ஸம்ஸக்தச்சூரணம்

 ஸம்ஸக்தச் சூரணம்


( அய்யாக்கண்ணு பிள்ளையின்  முறை )


அதிமதுரம்


 சீரகம்


 சோம்பு 


கறிவேப்பிலையின் ஈர்க்கு


 நெல்லி முள்ளி


 உயர்ந்த ஏலம்


 சடாமாஞ்சில்


 வேங்கை மர சுள்ளியின் தூள்


 நாகப்பூ


 லவங்கப்பட்டை


 இவைகள் வகைக்கு 2 வராகனெடை மல்லி 22 வராகனெடை கற்கண்டு 44 வராகனெடை எடுத்து அதிலுள்ள கல் தூசி முதலியவர்களை நீக்கி சுத்தம் செய்து வெய்யிலில் நன்கு உலர்த்தி கற்கண்டை தவிர மற்றவைகளை இடித்து சூரணம் செய்து வஸ்திரகாயம் செய்து கற்கண்டை தனியே பொடித்து இம் மருந்துடன் சேர்த்து ஒரு புதிய மண் பாண்டத்தில் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்


மருந்தின் அளவு : காலை மாலை இருவேளையும் வராகனெடை இரண்டு விதம் சாப்பிட்டு வரவும்


தீரும் வியாதிகள் : 


                     நீர் கடுப்பு நீர் எரிவு கண் எரிவு பித்தத்தினால் ஏற்படும் கை கால் எரிவு விடியற்காலையில் வயிற்றில் ஏற்படும் எரிவு பித்த ரோகம் ருசியின்மை உஷ்ண நோய் விக்கல் வாந்தி தாகம் சிரங்கு இவைகள் தீரும் பித்தத்தினால் மெலிந்த உடல் புஷ்டி அடையும் மேகத்தின் வேகம் குறையும் இவ்வகையான ரோகங்கள் யாவும் இம்மருந்தினை குணமாகும் இந்த சூரணம் ஒரு மண்டலம் சாப்பிடவும் குணா குணங்களை அனுசரித்து மேலும் மருந்து உட்கொள்ளவும்


பத்தியம் : இச்சா பத்தியம் ஒரு மண்டலம் முழுவதும் சூரணம் சாப்பிட வேண்டுமானால் மேல் கொடுக்கப்பட்ட சாமான்களின் அளவை மூன்று மடங்கு எடுத்து செய்யவும்


அலைபேசி எண் 9943873148


குருவே துணை


அகத்தியர் குடில்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி