தலைசுற்றல்

 #தலைச்சுற்று_கிறுகிறுப்பு_ஒன்று #தானா……❓

#அலட்சியம்_கூடாது_மக்களே…❗❗❗


👉 உட்கார்ந்து எழுந்திருக் கும் போது, அரை நொடி நேரத்துக்கு சர்ரென்று தலை சுற்றியடிக்கும் அதன் பின் சரியாகி விடும். எந்த விளைவோ, தொடர் பாதிப்போ இருக்காது.


👉 தலைச்சுற்றல் அடிக்கடி தொடரும்; அப்படி வந்தால், முதுகுத்தண்டுவடம், அதைச்சுற்றியுள்ள நரம்புகள், எலும்புப்பகுதி பாதிக்கப்படும். ஒரு வித எரிச்சல் இருக்கும். இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? முதலில் சொல்லப் பட்டுள்ளது, சாதாரண தலை சுற்றல் தான்.


⭕ இரண்டாவது தான் #வெர்டிகோ எனப்படும் தொடர் கிறுகிறுப்பு. இதுவும் தலைசுற்றல் மாதிரியே இருக்கிறது. ஆனால் மூளை நரம்பு மண்டலத்தில் இருந்து ஆரம்பித்து பாதிக்கும். அதிக பட்ச ஆபத்து இதய கோளாறு தான். அதனால், தலைசுற்றலாக இருந்தாலும், கிறுகிறுப்பாக இருந்தாலும் உஷாராக இருந்து, முன்னெச்சரிக்கையாக டாக்டரிடம் போய் பரிசோதித்துக் கொள்வதே நல்லது.


* #சாதாரண_தலைச்சுற்றல் போலத்தான் #_வெர்டிகோ’வும் இருக்கும். இந்த பாதிப்பு இருப்போரை இந்த கோளாறு தூங்க விடாது. சரியாக படுக்கவும் முடியாமல் தவிக்க வைத்துவிடும்.  தலைசுற்றல் ஏற்பட்டவுடன், குமட்டல் இருக்கும். சாதாரண  தலைச் சுற்றலில் இந்த நிலை இருக்காது.


* குறிப்பாக, இந்த பாதிப்பு உள்ளவர்கள், கோடை காலத்தில் உஷாராக இருக்க வேண்டும். ஸ்டெமடில் போன்ற மாத்திரைகளை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.


* அடிக்கடி தலை சுற்றல் வருவதை வைத்தே அது சாதாரண கிறுகிறுப்பு அல்ல என்று முடிவுக்கு வந்துவிடலாம்.


* “வெர்டிகோ’ பிரச்னை உள்ளவர்கள், காபி , சாக்லெட் உட்பட, அதிக இனிப்பு, உப்பு சுவை உள்ள பொருட்களை சாப்பிடக்கூடாது. மது குடிக்கவே கூடாது.


* கோடைகாலத்தில் தான் அதிக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 


* நரம்பு மண்டல பிரச்னை என்பதால், இதில் அலட்சியம் கூடாது. அப்படி இருந்தால், மூளை நரம்பு மண்டல பாதிப்பு வரை கொண்டுவிட்டுவிடும்.


👉 அடிக்கடி தலைவலி, 


👉கண்கள் தெளிவின்மை, 


👉நாக்குழற பேசுவது, 


👉காது மந்தம் 


👉 கை, கால்களில் பலவீனம், 


👉நடந்து கொண்டிருக்கும் போது அடிக்கடி மயக்கம், 


👉குமட்டல் 


போன்றவை “வெர்டிகோ’வின்

அறிகுறிகள் தான்.


* இந்த அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் இருந்தால், #இதயத்துடிப்பில் மாற்றம் ஏற்படும். வலியும் ஏற்படும்.


    நாம் அனைவருமே எப்போதாவது மயக்கம் அடைந்திருக்கலாம். அதனால் மயக்கம் என்பது என்ன என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.            சிலருக்கு சில நிமிடங்கள் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம். சிலருக்கு சில மணி நேரங்கள் மயக்கம் நீடிக்கலாம்.


சிலருக்கு எந்த விதமான நோய்கள் இல்லாமலும் மயக்கம் வரலாம். 


சரியான நேரத்தில் உணவு உணவில்லையெனில் மயக்கம் வரலாம். 


போதிய உறக்கம் இல்லாமலும் மயக்கம் வரலாம். அல்லது அளவுக்கு அதிகமாக உண்டபின்னும் மயக்கம் உண்டாகலாம். 


அதிக வேலை, களைப்பு , மன உளைச்சல் காரணமாகவும் மயக்கம் ஏற்படலாம். இவை அனைத்தும் நோய்கள் இல்லாவிடினும் உடல் தொடர்புடைய மயக்கங்கள்.


மயக்கம் , தலை சுற்றல் , கிறுகிறுப்பு என்பதும் என்பதெல்லாம் ஒன்றுதான்.

மயக்கத்தை dizziness , giddiness என்பர் . மயக்கம் வந்து நினைவு இல்லையேல் அதை fainting என்பர்.


வயது முதிர்ந்தவர்களுக்கு அடிக்கடி மயக்கம் வருவது இயல்பு. 


பெண்களுக்கும் அதிகமாகவே மயக்கம் வருவதுண்டு.


நமது உடல் சமநிலையில் இல்லாவிடில் மயக்கம் உண்டாகும். இந்த சமநிலை உணர்வை மூளைக்கு உணர்த்துவது காதுகளின் உள்ளேயுள்ள வெஸ்ட்டிபுல்லார் லேபிரின்த் 

( vestibular labyrinth ) என்ற உறுப்பு. 


நமது சுற்றுச் சூழலைப் பற்றிய தகவல்கள் இதன்மூலமே மூளைக்கு கொண்டு செல்லப் படுகிறது.


உடலின் தொடு உணர்ச்சியையும், மூட்டுகளின் செயல்பாட்டையும் பற்றிய செய்திகளைக் கொண்டு செல்பவை சோமோட்டோசென்சரி ஆஃப்பரன்ட்ஸ் ( somatosensory afferents ) என்ற நரம்புகள். இவை முதுகுத் தண்டு நரம்புகள் ( spinal cord ) வழியாக மூளைக்கு செல்கின்றன.

இத்தகைய வெளி உணர்வுகள் மூளையில் உள்ள வெஸ்ட்டிபுளார் நியூக்ளியஸ் ( vestibular neucleus ) என்ற

பகுதியை வந்தடைகின்றன . இது சிறு மூளை, எக்ஸ்‌ட்ரா பிரமிடல் சிஸ்டம் ( extra pyramidal system ) என்ற மூளைப் பகுதியுடன் தொடர்புடையவை.

இங்கிருந்து உள் உணர்வுகள் கண்களைச் சுற்றியுள்ள தசைகளுக்கும் , கழுத்து, கால்கள் பகுதிகளுக்கும் நரம்புகள் வழியாகச் செய்திகள் அனுப்புகின்றன.

இவ்வாறு வெஸ்ட்டிபுளார் சிஸ்டம் என்ற அமைப்பு இரண்டு வகையான செயல்களில் ஈடுபடுகிறது. அவையானவை:


* தலையை அசைக்கும்போதும் , திருப்பும்போதும் , பார்வையை அதற்கு ஏற்ப சம நிலைக்கு கொண்டு வருகிறது. உதாரணமாக நடந்துகொண்டே படிக்க முடிகிறது.


* உடல் அசைவின்போது கீழே விழுந்து விடாமல் சம நிலையில் இருக்க உதவுகிறது.

இத்தகைய மிகச் சிக்கலான அமைப்பில் எங்கேயாவது குறைபாடு உண்டானால் சம நிலை பாதிப்புக்கு உள்ளாகி தலை சுற்றலும் மயக்கமும் ஏற்படுகிறது.

சில உதாரணங்கள் வருமாறு :


* வயதானவர்களுக்கு பார்வை குறைவு காரணமாக உண்டாகும் மயக்கம் .


* நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்புகள் பாதிப்பு காரணமாக உண்டாகும் மயக்கம் .


* தலை, காது பகுதியில் அடி பட்டால் உண்டாகும் மயக்கம்.

 


⭕ மயக்கம் வருவதற்கு 3 முக்கிய காரணங்கள் கூறலாம்❗


* காது தொடர்புடையது ( otological )


* மூளை தொடபுடையது ( neurological )


⭕ பொது மருத்துவ காரணங்கள் 

( general medical )


1. காது தொடர்புடையவை – நடுக் காது பிரச்னை


* காயம் ( trauma )


* நீர்க் கசிவு ( discharge )


* கட்டிகள் ( tumours )


⭕ சுற்றுவட்ட வெஸ்ட்டிபுலார் குறைபாடு 


உள் காது வீக்கம்


காயம்


இரத்தக் குறைவு


மூளையைச் சுற்றியுள்ள திரை வீக்கம்


Benign paroxysmal positional vertigo – இந்த வகையான தலை சுற்றுதல் வெர்ட்டைகோ என்பது பலருக்கு உண்டாவதாகும். 


❓இது ஏற்பட சில காரணங்கள்❓


👉தலையில் அடிபடுதல்


👉இரத்த ஓட்டத்தில் தடை


👉வைரஸ் கிருமிகள் தொற்று


👉ஒற்றைத் தலைவலி


👉Meniere’s syndrome எனும் தலை சுற்றும் குறைபாடு


❓மூளை தொடர்புடைய 

காரணங்கள் ❓


👉நரம்பு கட்டிகள்


👉மூளைக் கட்டி


👉வலிப்பு நோய்


👉ஒற்றைத் தலைவலி


👉மது , மருந்துகள்

multiple sclerosis எனும் நோய்

 

❓பொது மருத்துவக் காரணங்கள்❓


👉குறைவான இரத்த அழுத்தம்


👉நீரிழிவு நோய்


👉காதுகளில் இரைச்சல்


👉இரத்த சோகை


👉இருதய வீக்கம்


👉இருதய வால்வு நோய்கள்


👉இருதயத்திலிருந்து குறைவான இரத்த வெளியேற்றம்


👉தொடர்ந்த களைப்பு


இதர நோய்கள்

ஆகவே மயக்கம் உண்டாவது இவ்வளவு சிக்கல் நிறைந்ததா என்பதைக் காணும் நமக்கும் மயக்கம் வருகிறதல்லவா❓


#வீட்டு_வைத்தியம் ❗❗❗


💊நல்ல தூக்கம்


இரவில் நன்கு தூக்கம் வேண்டும். நல்ல உறக்கம் என்பது மறுநாள் காலையில் எழும் போது நன்கு ஃபிரஸ்ஷாக உணர்வது. இப்படி ஒரு தூக்கம் அமையும் போது அன்றைய தினம் நல்ல நாளாக அமையும். அப்படியான நமது தினசரி ஆரோக்கியமான நடவடிக்கை இந்த வேர்டிகோவை பிரச்சனையை சற்று தூரம் தள்ளியே வைக்கும்.


💊நீர் அதிகமாககுடிப்பது


உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் மிக அவசியமானது. நீர் சத்து குறைந்தாலும் உடலின் சமநிலை தவறி இந்த வெர்டிகோ பிரச்சனையை அதிகமாக உணர வேண்டியதாக இருக்கும். எனவே, தினசரி குறைந்தப்பட்சம் இரண்டு லிட்டர் நீராவது குடிப்பது நல்லது.


💊துளசி சாப்பிடுவது


மூலிகை இலைகளை சாப்பிடுவது. அதுவும் குறிப்பாக தினசரி காலை வெறும் வயிற்றில் இரண்டு துளசி இலைகளை மென்று தின்றால் இந்த வெர்டிகோ எனும் கிறுகிறுப்பு, தலைசுற்றலை சுலபமாக தவிர்க்கலாம். கொதிக்கும் வெந்நீரில் சில துளசி இலைகளை போட்டு அதை முகர்வதும் நல்ல பலன் தரும்


💊இஞ்சி டீ


இஞ்சி அல்லது சுக்கு டீ குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். இஞ்சியில் வெர்டிகோவை போக்கக் கூடிய முக்கியமான தன்மைகள் உள்ளன. வெர்டிகோ ஏற்படுவதற்கான அறிகுறிகளை இஞ்சி போக்கிவிடும். ஒரு கப் இஞ்சி டீயை தினமும் குடித்து வந்தால் வெர்டிகோ அறிகுறிகளை முற்றிலும் நீக்கிவிடும்


💊பாதாம் பால்


பாதாமில் வைட்டமின்கள் E மற்றும் B நிரம்பியுள்ளது. இதையும் அடிக்கடி சூடான பாலில் சேர்த்துக் குடித்தால் இந்த தலைசுற்றல், கிறுகிறுப்பை அதனால் ஏற்படும் வாந்தி போன்றவற்றை தவிர்க்கலாம்.


எனவே, பாதாம் பால் குடிப்பது நிச்சயம் வெர்டிகோவிற்கு சிறந்த மருத்துவமாக அமையும். வீட்டில் இருந்தவாரே வேர்டிகோ பிரச்சனையை போக்கும் இந்த எளிய வழி முறைகள் முலம் எளிதில் அனைத்து பிரச்சனைகளையும் தடுத்துவிடலாம்.


பாதாம் பருப்புகள் 7 / 8 எடுத்து அவற்றை 7 / 8 பரங்கி விதைகள், ஒரு தேக்கரண்டி கசகசா மூன்று மேஜை கரண்டி கோதுமை இவற்றுடன் கலந்து தண்ணீரில் ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் பாதாம் பருப்புகளின் தோலை நீக்கி விட்டு, எல்லாவற்றையும் நன்றாக, கூழாக அரைத்துக் கொள்ளவும். தனியாக 2 தேக்கரண்டி நெய்யில் 1/2 தேக்கரண்டி கிராம்பை போட்டு வறுக்கவும். இதனுடன் மேற்சொன்ன கூழை சேர்த்து சிறிது பால் விட்டு காய்ச்சவும். இந்த கலவையை சர்க்கரை சேர்த்து தினசரி சில நாட்களுக்கு குடித்து வரவும்.


💊தனியா, 5 கிராம், நெல்லிமுள்ளி (உலர்ந்த நெல்லிக்காய் துண்டுகள்), 5 கிராம் இவற்றை இரவில் ஊற வைத்து காலையில் வடிகட்டி சர்க்கரை சேர்த்து பருகவும். கொத்தமல்லி சாறும் நல்லது. கொத்தமல்லி சாற்றுடன் தேன் அல்லது மோர் கலந்து குடிக்கலாம்.


💊இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, சட்டியில் இட்டு வடிகட்டவும். நன்கு வதக்கிய பின் கொஞ்சம் தேனைச் சேர்த்து, வதக்கி, கொஞ்சம் நீரையும் சேர்த்து, சிறிது காய்ந்தவுடன் இறக்கி வடிகட்டி, வேளைக்கு ஒரு அவுன்ஸ் தினமும் 2 லிருந்து 3 வேளை குடித்து வந்தால் தலைச்சுற்றல் நிற்கும்.


💊அஜீரணத்தால் வரும் தலைச்சுற்றலுக்கு சுக்கு, தனியா, சீரகம் போட்டுக் காய்ச்சிய சுடுநீரை குடிப்பது நல்லது.நெல்லிக்காயை எடுத்து விதையை நீக்கி இடித்துச் சாறு எடுத்து ஒரு அவுன்ஸ் தினமும் சாப்பிட்டு வந்தால் தலை சுற்றல் குறையும்.


💊எலுமிச்சம் பழத் தோலுடன் (1), கொத்தவரங்காய் (4), புதினா (சிறிதளவு), வெற்றிலை (4) , இஞ்சி (1 துண்டு)  இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் காலையில் எழுந்தவுடன் உண்டாகும் தள்ளாட்டம், குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் குணமாகும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக்கொள்ளவும்


💊வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.


💊 அதிக இனிப்பு, அதிக உப்பு உள்ள எந்த உணவையும் உண்ணக்கூடாது, 


💊 ஜங்க்ஃபுட் அறவே தவிர்த்தாகவேண்டும். காபி, சாக்கெட்டை நிறுத்திவிட வேண்டும். 


💊 புகை, மது கூடவே கூடாது. 


💊 சிலருக்க பித்தத்தால் கூட தொடர் வாந்தி, மயக்கம், தலைசுற்றல் வரலாம். அதனால் துவர்ப்புச்சுவையுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். 


💊தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாலே பித்தம் தொடர்பான தலைசுற்றல் நின்றுபோகும், நெல்லிக்காய் சாதம் செய்துகூட சாப்பிடலாம். நல்ல பலன் கிட்டும்.


💊 கொத்தமல்லி விதையை கொதி நீரில் போட்டு ஊறவைத்து வடிகட்டி தினம் பருகினால் தலைசுற்றல் நிற்கும், கொத்தமல்லி துவையால், கறிவேப்பலை துவையலை தினமும் உணவுடன் சேர்த்து வர தலைசுற்றல் குறையும்.


💊 சீரகத்தை வெறும் வாயில் போட்டு மென்று அதன் சாரை விழுங்கினால் அதன் சாரை விழுங்கினால் நல்ல பலன் கிடைக்கும். 


 💊இஞ்சி சாறு தேன் கலந்து சாப்பிட்டால் வாந்தி, மயக்கம் நின்று தலைசுற்றல் நிற்கும். இஞ்சி மரப்பன் என்ற மிட்டாய்கூட இதற்கு மிக நல்லது. சுக்குகாப்பி இதற்கு சிறந்து மருந்து. 


💊 கொழுப்புசத்த உள்ள அசைவ உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். மீன், கோழிக்கறி நல்லது. மற்றப்படி உப்புக் கருவாடு, அப்பளம் போன்றவை கூடவே கூடாது. நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் அதிகம் சேர்ப்பது நல்லது. 


💊 படுக்கையைவிட்டு விசுக்கென்று எழாதீர்கள். முதலில் நன்றாக கண்ணைத் திறந்து பாருங்கள். பின்பு ஒரு பக்கமாக உடலைத் திருப்பி மெதுவாக எழுந்திருங்கம். இவ்வாறு செய்தால் தலைசுற்றல் குறையும். 


💊 இரவு நேரங்களில் 6 - 8 மணி நேரம் சீரான தூக்கம் அவசியம்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி