இரத்தத்தின் செயல்பாடு

 இரத்தத்தின் செயல்பாடு


தலை முதல் கால்வரை நம்மை உயிர்ப்போடு வைத்திருப்பதில் இரத்தத்தின் பங்கு அளப்பரியது. ரத்தமானது நல்ல காற்றையும், சத்துக்களையும் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புக்களுக்கு மட்டுமன்றி நுண்ணிய களங்களுக்கும் கொண்டு சேர்க்கும் ஒரு பெரும் பணியை செய்துக் கொண்டிருக்கிறது.


அத்தோடு இரத்தத்தில் உள்ள வெங்குருதி சிறு துணிக்கைகள் (Red Blood Cells) தான் நோய் கிருமிகளுக்கு எதிரான எதிர்ப்பாற்றலை நடத்துகிறது. அதே போல் இரத்தத்தில் உள்ள பிளேட்டுக்கள் (Platelets) காயங்கள் ஏற்படும் பட்சத்தில் இரத்தம் வெளியேறாமல் தடுத்து உறைய வைக்கிறது.


இதை தவிர நாளாந்த செயல்பாடுகளால் திசுக்கள் வெளியேற்றும் சில வகையான உப்புக்கள் (urea, potassium, creatinine) மற்றும் நாம் உண்ணும் உணவினால் உடலில் சேரும் உப்புக்கள் மற்றும் அமிலங்கள் போன்றவற்றை வெளியேற்றும் பணியையும் செய்கிறது.


இரத்த ஓட்டம் சீராகவும், சுத்தமாகவும் இருந்தால் தான் நம் உடலானது ஆரோக்கியமாக செயல்படும்.


இரத்த ஓட்டம் சீராக இல்லாத போது உடல் கழிவுகள் உடலில் தேங்க ஆரம்பித்து நோய்கள் தோன்றும். முதன்மையாக ஹோர்மோன் சீரற்ற நிலை எற்படும். இதனால் தைராய்டு, சீரற்ற மாதவிடாய், கர்ப்பப்பை கட்டிகள், மலட்டு தன்மை போன்றவை எற்படும். காலில் இரத்தம் தேங்கும் பொழுது நரம்பு முடிச்சி நோய் (Varicose) எற்படும்.


அதே போல் இரத்தம் அசுத்தமடையும் பொழுது புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் உருவாக தொடங்கும். இரத்தம் சுத்தமில்லை என்றால் சரிவர சத்துக்கள் பெறப்படாமல் முடி கொட்டுதல், முடி நரைத்தல், இரத்தசோகை, தோல் வியாதிகள், நரம்பு பிரச்சினைகள், மூளைத்திறன் குறைதல், கண் பார்வை குறைதல் போன்ற பல பிரச்சினைகள் தோன்றும்.


அத்தோடு இரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகரிக்கும் பொழுது இதய நோய்கள், நீரிழிவு, ஈரல் பாதிப்புக்கள், கொழுப்பு கட்டிகள், கிட்னி பாதிப்புக்கள் போன்றவற்றை தோன்றும்.


நாம் வாழ்வியலில் செய்யும் சில மாற்றங்கள் மூலம் இரத்தம் சம்பந்தமான பிரச்சினைகளை முற்றிலும் தவிர்க்கலாம்.


நடைப்பயிற்சியை தினமும் செய்ய வேண்டும். இதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதையோ அல்லது நிற்பதையோ தவிர்க்க வேண்டும். இதனால் இரத்தம் தேக்க நிலையை அடைந்து சுத்திகரிக்கப்படாமல் அசுத்த ரத்தம் உடலில் அதிகரிக்கும்.

ரசாயனம் கலப்படமற்ற ஆரோக்கியமான இயற்கை உணவுகளை உண்ணல் வேண்டும். உணவில் கலக்கப்பட்ட ரசாயனங்கள் இரத்தத்தை விஷமாக்கும்.

பச்சையாக உண்ணக்கூடிய பழங்கள், காய்கறிகளை அவசியம் தினமும் உண்ணல் வேண்டும்.

போதியளவு நீர் அருந்த வேண்டும்.

மது, புகைப்பழக்கங்களை அவசியம் தவிர்க்க வேண்டும்.

கொழுப்பு கூடிய உணவுகளை குறைத்து உண்ணல் வேண்டும்.

மூச்சுப்பயிற்சி, யோகா போன்றவை இரத்த ஓட்டத்தை சீராக்கி அசுத்த ரத்தத்தை சுத்தமாக்கும்.


சுறுசுறுப்பான வாழ்வியலும் ஆரோக்கியமான உணவு பழக்கங்களும் தான் நோய்களின் எதிரியாகும். ஆகவே நம் வாழ்வை ஒரு ஒழுக்க விதியோடு கடை பிடித்தால் என்றும் நலமே!


ஆரோக்கியம் நம் பெரும் சொத்து. பேணுவோம்....

வாழ்க நலமுடன்!


Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி