சிறு குறிஞ்சான்

 #சிறுகுறிஞ்சான் சர்க்கரைக்கொல்லி குரிந்தை என்றும் அழைப்பர்


( மூலிகை களஞ்சியம் )


( நீரிழிவு நோய்க்கு மருந்து தயார் செய்வதற்காக)


நமது அகத்தியர் குடிலில் சேகரிக்கப்பட்ட சிறுகுறிஞ்சான் சமூலம்  நீரிழிவுக்கான சூரணம் தயார் செய்வதற்கு சேகரிக்கப்பட்


🌿சிறுகுறிஞ்சான்  பயன்கள் 🌿


இதனை சர்க்கரை கொல்லி என்று கூறுவர் இதன் இலையும் வேரும் மருத்துவப் பயனுடையது பசியைத் தூண்டி சூட்டை தணிக்கும் உடலை உரமாக்கி தளர்ந்த நரம்புகளை கெட்டிப்படுத்திவிடும் சக்தி இதற்கு உண்டு உடம்பிலுள்ள சர்க்கரை நீரைப் பிரித்து விடும் விசேஷ சக்தி இதற்கு உண்டு விஷங்களை முறிக்கும் மேலும் வாந்தியை உண்டாக்கும்


நாவரட்சியுடன் காணும் காய்ச்சலுக்கு இதன் இலையுடன் மிளகு சீரகம் சேர்த்து கசாயத்தை 10 நிமிடத்திற்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட குணமாகும் பத்துகிராம் இலையுடன் 20 கிராம் களா இலையை சேர்த்து அரைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட உதிரச் சிக்கல் நீங்கும் குறித்த நேரப்படி ருது உண்டாகுவதுடன் கருப்பாசய கோளாறுகள் நீங்கும்


நீரிழிவு நோய் கட்டுப்பட இதன் இலைகளை அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும் இதன் இரண்டு மடங்கு அளவு தென்னம் பாளையில் உள்ளிருக்கும் பூவை நிறுத்து எடுத்து அதையும் அரைத்துக் கொள்ள வேண்டும் பின்பு இரண்டையும் நன்கு கலந்து சிறு மாத்திரைகளாக செய்து நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் இதை காலை ஒன்றும் மாலை ஒன்றும் வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடிக்க சர்க்கரை நீரில் காணாது கட்டுப்படும்


இலையை காயவைத்து அரைத்து அதனுடன் சம அளவு நாவல் கொட்டையை காயவைத்து இடித்து கலந்து 40 நாட்கள் தொடர்ந்து காலை மாலை இருவேளையும் தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடிக்க நீரிழிவு நோய் குணமாகும்


வேரை காயவைத்து பொடித்து மூன்று சிட்டிகை வீதம் சாப்பிட எந்த விஷக்கடிக்கும் உள்ளுக்கு சாப்பிட வாந்தியுடன் விஷம் வெளியேறும்


சுவாசகாசம் என்ற நுரையீரலில் சளி சேர்ந்து மூச்சுவிடக் கஷ்டப்படுத்தலுக்கு இதன் வேர் தூள் ஒரு சிட்டிகை சுக்கு மிளகு திப்பிலி பொடி ஒரு சிட்டிகை கலந்து இரண்டும் வாயிலிட்டு வெந்நீர் அருந்த கபம் எல்லாம் வெளியாகும்


குருவே துணை


அகத்தியர் குடில்

Comments

Popular posts from this blog

விந்து சக்தி

சித்தாதி எண்ணெய்

இடு மருந்து