ஆரோக்கிய உணவு மருந்து

 இது மருந்தல்ல  

          மாபெரும் விருந்து


மருத்துவ குணத்தை தருகின்ற பத்தியம் இல்லாத உணவு முறைகள்


    ஒரு மாதுளம் பழத்தின் முத்துக்களும் அதே அளவு துருவிய தேங்காயும் கலந்து தினந்தோறும் சாப்பிட்டு வருவதால் நமது உடலுக்கு அனைத்து சத்துகளும் இதனால் கிடைக்கின்றது

  

      நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியம் கிடைப்பதற்கு இதுவே முதன்மையான உணவாக இருப்பதாக சித்தர்களின் பாடல்கள் கூறுகின்றன


  தேங்காயும் வாழைப்பழமும் ஒன்றாக கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு களைப்பு உடல் சோர்வு ஏற்படுவதில்லை


  இதனால்தான் விரதம் இருப்பவருக்கு விரதம் முடிந்தவுடன் இதை முதல் உணவாக தருகிறார்கள் என்பது நினைவில் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது 


  தேங்காயுடன் மரவள்ளி கிழங்கு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைப்பதுடன் உடலுக்கு நல்ல வலிமையும் கிடைக்கின்றது


  மைதாவில் தயாரிக்கின்ற பிஸ்கட் மற்றும் ரொட்டி வகைகளை உண்பதால் குடலில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படுகிறது இதனால் அஜீரண கோளாறுகள் உண்டாகின்றன


    எனவே இதற்கு பதிலாக எளிதாக கிடைக்கின்ற பப்பாளி பழம் கொய்யா பழம் அத்திப்பழம் பேரீச்சை பழங்களை சாப்பிடலாம் இதனால் உடலுக்கு ஆரோக்கியமும்  நோய் எதிர்ப்பு சக்தியும் எளிதாக கிடைத்துவிடும்


   அத்தியாவசியம் இல்லாத டீ காபி இவைகளை சாப்பிட்டால் இதனால் குடலில் ஒரு மந்தத்தன்மை உண்டாக்கி விடுகின்றது எனவே உடலில் பல நோய்கள் உண்டாவதற்கு இதுவே முதல் காரணமாகவும் அமைகின்றது 


   இதற்குப் பதிலாக முருங்கை கீரை கறிவேப்பிலை கீரை போன்ற எளிதாகக் கிடைக்கின்ற கீரைகளை  வைத்து சூப்பாக செய்து சாப்பிட்டால் உடலுக்கு செரிமான சக்தி கிடைக்கின்றது இதன் மூலம் மேலும் நமக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் உண்டாகின்றது


    உணவு சாப்பிட்டு முடித்தவுடன் விருப்ப உணவாக மரவள்ளி கிழங்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கு முத்து சோளம் பச்சைக் கடலை இவைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் சத்து பற்றாக்குறை எப்பொழுதும் ஏற்படாது 


  சின்ன வெங்காயம் தேங்காய் இரண்டையும் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை உண்டாகும் விந்து உற்பத்தி அதிகரிக்கும் 


இதை பச்சையாக சாப்பிட முடியாதவர்கள் சிறிதளவு எண்ணெய்விட்டு இதனோடு பூண்டும் சேர்த்து வதக்கி சாப்பிட்டால் உடல் வலிமை உண்டாகும் உடலில் இருக்கின்ற வலிகள் அனைத்தும் போகும் உடல் உறுப்புகளுக்கு சக்தியை தருகின்ற நல்ல உணவு இது


  இரண்டு வெற்றிலையில் தேன் தடவி இதனோடு ஐந்து அல்லது ஏழு மிளகு வைத்து மடித்து இதை மென்று விழுங்கி வந்தால் உடலுக்கு அளவில்லாத புத்துணர்ச்சி உடனே உண்டாகும்


  நமக்கு முன்னால் வாழ்ந்த   அரச குடும்பத்தை சார்ந்த ஆண்கள் அனைவரும் இளமையை நீட்டிப்பதற்காகவும் ஆண்மை சக்தியை முழுமையாக பெறுவதற்காகவும் உணவு உண்வுடன் இந்த வெற்றிலை வைத்திய முறையை வழக்கமாக கடைப்பிடித்து வந்ததற்கான சான்றுகள் நிறைய இருக்கின்றன இந்த வைத்திய முறைக்கு ராஜ வைத்திய முறை என்று  அக்கால மருத்துவ வல்லுநர்கள் பெயர் வைத்துள்ளார்கள் அந்த அளவிற்கு பெருமை வாய்ந்த மருத்துவ முறை இது


   இரண்டு ஸ்பூன் இஞ்சி சாறு இதே அளவு தேன் கலந்து காலை வேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பு உண்டாகும் இதைப் பயன்படுத்தி வருபவருக்கு கை கால் வலிகள் மற்றும் கை கால் முடக்கம் போன்ற வாதநோய்கள் எப்பொழுதும் வராது பத்தியம் இல்லை


  மூன்று கிராம் சுக்குப் பொடி இதே அளவு பனை வெல்லம் இவை இரண்டையும் கலந்து தொடர்ந்து மதிய வேளையில் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணத்தால் ஏற்படுகின்ற பித்த நோய்கள் அனைத்தும் நீங்கிவிடும் இவர்களுக்கு வாயுத் தொந்தரவு வயிற்று உப்புசம் அஜீரணம் மந்தம் போன்ற குடல் சார்ந்த நோய்கள் அனைத்தும் நிரந்தரமாக நீங்கி விடும் இவர்கள் உடலில் பித்த நோய்கள் எப்பொழுதும் தோன்றாது  பத்தியம் இல்லை


    ஐந்து கிராம் கடுக்காய் பொடியை தினந்தோறும் இரவு வேளையில் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் இவர்கள் உடலில் சிலேத்தும நோய்கள் அனைத்தும் நீங்கிவிடும் வயது முதிர்வின் காரணமாக வருகின்ற மலச்சிக்கல் சர்க்கரை நோயாளிகளின் மலச்சிக்கல் அஜீரணக் கோளாறு மற்றும் குடல் சார்ந்த நோய்களினால் வருகின்ற மலச்சிக்கல் அனைத்தும் சர்வ சாதாரணமாக நீங்கிவிடும் மொத்தத்தில் உடல் ஊனமுற்றவருக்கு ஊன்றுகோல் எப்படி உதவுகிறதோ அதைப்போல நோயாளிகளுக்கு இந்த கடுக்காய் ஒரு கைத்தடியாக உதவும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை இதற்கும் பத்தியம் இல்லை பக்கவிளைவுகளும் இல்லை


  சத்துப் பற்றாக்குறை இருப்பவர்கள் உடல் மெலிந்தவர்கள் அனைவரும்  வேர்க்கடலை எள் இதனோடு தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைப்பதோடு  மெலிந்த உடலில் தசை பிடிக்கும் உடலில் ஒரு மினுமினுப்பு உண்டாகும்


   கோபுரம் தாங்கி மூலிகை சூரணத்துடன் தேன் கலந்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு உறுதி உண்டாகும் அதாவது எலும்புக்கும் தசைக்கும் இடையே இருக்கின்ற பிணைப்பின் தளர்வு நீங்கி உடல் உறுதி பெறும் 


எலும்புகள் வலிமை பெறும்

தசைகள் இறுகி உறுதியாகும் 

உடல் உறுப்புகள் அனைத்திற்கும் வலிமை கிடைக்கும் 


மொத்தத்தில் ஆரோக்கியமான வாழ்விற்கு ஒரு அற்புதமான மருந்து இது


நன்றி 

பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி