மூலிகை பல்பொடி

 *பல் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர  எளிய  மூலிகைபல்பொடி*


 *தயாரிக்கும் முறை :-*


 *பல்பொடி தயாரிக்க*


 *தேவையான பொருட்கள் :-*


கிராம்பு பொடி                - 25 கிராம்

கடுக்காய்  பொடி           - 40 கிராம்

அக்ரகாரம் பொடி          -10 கிராம்

நாயுருவி வேர் பொடி  - 25 கிராம்

கல் உப்பு பொடி              - 15 கிராம்


இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் . இந்த மூலிகைகளை பற்றி 1 நிமிடம் பார்த்த பின்பு பல்பொடி தயாரிக்கும் முறை பற்றி பார்ப்போம்..


*1 . கிராம்பு -*


பற்றி அனைவருக்கும் தெரியும் ..பல்வலியை சரிசெய்து பற்களில் உள்ள கிருமிகளை அழிக்கும்.


*2 . கடுக்காய் -*


 அந்த காலத்தில் நம் முன்னோர்கள் கடுக்காய் பயன்படுத்தி தான் பெரிய பெரிய கட்டிடங்களை கட்டினார்கள் ..கடுக்காய் சேர்த்து கட்டப்பட்ட கட்டிடம் அவ்வளவு எளிதில் உடைபடாதாம்..கடுக்காய் வைத்து பல் துலக்க பல் வலிமை பெறும்.


*3 . அக்ரகாரம் -*


 அக்ரகாரம் வைத்து பல் துலக்க ஆடின பல் கூட ஆடாமல் நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள் . மேலும் அக்ரகாரம் நம் உடலில் உள்ள நரம்புகளையும் வலுபடுத்த கூடியது ..அதுமட்டுமல்லாமல் பல் வலியையும் சரிசெய்ய கூடியது..


*4 . நாயுருவி வேர் -*


 நாயுருவி பற்றி நாம் பல பதிவுகளில் பார்த்துள்ளோம்.. நாயுருவி வேர் பற்களால் கடித்து பல் முழுவதும் பட்ட உடனே ஓரு சிறு கல்லை எடுத்து கடிக்க அந்த கல் உடைபடும் .. அந்த அளவுக்கு பற்களை உடனே வலுபடு்ததும் சக்தி இந்த நாயுருவிக்கு உண்டு..


*5 . உப்பு -*


 உப்பு பற்றி தெரியாத நபர்களே கிடையாது . நம் முன்னோர்கள் உப்பை பயன்படுத்தி தான் பற்களை துலக்கினார்கள் ...

செய்முறை :-

ஐந்து பொருட்களில் உப்பை மட்டும் தனியாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள் ... மற்ற மூலிகைகளை மேற்கூறிய அளவுகளில் கலந்து ஓரு கண்ணாடி பாட்டலில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் ..காலை எழுந்தவுடன் இந்த பற்பொடியை சிறிது எடுத்து சிறதளவு உப்பு சேர்த்து பல் துலக்குங்கள் ...


நன்றிகளும்

பிரியங்களும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி