வரகு அரிசி பயன்

 வரகு அரிசியின் மருத்துவ நன்மைகள்


1.நீரிழிவு நோய்


வரகு அரிசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி அதை சரியான அளவுடன் பராமரிக்கிறது. வரகு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினமும் அல்லது இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது சாப்பிடும் நபர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வருகிறது.

 

2.உடல் எடை


உடல் எடை அதிகம் இருப்பவர்கள் வரகு அரிசி எடுத்துக் கொள்ளும் போது அவர்களுடைய உடல் பருமனை குறைக்கிறது. மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. கண்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.


3.உடல் ஆரோக்கியம்


வரகு அரிசி கோதுமையை விட சிறந்தது. இதில் உள்ள நார்ச்சத்து அரிசி மற்றும் கோதுமையில் இருப்பதை விட அதிக அளவில் உள்ளது. வரகு அரிசியில் மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால் இது உடல் ஆரோக்கியம் பெற உதவுகிறது.


4.உடலுக்கு சக்தி கொடுக்கும்


தானியங்களுடன் ஒப்பிடும்போது வரகு அரிசி அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும், புரதச் சத்து மற்றும் தாது உப்புக்களை கொண்டதாகவும் இருக்கிறது. வரகு அரிசியில் புரத சத்து அதிக அளவில் உள்ளது. உடல் பலவீனமாக இருப்பவர்கள், உடல் எடை மிகவும் குறைந்து காணப்படுபவர்கள் வரகு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிட்டு வந்தால் அவர்களுடைய உடல் சக்தியானது அதிகரிக்கும்.


5.மாதவிடாய்

மாதவிடாய் கோளாறுகளால் அதிக அளவு பாதிப்பை சந்திக்க கூடிய பெண்கள் வரகு அரிசியை சமைத்து சாப்பிடும் போது இரத்தப்போக்கு சீரடையும். அதுபோல அவர்களுடைய வயிற்றுவலியும் குறையும்.

 

6.மலச்சிக்கல்


வரகு அரிசி மலச்சிக்கலை குறைத்து மலம் எளிதாக வெளியேற செய்யும் தன்மை கொண்டது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை வரகு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால், வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் புண் ஆறுவது மட்டுமின்றி மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும். எளிதில் கிடைக்கக்கூடிய விலை குறைவான இந்த வரகரிசியை நீங்கள் அடிக்கடி உங்கள் உணவு பட்டியலில் சேர்த்து உடல் ஆரோக்கிய நன்மைகளை பெறுங்கள்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி