நரம்பு

 *வைத்தியருக்கானது*

நரம்பு,  எலும்பு மச்சை பிரச்சனைகள் தீர:-


தே.பொருட்கள்..

1.வேப்பம் பட்டை

சீந்தில் கொடி

ஆடாதோடைச் சமூலம் 

பேய்ப்புடல்

கண்டங்கத்தரி வகைக்கு 10 பலம் 


2. சிற்றரத்தை 

வாய்விளங்கம் 

தேவதாரு

யானைத்திப்பிலி

எவாச்சாரம் 

சுக்கு 

மரமஞ்சள்

அதிமதுரம் 

செவ்வியம்

கோஷ்டம் 

மிளகு

வெட்பாலை அரிசி 

ஓமம் 

சித்திரமூலம் வேர்ப் பட்டை

கடுகுரோகணி

தாமரைக் கிழங்கு

வசம்பு 

மோடி

மஞ்சிட்டி

அதிவிடையம் 

சிவதை வேர்

குரோசாணி ஓமம்

இவைகள் வகைக்கு 1/2 வராகன் 


மகிசாட்சிகுங்கிலியம் 5 பலம் 

முதல் அங்கத்தில் கூறப்பட்டவைகளை ஒன்றிரண்டாய் இடித்து, ஒரு மண்பாண்டத்தில் போட்டு, எண் மடங்கு நீர் விட்டு, ஒரு பாகமாகக் காய்ச்சி வடித்து அதனில் அரைப்படி ஆவின் நெய்யை விட்டு, இரண்டாவது அங்கத்தில் கூறப்பட்ட சரக்குகளைப் பால் விட்டு நெகிழ அரைத்துக் கலக்கி நெய் பதமுறக் காய்ச்சி வடித்துக் கொள்ளவும்.


அளவு: இதனை வேளைக்குக் கால் பலம் விகிதம் தினம் இரு நேரம் காலை, மாலை, ஒரு மண்டலம் சாப்பிடவும்.


தீரும் நோய்: 

நரம்பு 

எலும்பு மச்சை

தாது சம்பந்தப்பட்ட வாயு முதலியவை குணப்படும். 

குஷ்டம் 

நரம்புகளில் உண்டான ஆறாத விரணம் 

கண்டமாலை

பவுத்திரம் 

குன்மம்

மூலம் 

சயம் 

வீக்கம் 

பீனிசம் 

இருமல் 

மார்புத் துடிப்பு நீங்கும். 


பத்தியம்: 

இச்சாபத்தியம்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி