கறிவேப்பிலை 21.1.2021

 ♥ பசி  மற்றும்  நோய் தீர்க்கும் மருந்து  -  உணவு பாகம் - 1. ♥ 

♥  கறிவேப்பிலை. ♥ 


♥ 15 கறிவேப்பிலையுடன் ஒன்று அல்லது இரண்டு பேரீச்சம் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால்   வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

♥ சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

♥ ரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒன்று அல்லது இரண்டு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும்.

♥ கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து பாதுகாப்பு தரும்.

♥ நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

♥ கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

♥ சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

♥ கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலை பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டுமென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி