தைலம்

 இதை படித்தால் இது உறுதி 

இன்றிலிருந்து நீங்களும் வைத்தியர் தான்


எளிமையான முறையில் நோய்களை தீர்க்கும் சூரிய புட தைலமுறைகள்


1 அருகம்புல் தைலம் 


தேவையான பொருள்கள்


அருகம்புல் 60 கிராம் 

மிளகு 45 கிராம் 

சீரகம் 20 கிராம் 

நல்லெண்ணெய் 600 மில்லி


செய்முறை


 அருகம் புல்லை வேருடன் பிடுங்கி புல்லின் கனுவை மட்டும் நீக்கி விட்டு இதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி இதனுடன் மிளகு சீரகத்தையும் சேர்த்து

இந்த கலவையை ஒரு மெல்லியத் துணியில்  வைத்துக் கட்டி கொண்டு


அதன் பிறகு


  ஒரு மண்பானையில் நல்லெண்ணெய் ஊற்றி அதிலே கட்டி வைத்திருக்கின்ற இந்த மூலிகை பொருட்களை போட்டு மண்பானையை 15 நாட்கள் சூரிய ஒளியில் வைத்து வரவேண்டும்  


  இந்த எண்ணெயை வெயிலில் வைக்கின்ற போதெல்லாம் நன்றாக கலக்கி விடவேண்டும் பின்பு வடிகட்டி பயன்படுத்தலாம்


பயன்படுத்தும் முறை


இந்த எண்ணெயை வழக்கமாக தலையில் தடவுகின்ற எண்ணெயை போல பயன்படுத்தி வரலாம் இந்த எண்ணெய்யை பயன்படுத்தும் பொழுது வேறு எந்த தையலத்தையும் தலைக்கு தடவுவதற்கு பயன்படுத்த கூடாது


தீரும் நோய்கள்


கண் காசம் கண் புகைச்சல் கண் எரிச்சல் கண் படலம் மாலைக்கண் கிட்டப்பார்வை தூரப்பார்வை போன்ற கண் நோய்கள் அனைத்தும் நீங்கும்


2 வெட்பாலை தைலம் 


தேவையான பொருட்கள் 


தேங்காய் எண்ணெய் 

வெட்பாலை  இலைகள்


  வெட்பாலை இலையின் நடு நரம்பை நீக்கிவிட்டு சிறிது சிறிதாக அரிந்து இதை ஒரு கண்ணாடி அல்லது சில்வர் பாத்திரத்திலிட்டு இது மூழ்கும் அளவிற்கு சுத்தமான மரச் செக்கு தேங்காய் எண்ணையை ஊற்றி இந்த பாத்திரத்தை சூரிய ஒளியில் பத்து நாட்கள் வைத்து வர வேண்டும்

   இந்த தைலத்தை வடிகட்டி பார்த்தால் இதன் வண்ணம் கரு நீல கலரில் இருக்கும்


  இதனால் தீரும் நோய்கள்


சொறி சிரங்கு கரப்பான் படைகள் மற்றும் தோல் அரிப்பு ஊறல் படை மேலும் சொரியாசஸிஸ் வண்டுகடி போன்ற சரும நோய்களுக்கு இதை மேல்பூச்சாக தடவி வர தோல் நோய்கள் அனைத்தும் நீங்கிவிடும் 


  இந்த தைலத்தை தலைக்கு தடவி வந்தால் தலைவலி நீங்கும் 

பொடுகு தொல்லை குணமாகும்


இந்த தைலத்தில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து காலை வேளையில் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் அஜீரணக் கோளாறு மற்றும் கழிச்சல் நோய்களும் நீங்கிவிடும்


இந்த வெட்பாலை தைலத்தை நூறு மில்லி எடுத்து இதில் பத்து கிராம் பச்சை கற்பூரத்தை பொடித்து போட்டு மூட்டுவலிக்கு தடவி வந்தால் மூட்டு வலி விரைவில் குணமாகும்


3 நேத்திரப்பூண்டு தைலம்


தேவையான பொருட்கள் 

தேங்காய் எண்ணெய் 400 மில்லி நேத்திரப்பூண்டு இலைகள் 100 கிராம்


இவை இரண்டையும் செம்பு பாத்திரத்தில் இட்டு ஒரு மெல்லிய வெள்ளை நிறத் துணியால் மேல் வாய்மூடி சூரிய புடமாக 15 நாட்கள் வெயிலில் வைத்து இதை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்


இந்த தைலத்தில் கண்களுக்கு இரண்டு துளிகள் வீதம் இரவில் விட்டு வந்தால்


கண் சிகப்பு

கண்களில் வழியும்  பீளை

கண் எரிச்சல் 

கண் கூச்சம்

மாலைக் கண் நோய்

கிட்டப்பார்வை தூரப்பார்வை 

மற்றும் பார்வை குறைபாடு 


    மேலும் கண் சார்ந்த அனைத்து வியாதிகளும் இந்த தைலத்தை பயன்படுத்தி வருவதால் நீங்கிவிடும்


இந்த தைலத்தை கண்ணிலே விட்டு கொண்டு கண்கள் இரண்டையும்

சிறிது நேரம் மூடி மூடி திறந்து வரவேண்டும் இதனால் இந்தத் தைலத்தின் மருத்துவப்பயன்கள் 

வெகு எளிதில் நமக்கு கிடைக்கும்


    வைத்திய முறைகளை செய்ய தெரியாதவர்களும் இந்த தைல முறைகளை செய்து பயன்பெறலாம் 


இந்த தைலங்களை இனி யார் செய்தாலும் 

அவர்களும்  ஒரு சித்த வைத்தியரே


வருங்கால வைத்தியர்களுக்கு 

எனது வாழ்த்துக்கள் 


நன்றி 

பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி