தேற்றான் கசாயம்

 உடல் குண்டாக இருப்பவர்களுக்கு வரும் சர்க்கரை நோயைக் குறைத்து கட்டுக்குள் வைக்க

தேற்றாங்கொட்டை கசாயம்

தேற்றாங்கொட்டை தூள் ...... மூன்று கிராம்

கடுக்காய் தூள்  .................. மூன்று கிராம்

ஆவாரை பூ அல்லது இலை அல்லது வேர்  அல்லது சமூலம் தூள் .............. மூன்று கிராம்

விளாம் பிசின் ............... மூன்று கிராம்

ஆகிய நான்கு பொருட்களையும் கொடுக்கப்பட்டுள்ள அளவின்படி எடுத்து நானூறு மில்லி தண்ணீரில் போட்டு சிறு தீயில் நன்கு காய்ச்சி நூறு மில்லி கசாயமாக சுருக்கி இறக்கி வடிகட்டி ஒரு வேளை மருந்தாகக் குடிக்க வேண்டும்

கசப்பு கலந்த துவர்ப்பு சுவையுடன் கூடிய கசாயம் இது

நாள்தோறும் காலை இரவு என இரு வேளைகள் உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன் சாப்பிட்டு வர வேண்டும்

நோயாளியின் ஆரோக்கியத்தின் அளவீடு என்பது செரிமானத்தை சார்ந்தே இருக்கிறது சாப்பிடும் உணவு நன்கு செரிமானமானால் மட்டுமே  உணவில் இருந்து கிடைக்கும் சத்துகள் உடலால் கிரகிக்கப் படும்

உடல் பலம் என்பது சாப்பிடும் உணவுகளில் இருந்து கிடைக்கும் சத்துக்கள் சார்ந்து மட்டுமே இருக்கிறது

சத்துக்கள் கழிவுகளாக உடலை விட்டு வெளியேராமல் பார்த்துக் கொண்டால் மட்டுமே நோய்களின் காரணமாக  ஏற்படும் பக்க விளைவுகளையும்  தடுக்க முடியும்

இந்த கசாயத்தை தொடர்ந்து குடித்து வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வருவது மட்டுமல்ல உடல் எடையும் குறைந்து கட்டுக்குள் வரும்

பாத எரிச்சல் போன்ற பக்க விளைவுகளும் கட்டுக்குள் வரும்

இயற்கை மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது கணையத்தின் செயல்பாடுகள் மேம்படுகிறது

இதை ஒரு மருந்தாக அல்ல மூலிகை தேநீராகப் பயன்படுத்தி நீரிழிவு நோயைக் கட்டுப் படுத்தி நீரிழிவு நோயினால் ஏற்படும் பக்க விளைவுகளையும் கட்டுப் படுத்தி உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நலமுடன் வாழ முடியும்


Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி