எலுமிச்சை புல்

 எலுமிச்சைப்

புல்


 மூலிகையின் பெயர் :: எலுமிச்சைப் புல்..

2. தாவரப் பெயர் :: 

CYMBOPOGAN FLEXOSUS..

3. தாவரக்குடும்பம் ::

POACEAE / GRAMINAE..

4. வேறு பெயர்கள் :: 

வாசனைப்புல், மாந்தப்புல், காமாட்ச்சிப்புல், கொச்சி வாசனை எண்ணெய் என்பன.

5. இரகங்கள் ::

கிழக்கிந்திய வகை, மேற்கிந்திய வகை, ஜம்மு வகை, பிரகதி, காவேரி, கிருஷ்ணா மற்றும் ஓடக்கள்ளி19 என்பன.

6. பயன் தரும் பாகங்கள் :: 

புல் மற்றும் தோகைகள்..

7. வளரியல்பு ::

எலுமிச்சப்புல் இந்தியா, பர்மா, ஸ்ரீலங்கா மற்றும் தாய்லேண்டைத் தாயகமாகக் கொண்டது. இது எல்லா வகை மண் வகைகளிலும், சத்துக் குறைவான மண்களிலும், களர் மற்றும் உவர் மண்களிலும் பயிரடலாம்.. இதிலிருந்து வரும் ‘சிட்ரால்’ வாசனை எண்ணெய எலுமிச்சம் பழத்தின் வாசனை கொண்டதால் இப்பயர் பெற்றது.. 


8. மருத்துவப்பயன்கள் :: இந்தப்புல்லிலிருந்தும், தண்டுகளிலிருந்தும் எடுக்கப்படும் எண்ணெயில் டெர்பினைன் 0.50 சதம், பீட்டா டெர்பினியால் 0.40 சதம், அல்பா டெர்பினியால் 2.25 சதம், ட்ரைபினையல் அசிடேட் 0.90 சதம், போர்னியால் 1.90 சதம், ஜெரானியால் மற்றும் நெரால் 1.5 சதம், சிட்ரால் பி 27.7 சதம், சிடரால்-ஏ 46.6 சதம், பார்னிசோல் 12.8 சதம், பார்னிசால் 3.00 சதம் என்று பல வேதிப் பொருட்கள் உள்ளன. எண்ணயெ மூலம் சோப்புகள், வாசனைத் திரவியங்கள் தயாரிப்பு, சிட்ரால் வைட்டமின் ‘ஏ’ போன்ற வேதிப் ரொருட்கள் எடுக்கப் பயன்படுகின்றன. கிருமி நாசினியாக பயன்படுகிறது. பூச்சிக்கொல்லியாகவும் பயன் படுகிறது. எண்ணெய் எடுத்த பின் எஞ்சிய புல் மாட்டுத் தீவனமாகவும், காகிதங்கள், அட்டைப் பட்டிகள் தயாரிக்கவும், எரிபொருளாகவும் பயன் படுகிறது. இந்தப் புல்லிருந்து சூப் செய்கிறார்கள், இறைச்சி, மீன் வகைகளில் உபயோகிக்கிரார்கள். இதில் போடப்படும் டீயும் நன்றாக இருக்கும்..

குறிப்பு- எலுமிச்சைப் புல்.. 

புற்றுநோய் செல்களை அழிக்கிறது..


எலுமிச்சை புல் ,இஞ்சி புல்


வேறு பெயர்கள் :வாசனை புல் ,எலுமிச்சை புல் ,இஞ்சி புல் 


ஆயுர்வேதத்தில் இதனை ரோஹிஷா என்போம்..


ஆச்சார்யர் சரகர் இதனை ஸ்தன்ய ஜனன வர்க்கத்தில் அதாவது தாய்பால் சுரக்க வைக்கும் வர்க்கத்தில் சேர்த்துள்ளார்.. 


பயன்கள்..


துஷ்ட பீனசம் (கெட்ட பீனசம் )-வசம்பு ,இஞ்சிபுல்,சீரகம் ,சனகம் போன்ற பொருள்களை நுகர சொல்கிறது.. 


தேள் கடியில் -இந்த புல்லின் வேருடன் ச்லேஷ்மாந்தகத்தின் சாற்றையும் அரைத்து பூச சொல்கிறது 


சாதரணமாக கிடைக்கும் ஆயுர்வேத மருந்துகளான ..தான்வன்தரம்.. கிருதம் ,மஹா பஞ்ச கவ்ய கிருதம் போன்ற பொருட்களில் சேர்க்கிறது 


லெமன் கிராஸ் ஆயில் இதனிலிருந்து தயாரிக்கபடுகிறது -இந்த லெமன் கிராஸ் ஆயில் இந்த புல்லை பதங்கமாதல் முறையில் தயாரிக்கபடுகிறது ..

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி