இன்சுலின் இலை

 #சர்க்கரை_நோய்யை_கட்டுக்குள் #கொண்டுவரும்…❗❗❓❓


#இன்சுலின்_செடி…❗❓


💢 இது ஒரு மேஜிக்கல், இயற்கை மூலிகை என்றே கூறலாம். இந்த செடியை கொண்டு………


சர்க்கரை நோய் மட்டுமல்லாது…… 

சிறுநீரகக் கற்கள், இரத்த அழுத்தம் மற்ற பிரச்சினைகளையும் சரி செய்ய இயலும்.


அலோபதி மருத்துவத்தில் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள மருந்து, மாத்திரைகள் தரப்படுகின்றன. 


அதேவேளையில் இயற்கை மருத்துவம், சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் உணவு மற்றும் பல்வேறு மருத்துவ முறைகளின்மூலம் நோயைக் கட்டுக்குள் வைத்து வருகின்றனர். முறையாக இந்த மருத்துவத்தைப் பின்பற்றுபவர்களுக்கு நோயை வென்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். இப்படிப்பட்ட சூழலில், சர்க்கரை நோயைக் குணப்படுத்தக்கூடிய மருந்துகளின் வரிசையில் இன்சுலின் செடி.


காஸ்டஸ் இக்னியஸ் (Costus igneus) என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இது இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இதன் தாயகம் அமெரிக்காவின் ‘ஃப்ளோரிடா’ மாகாணமாகும். இன்சுலின் செடியின் மகத்துவம் பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். 


⭕ #இந்தியாவில்…… 


👉 கேரள மாநிலத்தின் கொச்சியிலும்……… 


👉 தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலும்…… 


இதற்கான நர்சரிகள் உள்ளன. வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் மிக எளிதாக வளர்க்கலாம். இலையின் சுவை சிறிது புளிப்பாக இருக்கும்.


சர்க்கரை நோய் என்றாலே 'அது பணக்காரர்களுக்கு வரும் நோய்' என்பார்கள். ஆனால் தற்போது அது எல்லா தரப்பு மக்களையும் பாதித்து வருகிறது. 


உலகம் முழுவதும் இந்த சர்க்கரை நோய் வேகமாக பரவி வருகிறது என்பது தான் உண்மை. அதிலும் இந்தியாவில் ஏராளமான மக்கள் சர்க்கரை நோயால் பாதிப்படைந்துள்ளனர். 


⭕ இன்சுலின் செடி


காஸ்டஸ் பிக்டஸ் என்ற இந்த இன்சுலின் செடியின் தேவையும் இப்பொழுது அதிகரித்து வருகிறது. இந்த இன்சுலின் செடி இருந்தாலே போதும் உங்கள் சர்க்கரை நோய்க்கு பை பை' சொல்லிடலாம் என்று எங்கு பார்த்தாலும் விளம்பரங்களும் பரவி வருகிறது.


இது நீரழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்லாது ஆரோக்கியமாக உடலை பேண விரும்புவர்களுக்கும் பயன்களை அள்ளித் தருகிறது.


💊 இன்சுலின் செடியில் உடம்புக்கு தேவையான இரும்புச் சத்து, புரோட்டீன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களான டோகோபரோல், அஸ்கார்பிக் அமிலம், ஸ்டீராய்டுகள், β- கரோட்டின், டெர்பெனோயிட்கள் மற்றும் ஃபிளவனாய்டுகள் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன என்பது தெரிய வந்துள்ளது.


இந்த செடியின் சாற்றில் பைக்டோ கெமிக்கலான கார்போஹைரேட்ஸ், புரோட்டீன்ஸ், டிரைட்டர் ரெனாய்டுகள் அல்கலைடுகள், சபோனின்கள், டானின்கள் மற்றும் ப்ளோனாய்டுகள் அடங்கியுள்ளன.


🇨🇭 #இலையில்_உள்ள_சத்துக்கள்


▶21.2% - நார்ச்சத்து


▶5.2%-பெட்ரோலியம் ஈதர்


▶1.33% - அசிடோன்


▶1.06%-சைக்ளோஹெக்சன்


▶2.95%-எத்தனால்


▶டெர்பெனாய்டு, லுபேல் கலவை


▶அதன் தண்டுப் பகுதியில் ஸ்டீராய்டு கலவை (ஸ்டிக்மாஸ்டரோல்) ரைசோம் பொருட்களான (க்யுர்செடின் மற்றும் டயோசினீன்) தாதுக்கள்


▶இதைத் தவிர தாதுக்களான பொட்டாசியம், கால்சியம், குரோமியம், மாங்கனீஸ், காப்பர் மற்றும் ஜிங்க்


🇨🇭 #இன்சுலின்_செடியின்_பயன்கள்🇨🇭


💊டயாபெட்டீஸ்க்கு தீர்வளித்தல்


இந்த செடி இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவை குறைக்கிறது. இதன் இலையில் உள்ள ப்ரக்டோஸ் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. எனவே இந்த இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாவது மட்டுமல்லாது அதனால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு, உறுப்புகள் செயலிழப்பு போன்றவையும் வராமல் தடுக்கிறது.


💊சீரண சக்தி


பலவிதமான சத்துக்கள் அடங்கிய இதன் இலை, நமது குடலில் வாழும் ஈகோலி பாக்டீரியா மாதிரியே செயல்படுகிறது. இதனால் நமது சீரண சக்திக்கு துணை புரிகிறது. இதன் புரோபயோடிக் தன்மை உணவை எளிதாக சீரணிக்கச் செய்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிறது. இலையில் உள்ள ப்ரக்டோஸ் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.


💊ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்


இந்த செடியின் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தன்மை உடல் செல்கள் அழிவதை தடுத்து உடல் செல்களை பாதுகாக்கிறது. நம்முடைய உடலில் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி, உடலுக்குத் தேவையான ஆண்டி ஆக்சிடண்ட்டுகளையும் இந்த செடியானது நமக்குக் கொடுக்கிறது.


💊ஆரோக்கியமான சிறுநீரகம்


இதிலுள்ள சோடியம் மற்றும் நீர்ச்சத்து நமது சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இதன் இலைகள் மற்றும் ரைசோம் இந்த தன்மையை கொண்டுள்ளது.


💊ஆன்டி பாக்டீரியல் தன்மை


இந்த தாவரத்தின் மெத்தனோலிக் சாறு பாசிலஸ் மெக்டேரியம், பேசில்லஸ் செருஸ், ஸ்டாஃபிலோகோக்கஸ் ஆரியஸ் மற்றும் எஸ்கெரிச்சியா கோலி, சூடோமோனாஸ் ஏருகினோசா, க்ளெப்சியேலா நிமுனோனியா மற்றும் சால்மோனெல்லா டைஃபைமூரியம் போன்ற கெட்ட பாக்டீரியாக்களை அழித்து கழிவுகளை வெளியேற்றுகிறது.


💊கல்லீரல் பிரச்சினைகள்


கல்லீரலில் படிந்து இருக்கும் கொழுப்புகள் மற்றும் நச்சுக்களை உடைத்து வெளியேற்றுகிறது. எனவே இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் தொடர்பான பிரச்சினைகள் வராது.


💊நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்


இந்த செடியின் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தன்மை நமது உடலின் நோயெதிர்ப்பு செல்களை தூண்டி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் நம்முடைய உடலின் நோயெதிர்ப்பு மண்டலமும் வலுப் பெறுகிறது.


💊புற்றுநோய் வராமல் தடுக்க


இந்த செடியில் புற்று நோயை எதிர்க்கும் தன்மை மற்றும் புற்று நோய் செல்களின் பெருக்கத்தை தடுக்கும் பண்பு உள்ளது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்று நோய் செல்களை எதிர்த்து போரிடுகிறது. குறிப்பாக HT 29 மற்றும் A549 புற்று நோய் செல்களுக்கு பயனளிக்கிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கலாம்.


💊கொலஸ்ட்ராலை குறைக்க


இந்த செடியின் நீரில் கரையும் தன்மை இரத்தத்தில் குளுக்கோஸ் உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. இதனால் போதுமான இன்சுலின் சுரப்பு ஏற்படுகிறது. கொழுப்பும் உறிஞ்சப்படுவது மெதுவாகி,இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து விடுகிறது. இதனால் இதய நோய்கள், பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் வாழ முடியும்.


💊தொண்டைப் புண்


இந்த செடியின் அழற்சி எதிர்ப்பு தன்மை சுவாச பாதையில் ஏற்படும் அழற்சியை போக்கி தொண்டை புண், இருமல் போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கிறது.


💊இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்


இந்த செடியை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது உயர் இரத்த அழுத்தம் குறைகிறது.


💊ஆஸ்துமா


இந்த செடியின் அழற்சி எதிர்ப்பு தன்மை சுவாச பாதையில் ஏற்படும் அழற்சியை போக்கி ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது. நுரையீரல் தசைகளை இறுக்கமாக்காமல் ஆஸ்துமாவிலிருந்து நிவாரணம் தருகிறது.


💊சாப்பிடும் அளவு


இந்த செடியை சாப்பிடும் அளவு ஒவ்வொருத்தர் உடல் நிலையை பொருத்து மாறுபடுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு வேளை இதை சாப்பிடலாம். அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. காலையில் ஒரு வேளையும் இரவில் படுப்பதற்கு முன்பும் எடுத்து கொள்ளுங்கள். இலைச் சாறு அல்லது இலைகளைக் கொண்டு தேநீர் தயாரித்து கூட பருகி வரலாம்.


🇨🇭#வீட்டு_வைத்தியத்தில்…❗❓❓


💊 இன்சுலின் இலைச் சாறு 

தயாரிப்பது எப்படி❓


▶ 10-15 இன்சுலின் இலைகளை எடுத்து சுத்தமாக கழுவி கொள்ளுங்கள்.


அதை சிறியதாக நறுக்கி சூரிய ஒளியில் காய வையுங்கள்.


இலையை பிழிந்து பார்த்து நன்றாக காய்ந்துள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும்.


நன்றாக காய்ந்த இலைகளை ஒரு காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைக்கவும்


1 கப் தண்ணீரை எடுத்து நன்றாக கொதிக்க வையுங்கள்.


கொதித்த தண்ணீரை ஒரு டம்ளரில் ஊற்றி அதில் இலைகளை போடவும்


தண்ணீர் ப்ரவுன் நிறமாக மாறும் வரை காத்திருக்கவும்.


இந்த தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்


🇨🇭 இன்சுலின் இலை டீ 🇨🇭


💊 தேவையான பொருட்கள்❓


5-7 இன்சுலின் இலைகள்


4 கப் தண்ணீர்


தேன்


▶பயன்படுத்தும் முறை❓


இன்சுலின் இலைகளை கழுவி காய வைத்து எடுத்து கொள்ளுங்கள்.


ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வையுங்கள்.


கொதிக்கின்ற தண்ணீரில் இலைகளை போடவும்.


தண்ணீர் பாதியளவு வற்றும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு வடிகட்டி ஒரு கப்பில் எடுத்து அருந்தி கொள்ளுங்கள். 


🇨🇭 இன்சுலின் சாலட் 🇨🇭


👉 தேவையானவை❓


இன்சுலின் செடி இலை - 1, 


ஊறவைத்த வெந்தயம் - 50 மி.கி


(இரவே வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.)


▶செய்முறை❓


ஒரு தட்டில் ஊறவைத்த வெந்தயத்தைப் போட்டு, அதில் நறுக்கிய இன்சுலின் செடி இலையை சேர்த்துக் கிளறி, ஒருநாளைக்கு மூன்று டீஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டுவரலாம். சாப்பிட்டு முடித்த பின்னர், ஊறவைத்த வெந்தய நீரைக் குடிக்க வேண்டும். காபி, டீ குடிக்கக் கூடாது.


⭐ பலன்கள்❓


இதில் உள்ள கோரிக் ஆசிட், கணையத்தின் பீட்டா செல்களைத் தூண்டும். இன்சுலின் சுரக்க உதவும்.


வெந்தயம், நார்ச்சத்து நிறைந்தது. கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடியது. இதயத்துக்கு நல்லது. மலச்சிக்கல் தீரும்.சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.


🔴 #பக்க_விளைவுகள்


நல்லது இருக்கையில் ஒரு சில பக்க விளைவுகளும் இருக்கும்.


ஆனால் இந்த இன்சுலின் செடியை பொருத்த வரை குறைந்த அளவே பக்க விளைவுகள் உள்ளன.


கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் இந்த செடியை சாப்பிடக் கூடாது. ஏனெனில் இது ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.


இலையை அப்படியே பச்சையாக சாப்பிடுவதை தவிருங்கள். இதன் கடினமான தன்மை எரிச்சலை உண்டு பண்ணக் கூடும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி