்றவை முக்கிய காரணமாகும். ஆனால் இந்த வெரிகோஸ் நோயை இயற்கையான முறையில் குணப்படுத்த ஒரு அற்புத பாட்டி மருத்துவம் உள்ளது. தேவையான பொருட்கள் : • பச்சை தக்காளி - 2  • தேன் - 1 டேபிள் ஸ்பூன்  செய்முறை : முதலில் பச்சை தக்காளிப் பழங்களை எடுத்து அதனுடன் தேன் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.  பின் அரைத்த அந்த பானத்தை தினமும் காலையில் உணவுக்கு முன் குடிக்க வேண்டும...

தேன்ஊறல் வெங்காய தெளிவு நீர்

 தேனில் ஊறவைத்த வெங்காயம் சாப்பிட்டால் உண்டாகும் பயன்கள்.: தேனில் வெங்காயத்தை ஊறவைத்து, அதன் மூலம் எடுக்கப்படும் சிரப் குடிப்பதால், உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.  வெங்காயம்  ஒரு சிறந்த உணவு. இதை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு அதிகரிக்கும். மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டு வரப்படும் சிறந்த உணவு தேன். உடல் ஆரோக்கியம், அழகு என பலவற்றுக்கு தேன் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.    சிறந்த மருத்துவ குணம் கொண்ட இந்த இரண்டையும் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சிரப்பை எப்படி செய்வது, இதன் மூலம் பெறும் நன்மைகள். தேவையான பொருட்கள்:.  வெங்காயம், தேன்.   செய்முறை.:  மெல்லியதாக வெங்காயத்தை நறுக்கி கொள்ளுங்கள். சிறிய சைஸ் வெங்காயமாக இருந்தால் அப்படியே முழுசாகவும் பயன்படுத்தலாம்.    ஒவ்வொரு வெங்காய ஸ்லைஸின் நடுவிலும் தேன் தெளித்து, ஒன்றின் மீது ஒன்றாக அடுக்குங்கள். ஒரு பவுலில் தேனோடு ஊறவைத்த இந்த வெங்காயத்தை 24 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். மறுநாள் பௌலில் சேர்ந்திருக்கும் நீர்மம் போன்ற அந்த ...

ஆரோக்கிய உணவு மருந்து

 இது மருந்தல்ல             மாபெரும் விருந்து மருத்துவ குணத்தை தருகின்ற பத்தியம் இல்லாத உணவு முறைகள்     ஒரு மாதுளம் பழத்தின் முத்துக்களும் அதே அளவு துருவிய தேங்காயும் கலந்து தினந்தோறும் சாப்பிட்டு வருவதால் நமது உடலுக்கு அனைத்து சத்துகளும் இதனால் கிடைக்கின்றது          நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியம் கிடைப்பதற்கு இதுவே முதன்மையான உணவாக இருப்பதாக சித்தர்களின் பாடல்கள் கூறுகின்றன   தேங்காயும் வாழைப்பழமும் ஒன்றாக கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு களைப்பு உடல் சோர்வு ஏற்படுவதில்லை   இதனால்தான் விரதம் இருப்பவருக்கு விரதம் முடிந்தவுடன் இதை முதல் உணவாக தருகிறார்கள் என்பது நினைவில் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது    தேங்காயுடன் மரவள்ளி கிழங்கு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைப்பதுடன் உடலுக்கு நல்ல வலிமையும் கிடைக்கின்றது   மைதாவில் தயாரிக்கின்ற பிஸ்கட் மற்றும் ரொட்டி வகைகளை உண்பதால் குடலில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படுகிறது இதனால் அஜீரண கோளாறுகள் உண்டாகின்றன   ...

விவசாய நிலம் வாங்கும் முறை

 அறிந்து கொள்வோம் 🐓ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்... 🐓விடியற்காலையில்  சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உசுரு’ இருக்கு என்று அர்த்தம். கூவாவிட்டால் மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம். 🐓சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவர். இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் சேவல் மண்ணைக் கிளறி அதனுள் உள்ள புழுக்களை தின்று மறுநாள் தெம்பாகக் கூவும். 🐓மண்ணை கிளறி புழு கிடைக்கவில்லை என்றால், அந்த கூவலின் ஆற்றலில் தெரிந்துவிடும். புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது. 🐂 ஒரு விவசாய கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்குள் மேய விடவேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம். 🐂 அப்படி அவை படுக்கும்  இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம். 💊 அறிவியல் வளர்ந்து விட்டது எங்களால் எதையும் சாதிக்க முடியும்ன...

தலைசுற்றல்

 #தலைச்சுற்று_கிறுகிறுப்பு_ஒன்று #தானா……❓ #அலட்சியம்_கூடாது_மக்களே…❗❗❗ 👉 உட்கார்ந்து எழுந்திருக் கும் போது, அரை நொடி நேரத்துக்கு சர்ரென்று தலை சுற்றியடிக்கும் அதன் பின் சரியாகி விடும். எந்த விளைவோ, தொடர் பாதிப்போ இருக்காது. 👉 தலைச்சுற்றல் அடிக்கடி தொடரும்; அப்படி வந்தால், முதுகுத்தண்டுவடம், அதைச்சுற்றியுள்ள நரம்புகள், எலும்புப்பகுதி பாதிக்கப்படும். ஒரு வித எரிச்சல் இருக்கும். இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? முதலில் சொல்லப் பட்டுள்ளது, சாதாரண தலை சுற்றல் தான். ⭕ இரண்டாவது தான் #வெர்டிகோ எனப்படும் தொடர் கிறுகிறுப்பு. இதுவும் தலைசுற்றல் மாதிரியே இருக்கிறது. ஆனால் மூளை நரம்பு மண்டலத்தில் இருந்து ஆரம்பித்து பாதிக்கும். அதிக பட்ச ஆபத்து இதய கோளாறு தான். அதனால், தலைசுற்றலாக இருந்தாலும், கிறுகிறுப்பாக இருந்தாலும் உஷாராக இருந்து, முன்னெச்சரிக்கையாக டாக்டரிடம் போய் பரிசோதித்துக் கொள்வதே நல்லது. * #சாதாரண_தலைச்சுற்றல் போலத்தான் #_வெர்டிகோ’வும் இருக்கும். இந்த பாதிப்பு இருப்போரை இந்த கோளாறு தூங்க விடாது. சரியாக படுக்கவும் முடியாமல் தவிக்க வைத்துவிடும்.  தலைசுற்றல் ஏற்பட்டவு...

வெல்லம்

 வெல்லத்தில் வெள்ளம் போல் இருக்கும் நன்மைகள்.: வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என பார்ப்போம். வெல்லம் சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம்.    ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம்.    வெல்லத்தில் நீர்ப்புத் தன்மை இருப்பதால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சமச்சீர் அடைந்துவிடும்.    வெல்லத்தில் அதிக நார்ச்சத்து உண்டு. அது உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்யக் கூடியது.     பித்தம், வாதம் மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தை பானமாகச் செய்து தரலாம்.   குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரக் கூடிய குடல் புழுக்களை கட்டுப் படுத்த அதிகாலையில் வெல்லத்தை சிறிது அளவு உட்கொண்டால் போதும்.    பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைசுற்றலும் இருக்கும் அந்நிலையில் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும்

பெண்களுக்கான குறிப்புகள்

 பெண்களுக்காக… 50 முக்கிய குறிப்புகள் -  இயற்கை மருத்துவம் முடி அடர்த்தியாக வளர....! பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். இன்றைய அவசர உலகில் பெண்களுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை முடியை கலர் செய்வது, ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை அலங்கரித்துக் கொள்கின்றனர். சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது. மேலும் நமது சுற்றுப்புற சுழலில் உள்ள மாசுக்களால் கூந்தல் பாதிப்படைகின்றது. அது போன்ற பாதிப்பை வேலைக்குச் செல்லும் பெண்களே அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. தலை முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதே என இனி கவலைப்பட தேவையில்லை. தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்: 1. ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும். 2. முடி செழித்து ...

தான்றிக்காய் காபி

 உடல் வழிகளை போக்கும் தான்றிக்காய் காபி தேவையான பொருட்கள்: தான்றிக்காய் – 250 கிராம் நன்னாரி – 50 கிராம் செய்முறை: மேற்கூறிய பொருட்களை ஒன்றின்டாக இடித்து பின்பு வாணலியில் போட்டு நன்று கருக வறுத்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.   தினமும் ஒரு ஸ்பூன் அளவு தூள் எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து பாதியாக சுண்டவைத்துக் கொள்ளவும்.பின்பு அதனை வடிகட்டி அதனுடன் பால் மற்றும் பனங்கற்கண்டு அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து அருந்தவும்   பயன்கள் இந்த தேனீரை தினமும் அருந்தி வந்தால் இடுப்பு , முதுகு , கழுத்து வலி முழுமையாக நீங்கும் மற்றும் நல்ல நினைவாற்றலை உண்டாக்கும் மேலும் மூலசார்ந்த பிரச்சனைகள் , இரத்தமூலத்திற்கும் மிகச் சிறந்த தேனீர். கழுத்து வலி சரியாகும் இரவு படுக்கப் போகும் முன்: வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும். குறிப்பு: அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும். வர மிளகாய்க்கு மாற்ற...

ஓமம்

 ஓமத்தின் (ஓமம்) மருத்துவக் குணங்கள் உடல் பலம் பெற சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள். இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். வயிறுப் பொருமல் நீங்க சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும். ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும். புகைச்சல் இருமல் நீங்க சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை ச...

மாதவிலக்கு

 மாதவிலக்கு பிரச்சனைகள் தீர சில இயற்கை வைத்தியங்கள்..!! 100 கிராம் அச்சு வெல்லத்துடன் 10 கிராம் எள் சேர்த்து இடித்துத் தூளாக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர மாதவிலக்கு பிரச்னைகள் நீங்கும். புதினாக் கீரையை வெயிலில் உலர்த்தி உரலில் போட்டு இடித்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொண்டு நாள்தோறும் மூன்றுவேலை அரைத் தேக்கரண்டித் தூளுடன் அதே அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு காலக்கணக்குபடி சரியான நாட்களில் வெளியேறும். 20கிராம் கருஞ்சீரகத்தை மணல் சட்டியில் போட்டு வறுத்துத் தூள் செய்து 40 கிராம் பனை வெல்லத்துடன் கலந்து, 4 வேளைக்கு காலை, மாலை என பாலுடன் கலந்து குடித்து வர மாதவிலக்கு சிக்கல் மறையும். சிலருக்கு மாதவிலக்கு சரியாக ஆகாமல் விட்டுவிட்டு வந்தால், இவர்கள் நாள் தோறும் காலையில் செம்பருத்திப் பூவில் நான்கு, சிறிதளவு அறுகம்புல் சேர்த்து அரைத்து கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு பகலில் மோர் சாதமும், இரவில் பால் சாதமும் சாப்பிட்டு வர குணமாகும். சிவப்பு நிறங்கொண்ட துளசி இலையைச் சுத்தம் செய்து நன்றாக அரைத்து மாதவிலக்கின் போது நான்கு நாட்கள் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டுவர மாதவிலக்கு க...

மருத்துவ குறிப்புகள் 2912021

 பயன்தரும் சில இயற்கை மருத்துவம் குறிப்புகள் பற்றி தெரிந்து  கொள்வோம். இயற்கை வீட்டு வைத்திய மருத்துவ குறிப்புகள்: ◆மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் மற்றும் அல்சர் விரைவில் சரியாகும். ◆மணத்தக்காளி கீரை வயிறு மற்றும் வாய் அல்சருக்கு மிகவும் நல்லது. எனவே அந்த கீரையை சூப்செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்திற்கு 3 முறை உட்கொண்டு வர விரைவில் அல்சர் சரியாகும். ◆அல்சர் இருப்பவர்கள், தினமும் சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து உட்கொண்டு வர, விரைவில் வயிற்றில்உள்ள புண் குணமாகும். மேலும் கொப்பரை தேங்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர அல்சர் காணாமல் போகும். ◆பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத்தோல்களை விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றும். ◆தினமும் காலையில் வீட்டில் தயாரித்த ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால் அல்சரால் ஏற்படும் கடுமையான வலியைக் சரியாகும். ◆பாகற்காயை விட பாகற்பழம் மிகவும் சிறந்தது. இதனை சமைத்து உண்ண வயிற்றில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன் குடல் பலம் பெறுகிறது.  ◆மலத்தை இளக்கி வெளிப்படுத்துவதுடன...

சொப்ன ஸ்கலிதம்

 தூக்கத்தில் விந்து வெளிப்படுதல் அல்லது இரவு வீழ்ச்சி (Night fall)என்றால் என்ன?              நைட் ஃபால் என்பது இளைஞர்களிடையே, குறிப்பாக இளம் பருவத்தினரிடையே வளர்ந்து வரும் உடல்நலம் சம்பந்தப்பட்ட கவலையாகும்.  "ஈரமான கனவுகள்"(Wet dreams) அல்லது "இரவு மாசுபாடு" (Night emission)என்று பொதுவாக அறியப்படும் இந்த நிலை, இரவில் தூக்கத்தின் போது தன்னிச்சையான விந்து வெளியேற்றத்தை குறிக்கிறது.  இந்த வெளியேற்றம் சில நேரங்களில் அதிகாலையில் ஏற்படலாம்.  அவை அடிப்படையில் தன்னிச்சையான புணர்ச்சியாகும், அதன் மீது நபருக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை.  இரவு வீழ்ச்சி பெரும்பாலும் உடலுறவு கொள்ளாத அல்லது அதிக சுயஇன்பம் செய்யாத இளைஞர்களிடையே ஏற்படுகிறது. அளவுக்கு அதிகமாக சுயஇன்பத்தில் ஈடுபட்டதால் கூட ஈரமான கனவுகளின்(wet dreams) எண்ணிக்கை ஒரு சிலருக்கு மாதம் 10 முறைக்கு மேல் கூட ஏற்படலாம். நபருக்கு நபர் மாறுபடலாம்;  அவை ஒவ்வொரு இரண்டு-மூன்று வாரங்களுக்கு அல்லது ஒவ்வொரு வாரமும் கூட ஏற்படலாம்.  இந்த நிலையில் அவதிப்படும் நபர்கள் அவமான உணர்வ...

கருமஞ்சள் மூலிகை

 கருமஞ்சல் மூலிகை புற்றுநோய்யை குணபடுத்தகூடியது.அனைவரும் மாதம் மூன்று நாட்கள் கருமஞ்சலை சிறிதாக வெட்டி கொதிக்க வைத்து கசாயம் செய்து அதிகாலை குடித்தால் உடலுக்கு நல்லது குழந்தைகைகள் அனைவரும் குடிக்கலாம் நோய்எதிர்பு சக்த்தியை உண்டாக்கும் மற்றும் கேன்சர் செல்களை அழிக்கும்.பெண்களுக்கு கற்ப்பபைக்கு மிகவும் நல்லது வெள்ளைபடுதல் உதிரம்போக்கு கட்டுபடுத்தும் தொடர்புக்கு வாட்சப் 8489680725

வாழை நீர்

 வாழை குடிநீர்: வாழை குடிநீர் என்பது வாழை மரத்தின் தண்டு பகுதியிலிருந்து பெறப்படும் நீராகும் !!!  வாழை குடிநீரின் சிறப்புகள் மற்றும் மருத்துவக் குணங்களைப் பற்றி விளக்கமாக காண்போம்..... நமது  நாட்டில் பாரம்பரியமான இயற்கை ௨ணவுப்பொருளாகவும், முக்கனிகளில் ஒரு கனியாகவும், இறை வழிபாட்டில் மிகவும் முக்கியமாகவும் போற்றப்படுவது இவ்வாழை தான்.  இதன் மருத்துவப் பயன்களோ ஏராளம்...... பொதுவாகவே வாழை மரத்திலிருந்து பெறப்படும் ஒவ்வொரு பொருளும் எதாவது ஒரு வகையில் மனிதனுக்கு பயனளித்து கொண்டுதான் இருக்கிறது.....  இதில் ௨பயோகமற்றது என்பது ஒன்றுமில்லை, வாழை இலை, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம், வாழைத்தண்டு, வாழை நார் போன்ற வரிசையில் வாழை குடிநீரும் முக்கிய பங்கு வகிக்கிறது..... பெரும்பாலும் வாழை மரம் தார் பழுத்த பிறகு மரத்தை வெட்டி பழங்களை அல்லது காய்களை பயன்படுத்துகிறோம்.....  மரத்தை வெட்டிய பிறகு அதன் தண்டுகளில் இருந்து ஊறி வரும் நீரை நாம் பெரிதும் கவனம் செலுத்துவதில்லை.....  ஆனால் அந்த நீரே உயிர் காக்கும் மருந்துப் பொருளாக விளங்குகிறது.  அந்த நீரை எடுத்து சுத்தம் ச...

ஸம்ஸக்தச்சூரணம்

 ஸம்ஸக்தச் சூரணம் ( அய்யாக்கண்ணு பிள்ளையின்  முறை ) அதிமதுரம்  சீரகம்  சோம்பு  கறிவேப்பிலையின் ஈர்க்கு  நெல்லி முள்ளி  உயர்ந்த ஏலம்  சடாமாஞ்சில்  வேங்கை மர சுள்ளியின் தூள்  நாகப்பூ  லவங்கப்பட்டை  இவைகள் வகைக்கு 2 வராகனெடை மல்லி 22 வராகனெடை கற்கண்டு 44 வராகனெடை எடுத்து அதிலுள்ள கல் தூசி முதலியவர்களை நீக்கி சுத்தம் செய்து வெய்யிலில் நன்கு உலர்த்தி கற்கண்டை தவிர மற்றவைகளை இடித்து சூரணம் செய்து வஸ்திரகாயம் செய்து கற்கண்டை தனியே பொடித்து இம் மருந்துடன் சேர்த்து ஒரு புதிய மண் பாண்டத்தில் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும் மருந்தின் அளவு : காலை மாலை இருவேளையும் வராகனெடை இரண்டு விதம் சாப்பிட்டு வரவும் தீரும் வியாதிகள் :                       நீர் கடுப்பு நீர் எரிவு கண் எரிவு பித்தத்தினால் ஏற்படும் கை கால் எரிவு விடியற்காலையில் வயிற்றில் ஏற்படும் எரிவு பித்த ரோகம் ருசியின்மை உஷ்ண நோய் விக்கல் வாந்தி தாகம் சிரங்கு இவைகள் தீரும் பித்தத்தினால் மெலிந்த உடல் புஷ்டி அடையும் மேகத்தின...

வயிற்றுப்போக்கு குணமாக

 வயிற்றுப்போக்கு தீர:- தே.பொருட்கள்.. மாதுளம்பிஞ்சு – 5 கிராம் அதிவிடயம் – 5 கிராம் கோரைக்கிழங்கு – 5 கிராம் விளாம்பழ ஒடு – 5 கிராம் சுண்டைக்காய் – 5 கிராம் கசகசா – 5 கிராம் மாம்பருப்பு – 5 கிராம்      ஆகியவை எடுத்து அரைத்து, கட்டித் தயிரில் நெல்லிக்காய் அளவு கலந்து சாப்பிட எப்பேர்ப்பட்ட வயிற்றுப்போக்கு நொடியில் விலகும்.

நீழ்முள்ளி ஆண்மை

 ஆண்மை விரைப்புதன்மைக்கு மருந்து : நீர்முள்ளி : மணலை கயிறாக திரிப்பேன் என்று சிலர் சொல்லுவதைப் பார்த்திருக்கிறோம் . ஆனால் அது பொய்யல்ல.இந்த நீர்முள்ளி உதவியுடன் மணலை கயிறாக திரிக்க முடியும்.அத்தகைய சக்தி வாய்ந்த இந்த மூலிகை வெக்கை,உஸ்ணத்தை குறைத்து விந்துவை கெட்டிப்படுத்தும் தேவையானவை: கசகசா,பால்,நீர்முள்ளி,பாதாம்பருப்பு. செய்முறை : நீர் முள்ளி விதை 30 கிராம், பாதாம்பருப்பு 10 கிராம், கசகசா 10 கிராம் ஆகியவற்றை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து பாலுடன் சேர்த்து காய்ச்சி பருகி வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். ............................................................................ நீர்முள்ளி வித்து  ஐந்து விரலால் அள்ளும் அளவுக்கு எடுத்து இரவில் ஒரு செவ்வாழை பழத்தில் வைத்து மறுநாள் காலையில் எழுந்ததும் வெறு வயிற்றில் மென்று சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு முப்பது நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.  இந்த நீர்முள்ளி வித்து எல்லா விதமான தாது லேகியத்தில் சேர்க்கப் படுகிறது.. இந்த மருந்து அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஆமுக்கார (அஸ்வகந்தா) பவுடர்  (விரைப்புதன்ம...

சிறுநீரில் புரதம் வெளியேறுதலை தடுக்க

 சிறுநீரில் புரதம் வெளியேறுவதை தடுக்க:- தே.பொருட்கள்.. சிறியாநங்கை – 25 கிராம் வெள்ளருகு – 15 கிராம் ஆடுதின்னாபாளை – 25 கிராம் அவுரி – 25 கிராம் மஞ்சள் – 25 கிராம் நீர்முள்ளி – 50 கிராம் நெருஞ்சில் – 50 கிராம் சாரணைவேர் – 50 கிராம் சிறுபீளை – 50 கிராம் ஆவாரம்பூ – 50 கிராம் கீழாநெல்லி – 50 கிராம் அருகம்புல் – 50 கிராம்        ஆகியவற்றை ஒன்று கலந்து சூரணம் செய்துகொள்ளவும். மேற்படி சூரணத்தில் 2 கிராம் அளவு காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர, சிறுநீரக வீக்கம், நீரடைப்பு, கல்லடைப்பு, ஆகியன தீரும்.      தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் யூரியா, கிரியாட்டின் சீரான நிலையில் வரும். சிறுநீரில் புரதம் வெளியேறுவது தடுக்கப்படும்.

அகண்ட பரிபூரண சச்சிதானந்தம்

 🙏🏻சற்குருவே சரணம் 🙏🏻 "மனித வாழ்வு புதிரானது. மனித வாழ்வில் நெருக்கடிகளும், நோவுகளும், துன்பங்களும், துயரங்களும் சுழன்றடித்திட அதில் திக்கு திசை தெரியாமல் கலங்கி நிற்கையில் கவலைகளே எஞ்சி மிஞ்சி நிற்கின்றன. இந்தக் கவலைகள் முற்றிலும் நீங்கி இளைப்பாற இடம் கிடைத்தால் அதுவே நிம்மதிப் பெருவாழ்வாகின்றது. படிப்பு பாதியும், வேலை மீதியும் ஆகி நம் வாழ்வு பயனற்றுக் கழிந்திட, தளர்ந்தபோதில் ஞானம் நோக்கிப் புறப்பட்டு ஆகப் போவது என்ன? இளங்காலத்திலேயே ஆசையற்று, அன்புற்று, குருபாதம் தேடி அடையப் பெற்றால் அதைவிட ஆனந்தம் வேறென்ன இருக்க முடியும். இந்தப்பேற்றைவிட உறுதியான நற்பேறு வேறு என்னவாக இருக்க முடியும். சற்குருவின் சிந்தனை நன்மை பயக்கும். வாழ்வில் புதுப் பொலிவைத் தரும். அதன் தொடர்பு பெருக பெருக மற்றைய கவலை தரும் தொடர்கள் கழிந்து அற்றுப்போகும். இந்நிலை எல்லோருக்கும் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. தேடினும் கிடைக்கப்பெறாத வரப்பெறாத பெருஞ்செல்வம் அது என்பதில் ஐயமில்லை. முன்னோர்கள் இளையோர்களை இந்த வழி நடத்தவேண்டும். இளமை வாழ்வில் நலம் பெருக நல்ல வழி இதுவே ஆகும். இதுவே ஞானம் பெருக்கும் பெருவழியாகும். ...

அகத்தி கீரை

 வயிற்றுப் புண்ணை குணமாக்கும் அகத்தி கீரை. அகத்தி - அகத்தை சுத்தப்படுத்துவதால் அதை அகத்தி கீரை என அழைக்கின்றனர். வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு. அகத்தி - அகத்தை சுத்தப்படுத்துவதால் அதை அகத்தி கீரை என அழைக்கின்றனர். வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு. அகத்திக்கீரையுடன் சுத்தமான பசு நெய்யும் சின்ன வெங்காயமும் சேர்த்து கூட்டாகவோ, பொரியலாகவோ செய்து தொடர்ந்து சாப்பிட்டுவர மிகச் சிறந்த பலன்களைத் தரும். அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருள்படும். இது நமது அகத்தின் தீயை அகற்றுவதால் அதை அகத்தி என அழைக்கின்றனர். அகத்தியில் அடங்கியுள்ள சத்துக்கள்: நீர்-73 சதவீதம் புரதம்-8.4சதவீதம் கொழுப்பு-1.4 சதவீதம் தாதுப்புக்கள்-2.1சதவீதம் நார்ச்சத்து-2.2சதவீதம் மாவுச்சத்து-11.8சதவீதம் இந்த கீரையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இக்கீரையில் அடங்கியுள்ள புரதச்சத்து மிகச் சிறந்த புரதமாக கருதப்படுகிறது. சுண்ணாம்புச்சத்து, இக்கீரையில் அதிக அளவில் உள்ளது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இக்கீரையில் உயிர்ச்சத்துக்கள் நிறைய உள்ளது. வைட்டமின் ஏ ...

மூச்சிரைப்பு தீர

 மூச்சிரைப்பு தீர:- தே.பொருட்கள்.. வில்வ வேர் – 50 கிராம் தூதுவளை வேர் – 50 கிராம் கண்டங்கத்தரி வேர் – 50 கிராம் முசுமுசுக்கை வேர் – 50 கிராம் மிளகு – 50 கிராம் மஞ்சள் – 50 கிராம்      ஆகியவற்றை எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்து கொள்ளவும். இதனை காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் அளவில் தேனில் குழைத்து உண்டுவர, சளிக்கட்டு, இருமல், ஆஸ்துமாவில் உண்டாகும் மூச்சிரைப்பு, சைனஸ், தும்மல், காசநோய் போன்றவை மாயமாய் விலகும்.

கை,கால் முடக்கம் தீர

 கை கால் முடக்கம் நீங்க:- தே.பொருட்கள்.. வேப்பெண்ணெய் - 3 பங்கு  நல்லெண்ணெய் - 3 பங்கு  மயிலிறகு பொடி - 1 நாழி. இரண்டு எண்ணெயையும், சட்டியில் விட்டு, நன்றாகக் கொதித்த பிறகு, மயிலிறகுப் பொடியைப் போட்டு மூடித் திறக்க உருகிய எண்ணெய் கசப்பு போகும். உள்ளுக்குக் கொடுத்து மேலுக்குப் பூசவும். தீரும் நோய்கள் - சகல சன்னி, குட்டம், கடிவிகாரம், கால் கை முடங்கல்.

சர்க்கரை வியாதி தீர

 சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க இயற்கை சூரணம்   தேவையான பொருட்கள்   1.வேப்பம்பூ – 50 2.மலை நெல்லிக்காய்-15 விதை நீக்கியது 3.துளசி – 30கி அளவு 4.நாவல் கொட்டை – 50 5.முளை கட்டிய காய்ந்த வெந்தயம் – 100கி   செய்முறை: மேலே கூறிய மூல பொருட்களை 1 முதல் 4 வரை நன்கு காய வைத்து அரைத்து கொள்ளவும்,வெந்தயம் தனியாக அரைத்து இரண்டைக்கு ஒன்றாக கலந்து காற்று புகாத ஒரு box ல் போட்டு வைத்து கொள்ளுங்கள் சாப்பிடும் முறை:   தினசரி காலை மாலை உணவுக்கு 1 மணிநேரம் முன்பு சுடுநீரில் 1 ஸ்பூன் அளவுக்கு கலந்து சாப்பிட்டு வர 3 மாதத்தில் நீரழிவு உறுதியாக கட்டுப்பாட்டில் இருக்கும்,சர்க்கரை சேர்க்க கூடாது பத்தியம் முறை: 1.குக்கரில் சமைத்த உணவை தவிர்க்கவும் 2.எண்ணையில் பொரித்த உணவுகள் கூடவே கூடாது 3.இட்லி சாப்பிட கூடாது 4.குளிர்பானங்கள் குளிர்ந்த நீர் கூடாது 5.அசைவம் மட்டன் கூடாது

கருசீர்ஓம அயம்

 எல்ல நோய்களுக்கும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஓர் இயற்கை மருந்து! மருத்துவரிடம் சென்றால் ஒவ்வொரு பிரச்னைக்கும் நிறைய மருந்துகள் கொடுப்பார்கள். ஆனால் நம்முடைய முன்னோரோ இயற்கையான வழியில், எல்லா நோயையும் தீர்க்கும் ஒரு மருந்தை பரிசீலிக்கிறார்கள். அதென்ன அப்படி ஓர் அதிசய மருந்து. வெந்தயம். – 250 gm ஓமம் – 100 gm கருஞ்சீரகம் – 50 gm மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது,இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது,இருதயம் சீராக இயங்குகிறது,சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப...

ரத்தக்கட்டு கொழுப்புகட்டி தீர

 🦜ரத்தக்கட்டு கொழுப்பு கட்டி இருப்பவர்கள் கொழுந்து வேப்பிலையை ஒரு கைப்பிடி எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகு வைத்து அரைத்து மிளகு அளவு சிறு சிறு உருண்டைகளாக செய்து காயவைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பு கட்டி காணாமல் போகும்🦜

எடை குறைய

 இதை ஒவ்வொரு நாளும் குடித்து வந்ததால் ஒரே மாதத்தில் 10 கிலோ வெயிட் குறைக்கலாம் இது எந்த மாயமோ மந்திரமோ கிடையாது. உண்மையிலேயே நம்முடைய வீட்டு கிச்சனில் இருக்கும் சில இயற்கையான மருந்துப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த நீர் உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகளை மிக எளிமையாகக் கரைத்துவிடுகிறது. அப்படிப்பட்ட இந்த இயற்கை பானத்தை தினமும் காலையில் குடித்து வந்தால், எந்த அதிகப்படியான டயட்டும் இல்லாமல் ஒரே மாதத்தில் 10 கிலோ வரையிலும் எடையைக் குறைக்க முடியும். தேவையான பொருட்கள் சீரகப்பொடி – 1 ஸ்பூன் பட்டைத்தூள் – கால் ஸ்பூன் இஞ்சி பவுடர் – அரை ஸ்பூன் எலுமிச்சை தோல் – 2 துண்டு தேன் – சுவைக்கேற்ப செய்முறை அரை லிட்டர் அளவுக்கு தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள். நல்ல கொதிநிலையில் உள்ள தண்ணீரில் சீரகப்பொடி, இஞ்சிப்பொடி, பட்டைத்தூள்,எலுமிச்சை தோல் ஆகியவற்றைப் போட்டு ஊறவிடுங்கள். அந்தப் பொருட்களின் சாறு முழுவதும் தண்ணீரில் இறங்கிய பின்பு, வடிகட்டி, சற்று ஆறியவுடன் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். இந்த பானத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க...

அதிகம் சாப்பிடக்கூடாத உணவுகள்

 அதிகம் சாப்பிடக் கூடாத உணவு வகைகள்.: முளைக்கீரையை அதிகம்  சாப்பிட்டு வந்தால்  வயிறு மந்தம் அதிக  நீர்ப்போக்கு உண்டாகும்.  இதனை  மாற்றக் கீரையைக் கடைந்ததும் சிறிது  சீரகம் தாளித்து  சேர்த்து உண்ணலாம். வாழைப்பழம்  அளவுக்கு அதிகமாகக் சாப்பிடுபவர்களுக்கு  வயிற்றுப்  பொருமலும்  சூட்டுடன் பேதியும்  உண்டாகும். சோளம் அதிகமாக  உபயோகிப்பவர்களுக்கு  வயிறு இரைதல்,  பொருமல், மந்தம்  உண்டாகும்.  இதனை  மாற்ற அரை டம்ளர்  பால்  அல்லது ஒரு தேக்கரண்டி நெய் சாப்பிடலாம்.  முட்டை அதிகம்  சாப்பிட்டால் அடிக்கடி முட்டை ஏப்பம்  வரும்,  செரியாமை  உண்டாகும்.  அதற்கு  முள்ளங்கியை  வேக வைத்துத் தின்னலாம். அல்லது குல்கந்து  ஒரு தேக்கரண்டி  சாப்பிடலாம். அன்னாசிப்பழம்  அதிகம் உண்டால்  தொண்டைக் கபம்  அஜீரணம்  உண்டாகலாம்.  இதற்கு   அன்னாசியுடன் சர்க்கரை கலந்து  உண்ணலாம்.   பலாச்சுளைகளை அதிகம்  உண்டால்  வயிறு ...

பல் பாதுகாப்பு

 தீராத பல் வலியை நொடியில் போக்க வேண்டுமா? இதோ அற்புதமான 10 இயற்கை மருத்துவ முறைகள்! நம்மில் சிலருக்கும் திடீரென அடிக்கடி பல்வலி வருவதுண்டு நம் பற்களின் இரண்டு பாதுகாக்கும் கவசங்கள் இனாமல், டென்டின் உள்ளது. இரண்டையும் தாண்டி சொத்தை ஆழமாக பரவும் போது வலி ஏற்படுகின்றது. இதனை எளிதில் சரி செய்ய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை பின்பற்றினால் போதும். தற்போது அவற்றை பார்ப்போம். • மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்துப் பல் விளக்கி வர சொத்தைப் பல், பல்வலி, ஈறு வலி, வாய் துர்நாற்றம் போகும். • ஈறுகளில் வீக்கம் மற்றும் வலிக்கு பப்பாளிப் பாலை வீக்கத்தில் தடவி, இலேசாகத் தேய்க்க உள்ளிருந்த கெட்டநீர் வெளியேறி வலியும் வீக்கமும் போகும். • பல் வலி உள்ள போது பல் துலக்கியபின், ஒரு நெல்லிக்காயை நன்கு மென்று தின்னவும். • பிரம்ம தண்டு இலையை எரித்து சாம்பலாக்கி பல் தேய்க்க, பல் ஆட்டம், பல் சொத்தை, பல் கறை, பல்லில் இரத்தம் வடிதல் எல்லாமே தீரும். • ஆலமரப் பாலை பற்கள் மீது தடவினால் பல் ஆட்டம் நிற்கும்.ஆயில் புல்லிங் தினம் செய்ய பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா தொற்றிலிருந்து விடுபடலாம். • கோவைப்பழம் அ...

இன்சுலின் இலை

 #சர்க்கரை_நோய்யை_கட்டுக்குள் #கொண்டுவரும்…❗❗❓❓ #இன்சுலின்_செடி…❗❓ 💢 இது ஒரு மேஜிக்கல், இயற்கை மூலிகை என்றே கூறலாம். இந்த செடியை கொண்டு……… சர்க்கரை நோய் மட்டுமல்லாது……  சிறுநீரகக் கற்கள், இரத்த அழுத்தம் மற்ற பிரச்சினைகளையும் சரி செய்ய இயலும். அலோபதி மருத்துவத்தில் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள மருந்து, மாத்திரைகள் தரப்படுகின்றன.  அதேவேளையில் இயற்கை மருத்துவம், சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் உணவு மற்றும் பல்வேறு மருத்துவ முறைகளின்மூலம் நோயைக் கட்டுக்குள் வைத்து வருகின்றனர். முறையாக இந்த மருத்துவத்தைப் பின்பற்றுபவர்களுக்கு நோயை வென்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். இப்படிப்பட்ட சூழலில், சர்க்கரை நோயைக் குணப்படுத்தக்கூடிய மருந்துகளின் வரிசையில் இன்சுலின் செடி. காஸ்டஸ் இக்னியஸ் (Costus igneus) என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இது இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இதன் தாயகம் அமெரிக்காவின் ‘ஃப்ளோரிடா’ மாகாணமாகும். இன்சுலின் செடியின் மகத்துவம் பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர்.  ⭕ #இந்தியாவில்……  👉 கேரள மாநிலத்தின் கொச்...

மாதவிலக்கு தொல்லைகள் தீர

 மாதவிலக்கு பிரச்சனைகள் தீர சில இயற்கை வைத்தியங்கள்..!! 100 கிராம் அச்சு வெல்லத்துடன் 10 கிராம் எள் சேர்த்து இடித்துத் தூளாக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர மாதவிலக்கு பிரச்னைகள் நீங்கும். புதினாக் கீரையை வெயிலில் உலர்த்தி உரலில் போட்டு இடித்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொண்டு நாள்தோறும் மூன்றுவேலை அரைத் தேக்கரண்டித் தூளுடன் அதே அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு காலக்கணக்குபடி சரியான நாட்களில் வெளியேறும். 20கிராம் கருஞ்சீரகத்தை மணல் சட்டியில் போட்டு வறுத்துத் தூள் செய்து 40 கிராம் பனை வெல்லத்துடன் கலந்து, 4 வேளைக்கு காலை, மாலை என பாலுடன் கலந்து குடித்து வர மாதவிலக்கு சிக்கல் மறையும். சிலருக்கு மாதவிலக்கு சரியாக ஆகாமல் விட்டுவிட்டு வந்தால், இவர்கள் நாள் தோறும் காலையில் செம்பருத்திப் பூவில் நான்கு, சிறிதளவு அறுகம்புல் சேர்த்து அரைத்து கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு பகலில் மோர் சாதமும், இரவில் பால் சாதமும் சாப்பிட்டு வர குணமாகும். சிவப்பு நிறங்கொண்ட துளசி இலையைச் சுத்தம் செய்து நன்றாக அரைத்து மாதவிலக்கின் போது நான்கு நாட்கள் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டுவர மாதவிலக்கு க...