ஏப்பம்

 #ஏப்பம்_தானே_என்று_அலட்சியமாக #இருக்காதீர்கள்.❗❗❗


👉 வயிறு என்பது மிகவும் மென்மையான பகுதி. ஆனால் மிகக்கடுமையான வேலைகளைச் செய்கிறது. அதனால் அதைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. 


வயிற்றில் எந்தப் பிரச்னை வந்தாலும் அது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும்.  


ஏப்பம் தானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள். தொடர்ந்து புளித்த ஏப்பம் வந்தால் அதற்கான 

காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம். 


எண்டோஸ்கோப்பி செய்வதன் மூலம் உணவுக் குழலிலோ அல்லது இரைப்பையிலோ ஏதாவது பிரச்னைகள் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். 


👉 நம் உடலில் வழக்கத்துக்கு மாறாக நடைபெறும் நிகழ்வுகள் அனைத்துமே உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை வெளிப்படுத்தும் காரணிகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதனால் "`ஏப்பம் தானே'" என்று அலட்சியம் செய்யாமல் உடனடியாகப் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை பெற்றுக்கொள்வது  நமது ஆரோக்கியத்துக்கு நல்லது'' 


சாப்பிட்டு முடித்தப் பின் ஏப்பம் வருவதை திருப்தியாக சாப்பிடதன் அடையாளமாகத் தான் பலரும் கருதுகின்றனர். ஆனால், சிலருக்கு அடிக்கடி ஏப்பம் வரும். இது பல வேளைகளில் எதிர்பாராத அசெளகரியத்தை ஏற்படுத்தும்.


உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் ஏப்பம் வரும். இரைப்பையில் உள்ள காற்றுதான் ஏப்பமாக வருகிறது. இதுவே இந்த காற்றானது, குடலை அடைந்தால், வாய்வாக, மலவாயில் வழியாக வெளியேறும். ஆனால் சிலருக்குத் தொடர்ச்சியாக ஏப்பம் வந்துக்கொண்டே இருக்கும்.


புளித்த ஏப்பம் மற்றும் அதையொட்டி வரும் நெஞ்செரிச்சல், செரிமானக்கோளாறு போன்றவற்றை அன்றாடச் சமையலில் சேர்க்கும் இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் சில எளிய மூலிகைகள் மூலம் எளிதாகக் குணப்படுத்தலாம். 


⭕#தொடர்ச்சியாக_வரும்_ஏப்பத்தை_எப்படி #கட்டுப்படுத்துவது…❓


⭐ இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி அது மூழ்குமளவு எலுமிச்சைச்சாறு விட்டு தேவைக்கேற்ப இந்துப்பு சேர்த்து வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். நன்கு உலர்ந்த நிலையில் அந்த இஞ்சித்துண்டை எடுத்து வாயில் போட்டு சுவைத்து வந்தால் புளித்த ஏப்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.


⭐ திரிபலாசூரணம் 1தேகரண்டி,

இரவில்,200மிலி வெந்நீரில் கொள்ள அஜீரணம், புளியேப்பம், மலச்சிக்கல் குணமாகும்.


⭐ அடிக்கடி ஏப்பம் வருவதை குணமாக்க வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து அதனுடன் இஞ்சி சாறுடன் கலந்து உட்கொள்ள வேண்டும்.


⭐ குளிர்ச்சியான தண்ணீரை குடித்து வந்தால், ஏப்பத்தில் இருந்து விடுபடலாம். 


⭐ அடிக்கடி ஏப்பம் வரும் போது, ஒரு கப் புதினா டீ குடித்தால், ஏப்பம் வரும் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.


⭐ ஒரு கப் வெதுவெதுப்பான ப்ளாக் டீயை குடித்தால் ஏப்பத்திலிருந்து நிவாரணம் பெறலாம். 


⭐ சோம்புவை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏப்பம் ஏற்படாமல் இருக்கும். இந்த முறையால் உடனே ஏப்பம் நிற்காவிட்டாலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஏப்ப பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.


⭐ ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால், செரிமான பிரச்சனை நீங்கி, அடிக்கடி ஏப்பம் வருவது உடனே நின்றுவிடும். 


⭐ ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்றாலோ அல்லது இஞ்சி டீ குடித்தாலோ, தொடர் ஏப்பம் வராமல் இருக்கும். 


⭐ சிட்ரஸ் பழங்கள் கூட ஏப்ப பிரச்சனைக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். அதிலும் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், அது வயிற்றில் உள்ள காற்று உடனே வெளியேற்றி, அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கும். 


⭐ தினமும் ஒரு கப் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். இதனால் செரிமான பிரச்சனையுடன், ஏப்ப பிரச்சனையும் குணமாகும்.


⭐ தொடர்ந்து நெஞ்செரிச்சலோடு புளித்த ஏப்பம் வந்தால் இரைப்பைப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. 


⭐ புளித்த ஏப்பம் பிரச்னை உள்ளவர்கள் அதிகக் காரமுள்ள உணவுப் பொருள்களைத் தவிர்க்க வேண்டும். 


⭐ சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ சாப்பிடக் கூடாது. 


⭐ இரவு நேரத்தில் அரை வயிறு மட்டுமே சாப்பிட்டு குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் கழித்து உறங்க வேண்டும். 


⭐ நேரத்துக்குச் சாப்பிடுவதோடு, ஏப்பம் வருவதற்குக் காரணமான உணவுகள், மருந்து மாத்திரைகளைத் தவிர்க்கவும் வேண்டும். 


⭐ அலுவலகத்துக்குக் கிளம்பிக்கொண்டே சாப்பிட உட்காராதீர்கள். 


⭐ சாப்பிடும்போது பேசாதீர்கள்; 


⭐ கோபத்தோடும் கவலையோடும் சாப்பிடாதீர்கள். 


⭐ வாயை மூடி உணவை மென்று விழுங்குங்கள். மென்றதை விழுங்கிய பிறகே, அடுத்த கவளம் உள்ளே போகவேண்டும்.


⭐ காரம், மசாலா, உப்பு, கொழுப்பு, புளிப்பு, எண்ணெய் அதிகமுள்ள உணவு வகைகளை முடிந்த அளவுக்குக் குறைத்துக்கொள்ளுங்கள். 


⭐ ஆவியில் அவித்த உணவு வகைகளை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். 


🔴 சோடா மற்றும் காற்றடைத்த பாட்டில் பானங்களைக் கண்டிப்பாக அருந்தக் கூடாது. முக்கியமாக இந்தப் பானங்களை ஸ்டிரா மூலம் உறிஞ்சி குடிப்பதைத் தவிருங்கள். 


🔴 மது, புகையிலை, வெற்றிலை, பாக்கு, பான்மசாலா இவற்றையெல்லாம் ஓரங்கட்டுங்கள். 


💊 உணவில் அடிக்கடி பிரண்டைத் துவையல், வேப்பம்பூ ரசம், இஞ்சித் துவையல், கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலைத் துவையல் செய்து சாப்பிட்டு வருவது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புளித்த ஏப்பம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் தரும். அதிமதுரத்தைப் பொடியாக்கிச் சுவைப்பது, சாப்பிட்டவுடன் வெற்றிலை போடுவது, புதினா ஜூஸ் போன்றவையும் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க உதவும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி