மார்பக புற்றுநோய் தகவல்
#பெண்களுக்கு_வரக்கூடிய #புற்று_நோய்கள்_அறிகுறிகள்…❓❗
👉பெண்ணுருப்பு புற்று நோய்கள் Gynecological Cancers
புற்றுநோய் இது எந்த வயதிலும் ஏற்படலாம்எனினும் ,அதிகளவில் நடுத்தரவயதினரிடையேயும் வயதானவர்களிடையேயும் பொதுவாக வரலாம்.
⭕பெண்களுக்கு வரக்கூடிய புற்று நோய்வகைகள் என்ன❓
👉மார்பக புற்று நோய் – Breast Cancer,
👉கருப்பை கழுத்து புற்று நோய் – Cervical Cancer,
👉சினைப்பை [ சூலகப்] புற்று நோய் – Ovarian cancer
👉கருப்பைச்சுவர் புற்று நோய் – Endometrial Cancer
👉கருப்பை கழுத்து புற்று நோய் -
Cervical Cancer
இது கருப்பையின் வாயில் ஏற்படும் புற்றுநோயாகும். கருப்பை கழுத்து, கருப்பையின்கீழ்பாகத்தில் காணப்படும்.இது மெதுவாக வளரும் ஒரு புற்று நோயாகும்.
எனவே அறிகுறிகள் காணப்படாது.
ஆனல்,PAPபரிசோதனை மூலம் இதனை முன்கூட்டிஅறியலாம்.
⭕ யாரை தாக்கலாம்❓
👉HPV எனும் வைரஸ் நோய், இதில்HPV 16/18 கருப்பை கழுத்து புற்றுநோயுடன் தொடர்புள்ளதாககாட்டப்பட்டுள்ளது.
👉உடலுறவின் மூலம் பரவும் தொற்றுநோய்கள் STI காணப்படுதல்.
👉முன்கூட்டியே உடலுறவில்ஈடுபடுவோர் ( வயது 20க்கும் குறைவு)
👉பல உடலுறவு துணைகள் Multi Sexual Partners.
👉புகைத்தல். Smoking
👉நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்.-
Low Immunity
❌ பொதுவான அறிகுறிகள் –❓
Common Symptoms❓
☀உடலுறவின் பின் யோனி வழியாக இரத்தம் வருதல்- Bleeding after Sexual Intercourse.
☀யோனி வெளியேற்றம் –அதிகமாக,இரத்தம்கலந்த,மணமுடைய
☀மாதவிடாய் இடையே – இரத்தம்வெளியேறுதல் – Vaginal Discharges with foul smell,
☀மாதவிடாய் நிறுத்தத்தின் பின் குருதிபெருக்கு.- Post menopausal Bleeding
⭕ கருப்பை கழுத்து புற்று நோய் எவ்வாறு கண்டுபிடிப்பது❓
✨PAP ஸ்மியர் பரிசோதனை.
✨ Colposcopy [கருப்பை கழுத்தைபெரிதாக்கி காட்டும்]
✨Cervical biopsy [கருப்பை கழுத்துநுன் சதை பரிசோதனை]
⭕ யாரை தாக்கலாம்❓
💔50 வயதினை தாண்டியவர்கள்.
💔குடும்பத்தில் மார்பக, சூலக அல்லது பெருங்குடல் புற்று நோய் உள்ளவர்கள்.
💔 முன்கூட்டி பூப்படைதல்,காலதாமதமான மாதவிடாய்நிறுத்தம்.
💔 பிள்ளை பேறற்ற பெண் அல்லதுமுதல் பிள்ளை கிடைக்கும் போதுவயது >30
💔 அதிகளவிலான கொழுப்பு ,குறைவான நார் உணவுகள்.
❓அறிகுறிகள்❓
சூலகப் (சினைப்பை) புற்றுநோய் அறிகுறிகள் முன்கூட்டி அறிவது கடினமாகும்.
♋ பொதுவானவை❗❗
🔈வயிற்று பகுதியில் கட்டி. Mass in abdomen,
🔈வயிறு பெருத்தல். Abdominal Enlargement
🔈வயிற்று சுற்றளவு அதிகரித்தல். Increasing Waist size
🔈எடை குறைதல்.- Lowering Weight,
🔈அதிக தடவை சிறுநீர் கழித்தல்,
🔈தன்னிச்சையாக சிறுநீர் -வெளியேறுதல். Frequent or Involuntary Urination,
🔈வயிற்று வலி. Abdominal Pain
🔈பின்புற வலி. Back Ache,
இவ்வாறான நோய் அறிகுறிகள் வேறுநோய்களுக்கும் பொதுவானது என்பதால் புற்று நோய் என ஊர்ஜிதப்படுத்துவது கடினமாகும்.
🔴 எவ்வாறு கண்டு பிடிப்பது❓
🔑சாதாரனமாக மருத்துவர்பரிசோதிக்கும் போது, கட்டிகண்டுபிடிக்கப்படலாம்;
🔑அல்லது வயிற்று பகுதி ஸ்கேன்செய்யும் போது கண்டுபிடிக்கப்படலாம்.
🔑எல்லா கட்டிகளும் புற்று நோய் அல்ல.
🔑அறுவை சிகிச்சையின் போது எடுக்கப்படும் நுன்சதை பரிசோதனையே சூலகப்புற்றுநோயை ஊர்ஜிதப்படுத்தும்.
🔑CA-125 எனும் குருதி பரிசோதனைசெய்யலாம்;
⭕கருப்பை சுவர் புற்று நோய் -❓ Endometrial cancer❓
இது கருப்பை சுவர் செல்களின் அசாதாரணவளர்ச்சியால் ஏற்படும்.
இது 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களிலேபொதுவாக ஏற்படும்.
இது முன்கூட்டியேகண்டு பிடிக்கப்பட்டால் குணமடையலாம். இப்புற்றுநோய் அதிகம் பரவுவதற்கு முன்கண்டு பிடிக்கப்படும்.
🔴சாத்தியக்கூறு மிகுந்தவர்கள்❗❗
☀வயது >50
☀கருப்பை சுவர் புற்றுநோய் குடும்பபின்னனி – Heriditory Endometrial cancer,
☀தாமாதமான மாதவிடாய் நிறுத்தம் – Delayed Menopause
☀முன்கூட்டிய பூப்படைதல் –
Early Puberty
☀பிள்ளை பேறற்ற பெண்கள்
Nullipara Womens -
☀ஹார்மோன் சிகிச்சை பெற்றவர்கள் –Hormone Medications,
☀அதிக பருமன் – Over Weight
☀உயர் கொழுப்பு உணவுகள் – High Fatty food intake,
⭕ அறிகுறிகள்❓
⚡மாதவிடாய் நிறுத்தத்தின் பின் இரத்தம்வெளியேறுதல். – post Menopausal Bleeding,
⚡இரு மாதவிடாய் சுழற்சிகளிடையேஇரத்தம் வெளியேற்றம். Intermittent Bleeding between the menses cycles
⚡கருப்பை சுவர்புற்று நோய் எவ்வாறுகண்டுபிடிப்பது
⚡அசாதரண யோனி இரத்தவெளியேற்றம் சம்பந்தமானபரிசோதனைகள்,.
⚡ ஸ்கேன் செய்து கருப்பை சுவரின்தடிப்பு, மற்றும் நிலை அறியப்படும்
⚡Pipel’s biopsy
⚡ Dilation and Curettage D& C
⭕ மார்பக புற்று நோய் Breast Cancer
என்றால் என்ன❓
மார்பக செல்கள் கட்டுப்பாடு இன்றிவளர்ச்சியடைதல். இது பால்சுரப்பிகளையும் அணுக்களையும்பாதிக்கலாம்.ஆண், பெண் இருபாலுக்கும்ஏற்படலாம். ஆண்களுக்கு வரும் வாய்ப்புமிக குறைவு.
❓யாருக்கு வரலாம்
🌟மாதவிடாய் நிறுத்தத்தின் பின் உடல் பருமன் அதிகரித்தல்.
🌟 மாதவிடாய் நிறுத்தத்தின் முன்ஈஸ்ட்ரஜன் சூலகத்தில் சுரக்கப்படும். ஈஸ்ட்ரஜன் அதிகரித்தல் மார்பகபுற்று நோய் வாய்ப்பை அதிகரிக்கும்.
🌟 உணவு – அதிக கொழுப்பு உணவுகள்,
🌟 அதிக மாமிச உணவுகள் மார்பக புற்றுநோயை அதிகரிக்கலாம்.
🌟 மது அருந்துதல்-ஆராய்ச்சிகள் மூலம்மது அருந்துதல், மார்பக புற்றுநோயும் அதிகரிப்பதாக முடிவுகள்காணப்பட்டுள்ளன.
🌟 புகைத்தல் – மார்பக புற்று நோய்ஏற்பட சிறிய ஒரு சாத்தியக்கூறுஉள்ளது.
🌟 ஈஸ்ட்ரஜன் – பெண்ணின்ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் மார்பககலங்களின் வளர்ச்சியைதூண்டுவதால் வாய்ப்பு அதிகரிக்கும்.
🌟 குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள்அதிக காலம் (>10 வருடம்)சாப்பிட்டாலும் மார்பக புற்று நோய்சாத்திய கூற்றை அதிகரிக்கும்.
🌟 பிள்ளை பேறற்ற பெண்
🌟 தாய்ப்பாலூட்டாத பெண்
❓உங்களால் கட்டுப்படுத்தமுடியாத கரணிகள்:
📢 வயது – அதிகரிக்க சாத்திய கூறு அதிகரிக்கும். மாதவிடாய்நிறுத்தத்திற்கு முன் புற்று நோய் ஏற்படுவது குறைவு.
📢 மார்பக புற்று நோய் ஒரு முறை ஏற்பட்டிருத்தல் – இது சாத்தியகூற்றை அதிகரிக்கும்.
📢 குடும்பத்தில் மார்பக புற்று நோய்காணப்படுதல் . தாய், சகோதரி அல்லது மகளுக்கு புற்று நோய் ஏற்பட்டிருந்தால் – இது சாத்தியகூறு அதிகம். 40 வயதிற்கு முன் ஏற்பட்டிருந்தால் சாத்திய கூறுகள் மேலும் அதிகரிக்கும்.
📢 பிறப்புரிமை அணுக்களில் மாற்றங்கள்– BRCA1,BRCA2 எனும் பிறப்புரிமைஅணுக்களில் ஏற்படும் மாற்றங்களே மார்பக புற்று நோய்க்கு காரணம்.
📢 இனப்பெருக்கம் மற்றும் மாதவிடாய் –முன் கூட்டி பூப்படைதல் மூலம்அதிக மாதவிடாய் சக்கரங்கள்ஏற்படும். எனவே ஈஸ்ட்ரஜன் மார்பககலங்களை தூண்டும் காலம் அதிகரிக்கும். இது புற்று நோய்க்கானசாத்திய கூற்றை அதிகரிக்கும்.
📢 12 வயதிலும் குறைந்த பெண்பூப்படைதலும் ,55 வயதிற்கு பின்மாதவிடாய் நிறுத்தமும் ஏற்பட்டால்மார்பக புற்று நோய்க்கான சாத்தியகூறுகள் அதிகம்.
❓அறிகுறிகள்
ஆரம்பத்தில் எந்தவொரு அறிகுறியையும்ஏற்படுத்தாது. X-ரே படம் பிடித்தலின் போது அல்லது ஸ்கேன் செய்யும் போதுதற் செயலாக கண்டுபிடிக்கப்படலாம்.
👉மார்பக கட்டி – Mass in Breast
👉மார்பக வீக்கம் – Swelling in Breast
👉தோலில் வலி – Pain in Shoulder.
👉மார்பக வலி – Pain in Breast
👉மார்பக காம்பில் வலி அல்லதுமாற்றம் – Pain or Changes in Nipples
👉மார்பக காம்பிலிருந்து வெளியேற்றம்– Discharges from Nipples,
👉அக்குள் பகுதியில் கட்டி – Mass in Auxiliary Region
இவை மார்பக புற்று நோய் அல்லாத நிலைமைகளிலும் ஏற்படலாம். எனவே ,இவ்வாறான மாற்றங்கள் ஏற்படும் எனின் உடன் ஒரு மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.
❗முன்கூட்டி அறிதல்❗
🌟மார்பக புற்று நோயை முன்கூட்டி அறிதலின் மூலம் , அதைகுணமடையச் செய்யலாம். இது மார்பக அகற்று சிகிச்சையிலிருந்து பாதுகாக்கும்.
🌟பெண்களுக்கு தன் மார்பகங்களை தானேபரிசோதித்தல் மூலம் கட்டிகளை முன்கூட்டியே அறியலாம்.
🌟மம்மோகிராம் Mammogram – இதுமார்பகத்தின் X – கதிர்படமாகும்.இவை வருடத்திற்கு ஒரு முறை செய்யப்படுவது நல்லது.இது பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்டோர் மீது செய்யப்படும், இதுபாது காப்பானது மற்றும் நம்பதகுந்தது .
👉அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்(USG)
👉 தற்பரிசோதனை ( Self Examination)
👉சுய மார்பக பரிசோதனை ( Self Breast Examination)
⭐ மாதத்திற்கு ஒரு முறையாவது,தற்பரிசோதனை செய்து வரவேண்டும். மாதவிடாய் முடிவடைந்து சில நாட்களில் தற்பரிசோதனை செய்வது உகந்தது.
⭐கண்ணாடி முன் நின்று உங்கள்மார்பகங்களை பார்க்கவும். தோள்கள்நேராகவும் கைகள் இடுப்பிலும்இருக்க வேண்டும்
⭐இப்போது, மார்பக பருமனில் அல்லதுவடிவத்தில் ஏற்பட்டுள்ளமாற்றங்கள், நிற மாற்றங்கள்,வீக்கம், மார்பக காம்பில் மாற்றங்கள்இருக்கிறதா என்பதைகவணிக்கவேண்டும்.
⭐ கைகளை தலைக்கு மேலாக தூக்கி,மார்பக தோலில் மாற்றங்கள்ஏற்படுகின்றதா என பார்க்கவேண்டும்
⭐ இப்போது, மார்பகங்களை முதலில்நின்ற நிலையில் அல்லதுஉட்கார்ந்த நிலையில் பரிசோதிக்கவேண்டும், இடப்புற மார்பகம் வலதுகையினாலும் வலப்புற மார்பகம்இடக்கையினாலும் பரிசோதிக்கவேண்டும்.
⭐ மார்பக காம்பில் ஆரம்பித்து, பின்வட்டமாக வெளி எல்லை வரைசெல்ல வேண்டும்.
பின் அக்குள் பகுதி பரிசோதிக்கப்படவேண்டும்.
⭐ மார்பக காம்பு அழுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட வேண்டும்.
Comments
Post a Comment